ilakkiyainfo

‘கடாபியின் தோளில் நான் கைபோடவில்லை’ – ‘கடா­பி­யே எனது தோளில் கையை வைத்­தி­ருந்தார்!!

 

தாம் லிபிய அதிபராக இருந்த முவம்மர் கடாபியின் தோளில் கைபோடவில்லை என்றும், அவர் தனது தோளில் கைபோட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார் சி்றிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

அனைத்துலக சமூகத்தினால் ஓரம்கட்டப்பட்ட கடாபியின் தோளில் கைபோட்டுக் கொண்டு ஒளிப்படம் எடுத்தவர்களால், அனைத்துலக ரீதியாக சிறிலங்கா தனிமைப்படுத்தப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“லிபிய அதிபர் முவம்மர் கடாபியின் தோளில் கையைப் போட்டிருந்ததால் தான், மேற்குலக நாடுகள் சிறிலங்காவுடன் விலகியிருந்தன என சிலர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கூறப்படும் ஒளிப்படத்தில், எனது தோளில் தான் கடாபி கைபோட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு போரின் இறுதி மாதங்களில், சிறிலங்காவின் வெளிநாட்டு நிதிக் கையிருப்பு வேகமாக கரைந்து போனது.

நிதியை வழங்குவதை இழுத்தடிக்குமாறு மேற்குலக நாடுகள், அனைத்துலக நாணய நிதியத்துக்கு அழுத்தம் கொடுத்தன.

அப்போது எனது ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்றுக் கொண்டு, சிறிலங்காவுக்கு 500 மில்லியன் டொலரை முவம்மர் கடாபி வழங்கினார்.

அப்போது அந்த உதவி கிடைத்திராது போயிருந்தால், போர் வெற்றி கொள்ளப்படுவதற்கு முன்னர், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கும்.

போரை நிறுத்துவது குறித்து பேச்சு நடத்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எட் மில்லிபான்டும், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கோச்னரும், சிறிலங்கா வந்த போது எம்பிலிப்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மரவள்ளிக்கிழங்கை சாப்பிடக் கொடுத்து அனுப்பினோம் என்றும் கூறினர்.

போரின் இறுதிக்கட்டத்தில், இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு எனக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வருகை தந்த பிரித்தானிய, பிரெஞ்சு அமைச்சர்களுக்கு என்ன உணவு வழங்கப்பட்டது என்பது எனக்குத் தற்போது ஞாபகத்தில் இல்லை.

ஆனால், போரை நிறுத்துவதற்கு நான் மறுத்தேன் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

வெளிநாட்டின் துன்பங்களுக்கு நான் அடிபணியாததால் தான், நாம் இன்று பயங்கரவாதம் இல்லாத நாட்டில் வாழ்கின்றோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்க பிரே­ரணை எந்த வாக்­கெ­டுப்­பு­மின்றி ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது இரா­ஜ­தந்­திர வெற்றி என்­ப­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

 

ஜெனிவா தீர்­மானம் தொடர்பில் அவர் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள­தா­வது,

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்க பிரே­ரணை எந்த வாக்­கெ­டுப்­பு­மின்றி ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது இரா­ஜ­தந்­திர வெற்றி என்­ப­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

சர்­வ­தேச சட்­ட­வல்­லு­னர்­களின் கண்­கா­ணிப்பில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக பொறி­மு­றைக்கு வெளிநாடுகளின் நிதி உத­வியே கிடைக்­க­பெ­ற­வுள்­ளது.

இதனால் இலங்­கையின் பொறி­முறை சர்­வ­தேச பல­மிக்க நாடு­களின் நிதி­யினால் முன்­னெ­டுக்க வேண்டியேற்படும்.

ஆக்­கி­ர­மிப்­பாளர் பிடி­யி­லி­ருந்து இலங்­கையை காப்­பாற்­றி­யுள்­ள­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பதா­கைகள் தொங்­க­வி­டப்­பட்­டுள்­ளன. எனினும் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்­திற்கும் எந்தவொரு சம்­பந்­தமும் கிடை­யாது.

அமெ­ரிக்­கா­வுடன் இணைந்து தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­மையின் ஊடாக இலங்­கைக்கு எந்­த­வொரு நலனும் கிடைக்­க­பெற போவ­தில்லை.

இதனால் இலங்­கைக்கு பாதிப்பு ஏற்­படும் என்­ப­த­னையோ அல்­லது அர­சியல் ரீதி­யாக சாத்­தி­ய­மற்­றது என்பதனை புரிந்­து­கொள்­ளாமல் அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது.

நாட்டில் பாது­காப்­பிற்கு உறு­து­ணை­யாக உள்ள இரா­ணுவ வீரர்­களை பாது­காக்க வேண்­டி­யதே அர­சாங்­கத்தின் பிர­தான கட­மை­யாகும்.

அமெ­ரிக்கா பிரே­ர­ணையின் 6 மற்றும் எட்­டா­வது பரிந்­து­ரைகள் புனி­த­மான பொறுப்புளுக்கு எதி­ரா­ன­தாகும்.

மேலும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் மீன் இறக்­கு­ம­திக்கு தடை விதிக்­கப்­பட்­டமை அர­சியலை மைய­மாக கொண்டு இடம்­பெற்­ற­தல்ல.

அது சமுத்­திர ரீதி­யான ஏற்­பட்ட பிரச்­சினை என்­ப­தனை மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை என்­பது அர­சியல் ரீதி­யான நிபந்­த­னையை மைய­மாக கொண்ட சலு­கை­யாகும்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் நிக­ழ்ச்சி நிரலை இலங்­கையின் மீது சுமத்தும் திட்­டத்தை மைய­மாக கொண்டே குறித்த சலு­கையை மீளப்­பெ­று­வ­தற்கு என்­னு­டைய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

சர்­வ­ஜன வாக்­கு­ரி­மையின் ஊடாக மக்கள் அரசாங்கத்தை நிறுவியது நாட்டிற்கு ஏற்ற தீர்மானங்களை எடுப்பதற்கு என்பதனை மறந்துவிடக்கூடாது .

நான் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் கடாபியின் தோளில் கையை வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

எனினும் இது தொடர்பில் பிரபலமான அந்த புகைப்படத்தில் எனது தோளில் கடாபிதான் கையை வைத்திருந்தார்.

பரிந்­து­ரை­களை நிறை­வேற்­றா­விடின் ஐ.நா.வெறுமனே இருந்துவிடாது- எச்­ச­ரிக்கை விடுக்­கின்­றது ஜே.வி.பி.

jvp

ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் நட்­பு­ரீ­தியில் உற­வா­டு­வதன் கார­ண­மாக அனைத்­தையும் சாதிக்க முடியும் என அரசாங்கம் கன­வு­காணக் கூடாது.

ஐக்­கிய நாடுகள் சபையின் பரிந்­து­ரை­களை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தா­விடின் நிலை­மைகள் மிகமோசமா­ன­தாக அமையும் என்­பதை அன்­பாக ஐ.நா.வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.

யுத்தம் முடி­வ­டைந்­த­போதே வடக்கின் பக்கம் மஹிந்த ராஜபக் ஷ திரும்­பிப்­பார்த்­தி­ருந்தால் இன்று இவ்­வ­ளவு மோச­மா­ன­தொரு நிலைமை எமக்கு ஏற்­பட்­டி­ருக்­காது. உட­ன­டி­யாக தீர்க்­க­வேண்­டிய தமிழ் மக்­களின் பிரச்சினைகளை காலம் கடத்தி கொண்­டு­சென்­ற­மையே இத்­த­னைக்கும் கார­ண­மாகும் எனவும் அவர்கள் வலியுறுத்­தினார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் நடை­பெற்­ற­போதே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்

ஐ.நா. பேர­வை­யுடன் நட்பு ரீதியில் செயற்­ப­டு­வ­தனால் எம்மால் அனைத்து பிரச்­சி­னை­க­ளையும் சமா­ளிக்­கலாம் என்று நினைப்­பது தவ­றா­ன­தாகும்.

அவ்­வாறு ஒரு எண்­ணத்தில் இருந்து எதையும் சாதிக்க முடி­யாது. பிர­தமர் ரணிலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரியும் ஐக்­கிய நாடு­களின் நம்­பிக்­கையை வென்­ற­தனால் இலங்­கையின் மீதான அழுத்­தங்கள் குறை­வ­டைந்­துள்­ள­தாக கொண்­டா­டு­கின்­றனர்.

ஆனால் இவை தொடர்ந்தும் நிலைக்­கப்­போ­வ­தில்லை. நட்பு ரீதியில் எந்­தப்­பி­ரச்­சி­னைக்கும் தீர்வை எட்ட முடியாது.

ஐ.நாவின் நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­யவே அவர்­களின் அனைத்து செயற்­பா­டு­களும் அமையும். அதை எமது அர­சாங்கம் விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

ஐக்­கிய நாடுகள் சபையின் அறிக்கை எதிர்­பார்த்­ததை விடவும் அழுத்தம் குறைந்து வந்­துள்­ள­மை­யினால் நாம் சாதித்­து­விட்­ட­தாக கூறு­கின்­றனர்.

ஆனால் இவர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளதை குறு­கிய காலத்­துக்குள் செயற்­ப­டுத்­தா­விடின் நிலைமை மிக மோசமான­தாக அமையும்.

அதேபோல் சர்­வ­தே­சத்தின் தலை­யீடு எமது நாட்­டுக்கு வரக்­கூ­டா­தெனின் இலங்­கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்­வ­தேசக் கத­வு­களை மூட வேண்டும்.

இலங்கை மீதான அழுத்­தங்­களில் இருந்து நாம் தப்­பிக்க வேண்­டு­மாயின் முதலில் இலங்­கையில் மனித உரிமை செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்த வேண்டும்.

இலங்கை வாழ் மக்கள் அனை­வரின் உரி­மை­க­ளையும் சம அளவில் பலப்­ப­டுத்த வேண்டும். இலங்­கையில் நம்­பத்­த­குந்த வகையில் சட்­ட­திட்­டங்­களை பலப்­ப­டுத்­த­வேண்டும்.

அதேபோல் இலங்­கையில் அனைத்து மக்­களும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய வகையில் நம்­பத்­த­குந்த வகையில் நீதி செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

எமது நாட்டில் மனித உரி­மை­களை பலப்­ப­டுத்­து­வது தொடர்பில் ஐக்­கிய நாடுகள் கற்­பிக்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை.

உல­க­ளா­விய ரீதியில் மனித உரி­மை­களை மீறி­ய­வர்கள் எமக்கு மனித உரி­மை­களை கற்­பிப்­பது வேடிக்­கை­யான விட­ய­மே­யாகும்.

ஆனால் எம்­மீதும் தவ­றுகள் இல்­லா­மலும் இல்லை. கடந்த காலங்­களில் இலங்­கையில் மிக மோச­மான அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றன.

மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வந்­ததை மட்­டுமே பேசு­வதில் எந்த அர்த்­தமும் இல்லை.

அதன் பின்னர் இங்கு நடை­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும் கவ­னத்தில் கொண்­டி­ருக்க வேண்டும். ஆகவே கடந்த காலத்தில் இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

யுத்தம் முடி­வ­டைந்­த­போதே வடக்கின் பக்கம் மஹிந்த ராஜபக் ஷ திரும்­பிப்­பாத்­தி­ருந்தால் இன்று இவ்­வ­ளவு மோச­மா­ன­தொரு நிலைமை எமக்கு ஏற்­பட்­டி­ருக்­காது.

அன்று மஹிந்த விட்ட சிறு சிறு தவ­றுகள் இன்று மிகப்­பெ­ரிய பூகம்­ப­மாக எம்­மையே அழிக்கும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

இன்று நாட்­டுக்கு எதி­ரான பல­மான அழுத்­தங்கள் ஏற்­பட பிர­தான காரணம் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வே­யாகும். உட­ன­டி­யாக தீர்க்­க­வேண்­டிய தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை காலம் கடத்தி கொண்­டு­சென்­ற­மையே இத்­த­னைக்கும் கார­ண­மாகும்.

தமிழ் மக்­களும் எமது மக்கள் என்ற நிலை­பாட்டை அர­சாங்கம் கொண்­டி­ருக்க வேண்டும். பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்கும் தீர்வை பெற்­றுக்­கொ­டுத்­தி­ருக்க வேண்டும்.

அதேபோல் வடக்கில் தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் இன்றும் தீர்க்­கப்­ப­டாமல் உள்­ளன. முன்­னைய அர­சாங்கம் தமிழ் மக்­களின் பாது­காப்பு விட­யத்தில் தவ­றி­ழைத்மை அனை­வ­ராலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அதை இப்­போதும் பேசாது இந்த அர­சாங்கம் வடக்கில் முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கண்­டி­ருக்க வேண்டும். விடு­தலைப் புலி­களின் தலை­வர்கள் சுதந்­தி­ர­மாக வெளியில் நட­மா­டும்­போது அப்­பாவித் தமிழ் இளை­ஞர்கள் இன்னும் சிறை­களில் அடை­பட்டு வாழ்­வது எந்­த­வ­கை­யிலும் நியா­ய­மற்­ற­தாகும்.

ஆகவே அப்­பாவி தமி­ழர்­களை உட­ன­டி­யாக விடு­தலை செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். ஆனால் இப்­போது வரை­யிலும் அவ்­வா­றான செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தாக தெரி­ய­வில்லை.

இலங்­கையில் அனைத்து மக்­களின் ஆத­ர­வி­லும்தான் பிர­தி­நி­திகள் தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்­றனர். ஆனால் எமது நாட்டின் அடிப்­படை பிரச்­சி­னைகள் தொடர்பில் சர்­வ­தேசம் வலி­யு­றுத்­திய பின்­னரே இங்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு நாம் நடந்­து­கொள்­வது வெட்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும்.

ஆரம்­பத்தில் இலங்கை தொடர்பில் குற்­றச்­சாட்கள் முன்­வைக்­கப்­பட்­ட­போதே இலங்­கையில் நம்­பத்­த­குந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்தால் மற்றும் உள்ளக பொறிமுறைகளை அடிப்படை மட்டத்திலேனும் முன்னெடுத்திருந்தால் இன்று அவசர அவசரமாக எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

ஆனால் இப்போதும் நாம் சர்வதேசத்தை சமாளிக்க முடியும் என்ற நிலையில் செயற்பட்டால் எதிர்காலத்தில் முன்வைக்கும் நடவடிக்கைள் மிகமோசமானதாக அமையும்.

ஆகவே இப்போது காலதாமதம் இன்றி அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசாங்கம் அனைத்து நடவைக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Exit mobile version