கனடாவில் தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதையடுத்து பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இது தொடர்பாக ரொறொன்ரொ பகுதி பொலிசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கனடாவை சேர்ந்த கோமதி ரத்தினசிங்கம் என்ற பெண்மணியை கடந்த ஒக்டோபர் 4அம் திகதி முதல் காணாவில்லை.

இவர் கடைசியாக Finch Avenue West/ Keele Street அருகே பார்க்கப்பட்டார். இவரது உயரம் 5.2 அடி. ஒல்லியான தேகம்.

canada_tamil_002காணாமல் போன அன்று நீல நிற ஜீன்ஸ் மற்றும் நீல நிற சட்டை அணிந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை பற்றி எதேனும் தகவல் தெரிந்தால் 416-808-3100 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது TOR என்று டைப் செய்து 274637 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு www.222tips.com என்ற இணையப்பக்கத்தை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply