அது கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி. நேரமோ இரவு 8 மணியை கடந்­தி­ருந்­தது. மஹி­யங்­கனை பொலிஸ் நிலை­யத்­துக்கு பரபரப்புடன் வந்த இருவர் ‘சேர்……. காமண்­டுக்குப் போன மகளை காண­வில்லை சேர்’ என கண்ணீர் வழிய முறைப்­பா­ட­ளித்­தனர்.

உட­ன­டி­யாக முறை­ப்பாட்டை பதிவு செய்த பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். மஹி­யங்­கனை தம்­ப­கொல்ல – அலுகெட்டியாவ பிர­தே­சத்தில் தனது மாமா வீட்டில் தங்­கி­யி­ருந்து ஆடை தொழிற்­சா­லைக்கு வேலைக்கு சென்று வந்த 18 வய­தான யுவ­தியே காணாமல் போயுள்­ளதாக பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு கிடைத்­தது.

கட­மையில் இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் முறைப்பாட்­டினை பதிவு செய்து கொள்­ளவே விடயம் மஹி­யங்­கனை பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி உப பொலிஸ் பரி­சோ­தகர் சுதேஷ் சத்­து­ரங்க ஊடாக பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் திஸ்ஸ குமா­ரவின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டது.

மஹி­யங்­கனை பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் உஜித் லிய­ன­கே­வுக்கும் விடயம் தெரி­யப்­ப­டுத்­தப்­பட அவரின் ஆலோ­ச­னைக்­க­மை­வாக காணாமல் போன யுவதியை தேடும் படலம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

காணாமல் போனவர் 18 வய­தான அழ­கிய யுவதி. எந் நேரமும் சிரித்த முகத்­துடன்  இருக்கும் அவள், ஐவர் கொண்ட குடும்­பத்தில் மூன்­றா­வது பிள்ளை.

விவ­சாய குடும்­ப­மொன்றில் பிறந்த இவர் மோட்டார் சைக்கிள் ஒன்­றினை வாங்கும் கனவில் இற்­றைக்கு சுமார் 3 மாதங்­க­ளுக்கு முன்­ன­ரேயே அந்த ஆடைத் தொழிற்­சா­லையில் வேலைக்கு சேர்ந்தாள்.

தனது வீட்­டி­லி­ருந்து ஆடைத் தொழிற்­சாலை தூரத்தில் இருந்­ததால் தனது மாமாவின் (அம்­மாவின் சகோ­தரன்) வீட்டில் தங்கியிருந்தவாறே வேலைக்கு போய் வந்தாள்.

12 ஆயிரம் ரூபா மாத சம்­பளம் பெற்ற அவள் காலை 7.30 மணிக்­கெல்லாம் சென்று மாலை 6.30 மணி ஆகும் போதெல்லாம் தனது தங்குமி­டத்­துக்கு வந்­து­வி­டுவாள். வெள்­ளிக்­கி­ழ­மை­களில் தனது தாய் வீட்­டுக்கு செல்லும் அவள் மீண்டும் திங்­க­ளன்று வேலைக்கும் திரும்­பி­டுவாள்.

வேலை முடிந்து வழ­மை­யாக நிறு­வன போக்­கு­வ­ரத்துச் சேவை­யி­லேயே வரும் இந்த யுவதி மாமாவின் வீட்­டி­லி­ருந்து 300 மீற்­றர்­க­ளுக்கு முன்னால் இறங்கி நடந்து வரு­வதை வழ­மை­யாக கொண்­டி­ருந்தாள்.

ஏனெனில் அந்த தூரத்தில் உள்ள சிறிய பாதையில் நிறு­வன போக்­கு­வ­ரத்துச் சேவை வாக­னத்தை செலுத்­து­வது கடி­ன­மாக இருந்தமையே அதற்­கான கார­ண­மாகும்.

இந்­நி­லையில் தான் இந்த யுவதி கடந்த முதலாம் திகதி இரவு 11 மணி­யா­கியும் வீடு திரும்­பா­ததால் அவரது மாமா, தந்தையால் மஹியங்கனை பொலிஸ் நிலை­யத்தில் மேற்­படி முறை­ப்பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

முதலில் யுவதி வேலை பார்த்த ஆடைத் தொழிற்­சா­லையில் இருந்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்த மஹி­யங்­கனை பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவு பொறுப்­ப­தி­காரி சத்து­ரங்க, குறித்த யுவதி வேலை முடிந்து நிறு­வன போக்­கு­வ­ரத்துச் சேவையில் தங்­கு­மிடம் நோக்கி சென்று அங்கு இறங்­கி­யுள்­ளதை உறுதி செய்து கொண்­டனர்.

யுவதியுடன் வேலைப்­பார்ப்­போரை விசா­ரணை செய்­ததில் இவை உறு­தி­யா­னது.

அப்­ப­டி­யானால் தங்­கு­மிடம் செல்ல அவள் வாக­னத்­தி­லி­ருந்து இறங்கி நடந்து செல்லும் 300 மீற்­ற­ருக்­குள்­ளேயே ஏதோ ஒன்று நடந்துள்ளது என்ற அனு­மா­னத்­துக்கு வந்த உப பொலிஸ் பரி­சோ­தகர் சத்து­ரங்க அந்த 300 மீற்றர் பகு­தியை இர­வோ­டி­ர­வாக விசேட சோத­னைக்கு உட்­ப­டுத்­த­லானார்.

பிர­தேச மக்­களின் ஒத்­து­ழைப்­பு­டனும் சகோ­தர பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களின் உத­வி­யு­டனும் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த சோதனை நடவ­டிக்­கையில் பொலி­ஸாரின் அனு­மா­னத்தின் பிர­கா­ரமே சில தட­யங்கள் சிக்­கின.

இலே­சாக தூறிக் கொண்­டி­ருந்த மழைக்கு மத்­தி­யில் இடம்­பெற்ற அந்த சோதனை நட­வ­டிக்­கை­களின் போது யுவதியின் மாமா வீட்டிலிருந்து 50 மீற்றர் தொலைவில் அவளின் குடை, ரோஸ் நிற பாத­ணிகள், கைய­டக்கத் தொலை­பே­சிகள் இரண்டு ஆகி­யன ஆங்காங்கே சித­றிக்­கி­டப்­பதை பொலிஸார் அவ­தா­னித்­தனர்.

அவற்றை பார்க்கும் போது யுவதி பவ­வந்­த­மாக கடத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும் என்ற அனு­மா­னத்­துக்கு வந்த பொலிஸார் சிதறிக் கிடந்தயுவதியின் உட­மை­க­ளி­டையே சந்­தே­கிக்­கத்­தக்க தட­யங்கள் இரண்­டையும் கண்­டு­பி­டித்­தனர்.

அதா­வது சந்­தேகநப­ரு­டை­யது என அனு­மா­னிக்கத் தக்க பாதணி ஜோடி ஒன்றும் பிளாஸ்டிக் குழாய் கொண்டு பிடி செய்­யப்­பட்­டி­ருந்த சிறு கத்­தி­யொன்­றுமே அவ்­வாறு பொலி­ஸாரின் கண்­களில் சிக்­கின.

இந் நிலையில் தான் விடயம் தொடர்பில் ஊவா மாகா­ணத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.ஏ.சரத் குமார், பதுளை பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சந்­தன கலப்­பதி ஆகி­யோ­ரி­னதும் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

தொடர்ந்து அவ்­விரு உயர் அதி­கா­ரி­களின் நேரடி மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் உஜித் எம்.லிய­ன­கேயின் தலைமையில் விசேட விசா­ரணை குழு அமைக்­கப்­பட்­டது.

மஹி­யங்­கனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் திஸ்ஸ குமார, மஹி­யங்­கனை பிரதி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஜய­தி­லக ஆகி­யோரின் கீழ் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி சுதேஷ் சத்­து­ரங்க தலை­மையில் உப­பொலிஸ் பரி­சோ­த­கர்­க­ளான ஜய­தி­லக, விக்­ர­ம­சூ­ரிய ஆகி­யோ­ருடன் கான்ஸ்­ட­பிள்­க­ளான சம்பத் (37588), திஸா­நா­யக்க (28534), சென­வி­ரத்ன (28533), கரு­ணா­தி­லக (7698), தனுக (71610), சந்­தலால் (75337), பிரி­யந்த (76682) ஆகி­யோரைக் கொண்ட குழுவே விசா­ரணைப் பணி­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­நி­லையில் மறுநாள் (2 ஆம் திகதி) உத­ய­மா­னது. தேடு­தல்கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டன. அப்­போ­துதான் யுவதியின் சடலம் வீட்­டி­லி­ருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள அர­சாங்­கத்­துக்கு சொந்­த­மான தேக்கு மரக் காட்­டி­லி­ருந்து மீட்­கப்­பட்­டது.

சட­லத்தை பார்­வை­யிட்ட பொலிஸார் யுவதி கொடூ­ர­மாக பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார் என்­பதை தெரிந்­து­கொண்டனர். ஸ்தலத்துக்கு வருகை தந்த மஹி­யங்­கனை மேல­திக நீதிவான் பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்கு உத்­த­ர­விட்­ட­துடன் சந்­தேக நபர்­களை கைது செய்­யவும் உத்­த­ரவு பிறப்­பித்தார்.

இதனை தொடர்ந்து பதுளை போதனா வைத்­தி­ய­சா­லையில் மேற்­கொள்­ளப்­பட்ட சட்ட வைத்­திய சோத­னை­களில் குறித்த யுவதி கொடூ­ர­மாக பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, கழுத்து நெறித்து கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை உறு­தி­யா­னது.

யுவதியின் சடலம் இருந்த தேக்குமரக் காட்டின் பகு­தி­களை பொலிஸார் சல்­லடை போட்டு தட­யங்களைத் தேடிய போதும் பெரி­தாக ஒன்றும் சிக்­க­வில்லை. மாறாக சட­லத்தின் அருகே இருந்து எரிந்து முடிந்த பீடித் துண்­டொன்று மட்டும் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் தான் பொலி­ஸாரின் விசா­ர­ணைகள் சந்­தேக நபரை அடை­யாளம் காணும் வித­மாக முடுக்­கி­வி­டப்­பட்­டது.

பதுளை பொலிஸ் தட­ய­வியல் பிரி­வி­னரும் ஹச­லக பொலிஸ் மோப்­பநாய் பிரிவில் இருந்து ஜீனா எனப்­படும் மோப்­பநாய் அதன் பொறுப்­பாளர் கான்ஸ்­டபிள் கரு­ணா­ரத்­னவும் (76558) ஸ்தலத்துக்கு அழைக்­கப்­பட்­டனர்.

யுவதியினட் உட­மைகள் சிதறிக் கிடந்த பகு­தியில் இருந்த சந்­தே­கிக்­கத்­தக்க பாதணி ஜோடியை மோப்பம் பிடித்த ஜீனா பிர­தே­சத்தில் உள்ள ஒரு வீட்டில் போய் நின்­றது.

அந்த வீடா­னது பூட்­டப்­பட்­டி­ருந்தது முழு ஊரும் யுவதியை தேடி அலைந்த போதும் அந்த வீட்­டி­லி­ருந்த 20 வய­தான திஸா­நா­யக்க முதியன்­ச­லாகே சுரங்க குமார என்­பவர் மட்டும் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார். இது பொலி­ஸா­ருக்கு சந்­தே­கத்தை மேலும் அதி­க­ரித்­தது.

சந்­தே­கத்­துக்கு இட­மான பாதணி ஜோடி, கத்தி ஆகி­ய­வற்றை சுரங்க குமா­ரவின் தாயா­ருக்கு காட்டி அதனை உறு­திப்­ப­டுத்த பொலிஸார் முற்­பட்­டனர்.

ஆரம்­பத்தில் அவை தனது மக­னு­டை­யது அல்ல என குறிப்­பிட்ட தாய் பின்னர் அவை தனது மக­னுக்கு சொந்­த­மா­னவை என்­பதை ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சுரங்க குமா­ரவை தேடிய வேட்­டையை பொலிஸார் தீவி­ரப்­ப­டுத்­தினர்.

பொலி­ஸா­ருடன் சேர்ந்து ஊராரும் சுரங்­கவை தேடினர். இதன் போதுதான் உப பொலிஸ் பரி­சோ­தகர் சத்­து­ரங்­க­வுக்கு தகவல் ஒன்று கிடைக்­கின்­றது.

“சேர்…….. நீங்கள் தேடும் நபர் அவ­ரது மனை­வி­யையும் இழுத்துக் கொண்டு பாழ­டைந்த வீட்­டி­லி­ருந்து காட்­டுக்குள் ஓடு­வதைக் கண்டேன்” என நபர் ஒருவர் அந்த தக­வலை வழங்­கி­யி­ருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஊரார், ஊர் காவற்­படை பொலிஸ் குழுக்கள் என அனை­வரும் இணைந்து அலு­கெட்­டி­யாவ காட்டை சுற்­றி­வ­ளைத்து தேடுதல் நடத்­தினர்.

இதன்­போது அந்த காட்டில் உள்ள எல்­ஹேன தலாவ எனும் குன்றில் சுரங்க குமா­ரவும் அவ­னது காதலியும் இருப்­பதை பொலிஸார் அவ­தா­னித்­தனர்.

பொலி­ஸாரை கண்ட சுரங்க குமார காதலிக்கு பலாத்­கா­ர­மாக நஞ்சை ஊட்­டி­விட்டு தானும் அருந்திக் கொண்டான். எனினும் பொலிஸார் விட­வில்லை. இரு­வ­ரையும் உட­ன­டி­யாக மஹி­யங்­கனை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றனர்.

வைத்­தி­ய­சா­லையில் வைத்து சுரங்க குமா­ரவை பொலிஸார் கைது செய்­தனர். 20 வய­தான சுரங்க குமார பல்­வேறு குற்றச் செயல்களுடன் தொடர்­பு­டை­யவன்.

திரு­மணம் முடித்து மூன்று மாத அவ­னுக்கு குழந்­தையும் உள்ள நிலையில் அவன் 15 வய­து­டைய சிறு­மியை காத­லித்து கடத்திக் கொண்டு வந்து குடும்பம் நடத்­தி­வந்­துள்ளான்.

அது குறித்து பொலிஸார் அவனை கைது செய்த நிலையில் காதலி நீதி­மன்றம் ஊடாக பாட்­டி­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டாள். எனினும் விளக்­க­ம­றி­யலில் இருந்து திரும்­பிய அவன் காதலியை அவள் பாட்­டி­யி­ட­மி­ருந்து பலாத்­கா­ர­மாக கூட்டிச் சென்று குடும்பம் நடத்தலானான்.

இத­னி­டை­யேதான் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி 18 வயது யுவதியை பலாத்­காரம் செய்து கொலை செய்து விட்டு இரவு 7.30 மணி­ய­ளவில் வீட்­டுக்கு வந்­துள்ள சுரங்க குமார தான் நபர் ஒரு­வரை கொலை செய்­து­விட்­ட­தா­கவும் பொலிஸார் தன்னை தேடு­வ­தா­கவும் குறிப்­பிட்டு காதலியை கட்­டா­யப்­ப­டுத்தி காட்­டுக்குள் உள்ள குன்­றுக்கு அழைத்துச் சென்­றுள்ளான்.

அன்­றைய இரவு அங்கு தங்­கி­யுள்ள அவன் தோட்­ட­மொன்றில் இருந்த மர­வள்ளிக் கிழங்கு உள்­ளிட்ட பயிர்­களை பிடுங்கி இரவு உணவை கற்­கு­கை­யி­லேயே தயார் செய்­துள்ளான்.

நஞ்­ச­ருந்­திய நிலையில் சந்­தேக நபரும் அவ­னது 15 வயது காத­லியும் காப்­பாற்­றப்­பட்ட நிலையில் பொலிஸார் அவர்­க­ளிடம் விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்­ளனர்.

இதன்­போ­துதான் காதலிக்கு நடந்த சம்­பவம் எதுவும் தெரி­யாது என்­பதை பொலிஸார் அறிந்து கொண்­டுள்­ளனர்.

“இவன் பெண் ஒரு­வரை இப்­படி கொடூ­ர­மாக கொலை செய்தான் என எனக்கு தெரி­யாது. என்­னையும் கட்­டா­யப்­ப­டுத்­தியே உடன் வைத்திருந்தான்.

நான் அவ­னுக்கு பயந்தே கூடவே குன்றில் இருந்தேன். இந்த கொடூ­ரனை வெளியே விடா­தீர்கள்” என சசி­கலா பொலி­ஸா­ரிடம் கண்­ணீ­ருடன் கெஞ்­சி­யுள்ள நிலையில் கொல்லப்பட் ட யுவதியின் புகைப்­படம் ஒன்­றை­யேனும் காட்­டு­மாறு கோரி­யுள்ளார்.

இந் நிலையில் சந்­தேக நப­ரான சுரங்க உப பொலிஸ் பரி­சோ­தகர் சத்து­ரங்­க­விடம் ஒப்­புதல் வாக்­கு­மூலம் ஒன்­றினை விசா­ர­ணையின் போது வழங்­கி­யுள்ளார்.

“அவள் ஒவ்­வொரு நாளும் காமண்ட் பஸ்ஸி ல் இருந்து இறங்கி எனது வீட்டின் முன்­னா­லேயே செல்வாள். அன்று திலகே மாமாவின் கடைக்கு வந்து பீடிகள் சில­வற்றை வாங்கிக் கொண்டு அவள் வேலை விட்டு வரும்­வரை காத்­ தி­ருந்தேன்…

இவ்வாறு தான் செய்த கொடூரம் தொடர்பில் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

தொடர்ந்து சாட்சியமளித்துள்ள சுரங்க

சம்பவத்தின் பின் வீட்டுக்கு ஓடினேன் வீட்டில் சசிகலா மட்டுமே இருந்தாள். பொலிஸார் பிடிவி றாந்து ஒன்றுக்காக என்னை தேடுவதாக கூறி எனது காதலியை யும் இழுத்துக் கொண்டு காடடுப்பகுதியில் உள்ள பாழ டைந்த வீடொன்றுக்கு சென்றேன்.

பின்னர் நபரொருவரை கொலை செய்ததாக நான் கூறவே காதலி அங்கிருந்து செல்ல முற்பட்டாள். நான் அவளை மிரட்டி காட்டுக்குள் உள்ள குன்றுக்கு அழைத் துச் சென்றேன்” என வாக்கு மூலமளித்துள்ளான்.

How Mahiyanganaya Rape suspect caught – Video

Share.
Leave A Reply