துபாயின் சொகுசு ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டுதினக் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு முன்னர் ஏற்பட்ட தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை
புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான வேடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக இந்த தீ ஏற்பட்டது.
அங்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு தீ கொழுந்துவிட்டு எரிவதைக் காணக் கூடியதாக உள்ளது என அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
எனினும் தீயணைப்புத் துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் அவர் கூறுகிறார்.
இதனிடையே திடீரென ஏற்பட்ட இந்தத் தீ குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அட்ரஸ் டவுண்டவன் எனும் 63 மாடிகளைக் கொண்ட அந்த ஹோட்டலின் பக்கவாட்டில் தீ எரிந்தது.
இச்சம்பவத்தில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளனர்
உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா 20ஆவது மாடியில் தீ விபத்து -(வீடியோ )
டுபாயில் உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.
இதன்போது 20ஆவது மாடியில் இருந்து திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து விடுதியின் அனைத்து தளங்களுக்கும் தீ பரவியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தீ விபத்து வானவேடிக்கையின் போது வெடித்த பட்டாசிலிருந்து வந்த தீப்பொறி பற்றி இருக்கலாம் என டுபாய் பொலிஸார் கருதுகின்றனர். தீ பற்றுவது குறித்து அறிந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து விடுதிகளும் மூடப்பட்டன.
இந்த தீ விபத்தில் பலியானவர்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
