சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டு இருந்த போது  ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவரது காரை மறித்து அவரை இழுத்து சென்று  7 பேர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் சந்தேக நபர்கள் 7 பேருக்கும் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கபட்டது.சவுதி அரேபிய சட்டத்தின் படி  பொது இடங்களுக்கு செல்லும் போது பெண்களுக்கு அவரது குடும்பத்தை சேர்ந்த  ஒரு ஆண் துணையாக இருக்க வேண்டும்.

இந்த சட்டத்தை மீறியதற்காக ஆரம்பத்தில் அந்த பெண்ணுக்கு 90 சவுக்கடி தண்டனை வழங்கபட்டது.

சவுதியின் நீதித்துறை விடுத்துள்ள அறிக்கையில் உணர்ச்சி படுவதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை நிதி அமைச்சகம் வரவேற்கிறது என கூறி உள்ளது.

இந்த தண்டனை குறித்து  பாதிக்கபட்ட பெண்ணின் வழக்கறிஞர் அப்துல் அல் லஹீம்  சவுதி அரேபிய நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

பாதிக்கபட்ட பெண் ஊடகங்களில் பேசியதால் நீதிமன்றம் 90 சவுக்கடி  தண்டனையை 200 ஆக உயர்த்தியது. மேலும் நீதிமன்றம் வழக்கறிஞரின்  உரிமத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

Share.
Leave A Reply