அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் யாழ்ப்பாண தீபகற்பத்தின் மக்களுக்கு சுத்தமான குடிநீருக்கு பதிலாக கடல் நீரை பருக நேரிடலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சுற்றி காணப்படுகின்ற சுண்ணாம்பு கற்பாறைகள் நீருடன் கலந்துள்ளதால் கடல் நீர் குடிநீருடன் கலக்க வாய்ப்புள்ளதாக சிறி ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் முன்னாள் அதிபர் , புவியியல் பேராசிரியர் செனவி எபிடவத்த தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இந்த நிலை தற்போதே ஆரம்பமாகிவிட்டதாகவும், சில நேரங்களில் யாழ்ப்பாண தீபகற்பம் கடல் நீரில் மூழ்குவற்கு வாய்ப்புள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை ஏற்பட்டால் , யாழ்ப்பாண மக்களுக்கு குடி நீர் வழங்க முடிந்தாலும் , அவர்களது விவசாயத்திற்கான நீரை பெற்றுக்கொடுப்பது சிரமமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக வட பகுதி மக்களுக்கு மாகாண விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள புவியியல் ஏற்றத்தாழ்வு காரணமாகவும் நிலப்பகுதி கடலில் மூழ்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
………..
யாழ்பாண பிரதேசத்தில் குடிக்க தண்ணீர் இல்லாவிட்டால் மக்கள் எப்படி வாழ்வது? இதைசாட்டி வெளிநாட்டுக்கு வந்து யாராவது ஒருவருக்கு அகதி அந்தஸ்து கொடுப்பார்களாக இருந்தால் யாழ்பாணத்து மக்கள் அனைவரும் வெளிநாட்டுக்கு வந்துவிடுவார்கள்.