பிரதியுஷாவின் தற்கொலை டிவி நடிகர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதியுஷா கோழை அல்ல, இது திட்டமிட்ட கொலை என்று பிரதியுஷாவின் உறவினர்களும், நண்பர்களும் கூறி வருகின்றனர்.
பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசும் போது, பிரதியுஷாவும் நானும் ஒன்றாக வாழ்ந்துவந்தோம்.
ஆனால் கடந்த ஜனவரி 12 அன்று அவளுடைய காதலர் ராகுல் என்னிடம் வந்து அவளை அழைத்துச் செல்வதாகவும் இருவரும் மாலட் பகுதியில் வசிக்கப் போவதாகவும் கூறினார்.
மகளும் என்னை ஜம்ஷெட்பூருக்குப் போகச் சொன்னார். அங்குதான் எங்கள் வீடு உள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு அவள், தன் தந்தையிடம் பேசியுள்ளார்.
அப்போது தன் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளதாகக் கூறியுள்ளார். வியாழன் அன்று என்னிடம் பேசியபோது, சோகமாகப் பேசினாள். என் மகளின் மரணத்துக்கு ராகுலே காரணம்.
ஏனெனில் என் மகள் ராகுலுடனான உறவில் மகிழ்ச்சியில்லாமல் இருந்தாள் என்றார். இதனிடையே பிரதியுஷா தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பெண் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீனா சபீக் என்ற பெண் சமூக ஆர்வலர், இது மிகவும் சோகமாக சம்பவம், பிரதியுஷாவின் மரணத்தை மேலோட்டமாக விசாரிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
பிரதியுஷா தற்கொலை தொடர்பாக அவரது காதலன் ராகுல் ராஜ் சிங்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதியுஷா ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.