Site icon ilakkiyainfo

கேப்டன் பேசுவது புரியவில்லை என்கிறார்களே எம்.ஜி.ஆர். பேசியது மட்டும் உங்களுக்குப் புரிந்ததா?

தே.மு.தி.க. வின் திசை­காட்டி பிரே­ம­லதா தான் என்­பது நிரூ­பணம் ஆகி­யி­ருக்­கி­றது. தி.மு.க., காங்­கிரஸ் அணியை ஊழல் கூட்­டணி என விமர்­சித்து பெப்­ர­வரி 13 ஆம் தேதியே தே.மு.தி.க. வின் பாதையைக் கோடிட்டுக் காட்­டினார் அவர்.

ஆனால் அப்போது அது குறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸின் மாநிலத் தலைவர் இளங்கோவன், பிரேமலதா சொல்வதைப் பற்றி  நாங்கள் கவலைப்படவில்லை.

விஜய காந்த் என்ன சொல்கிறார் என்பதுதான் முக்கியம் எனக் கூறிச் சமாளித்தார். இப்போது பிரேமலதாவின் கருத்தே தே.மு.தி.க. வின் நிலைப்பாடு ஆகியிருக்கிறது.

மார்ச் 10 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய். எம். சி. ஏ. திடலில் நடைபெற்ற மகளிர் தின பொதுக்கூட்டத்தில், தே.மு.தி.க. தனித்துப் போட்டி என்கிற அறிவிப்பை விஜயகாந்த் வெளியிட்டார். (பிறகு மக்கள் நலக் கூட்ட ணியுடன் சேர்ந்தது தெரிந்ததே)

அந்தக் கூட்டத்தில் விஜயகாந்துக்கு முன்பு பேசிய பிரேமலதா, வழக்கம் போல அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்தார்.

குறிப்பாக தி.மு.க. என்றால் தில்லு முல்லு கட்சி என அவர் பேசியபோதே கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தே.மு.தி.க. வின் முடிவு கிட்டத்தட்ட புரிந்து போனது.

கூட்டணி பேரத்தில் விஜயகாந்தை வீழ்த்தி விட்டதாக தி.மு.க. தரப்பு தொடர்ந்து செய்தி களைக் கசிய விட்டதால் ஏற்பட்ட கோபமும் பிரேமலதாவின் பேச்சில் பளிச்சிட்டது. அவ ரின் பேச்சின் ஒரு பகுதி இதோ:

பத்திரிகையாளர்களை நான் மிகவும் மதிக்கிறேன். இப்போ 10, 15 நாட்களாக என்ன நடக்கிறது?

நான் எங்க வீட்டு வாசல்ல நிக்கிறப்போ, எங்க அம்மா வீட்டுக்கு போறப்போ அல்லது யாராவது ஒரு பேஷன்ட்டைப் பார்க்க ஹாஸ்பிட்டலுக்குப் போறப்போ பின்தொடர்ந்து வந்து பேட்டி கேட்பாங்க.

யாரோ வதந்தி கிளப்புறாங்க. உடனே எங்க கொள்கை பரப்பு செயலாளர் மூலமாக, கூட்டணி பேசலைன்னு ஒரு அறிக்கை விட்டு கேப்டன் முற்றுப்புள்ளி வச்சார்.

அப்புறம் ஒவ்வொரு தடவையும் அந்த வதந்திக்கு நாங்க விளக்கம் சொல்லனுமா? எங்களுக்கும் பெர்சனல் வாழ்க்கை இருக்குங்கிறதை புரிஞ்சிக்கோங்க.

எங்க வீட்டு முன்னால மணிக்கணக்கா நீங்க வெயிலில் நிற்கிறதைப் பார்க்கும் போது எங்களுக்கு கஷ்டமா இருக்கு.

இப்போ இந்தக் கூட்டத்திற்கு  நாங்க உங்களை அழைச்சோம். எங்க கட்சிக்காரங்களைக் கூட பின்னால் உட்கார வச்சிட்டு உங்களை முன்வரிசையில் உட்கார வச்சிருக்கோமா இல்லையா?

இதுவரை வந்த அத்தனை செய்திகளுமே வதந்திதான் என்பது நிரூபணமாகிவிட்டது.

அதற்குள் சிலர், இன்னும் பேரம் படியல, செட்டில் ஆகல என்கிறார்கள். ஒன்று மட்டும் சொல்கிறேன். கேப்டன் இதுவரை கைநீட்டி காசு வாங்கினார் என்றால் அது ஒருவரிடம் தான்.

அது அவர் நடித்த படங்களைத் தயாரித்த புரொடியூசர்களிடம் தான் என்பதைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

இந்த 40 ஆண்டுகளில் தான் சம்பாதித்த பணத்தைத்தான் மக்களுக்குக் கேப்டன் செலவு செய்திருக்கிறார்.

கேப்டனை யாரும் பேரத்தில் வீழ்த்த முடியாது. அவரைக் காசு கொடுத்து வாங்கி விடலாம் என யாராவது நினைத்தால் அவரைப் போல முட்டாள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.

அன்புக்கும் பாசத்திற்கும் அவர் கட்டுப்படுவாரே தவிர பணத்திற்குக் கட்டுப்படமாட்டார்.

அதேபோல கேப்டன் பேசுவது புரியவில்லை எனச் சிலர் சொல்கிறார்கள். அதையும் இன்று நான் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.

சிவாஜிக்கு அப்புறம் பக்கம் பக்கமா வசனம் பேசியவர் கேப்டன் தான். யாராக இருந்தாலும் ஒரு ஏஜுக்கு அப்புறம் கொஞ்சம் ஸ்லோ ஆவாங்க. கேப்டனுக்கு சைனஸ் பிரச்சினை இருக்கு. தொண்டையில் சின்னதா டான்சில் பிரச்சினை இருக்கு.

நான் பேசுவது முன்ன பின்ன இருக்கும். நீங்களே கோர்வையா எழுதிக்கோங்க என வெளிப்படையாக அவரே சொல்லியிருக்கிறார்.

எந்தத் தலைவராவது  இப்படித் தனது நிலையை வெளிப்படையாகக் கூறியிருக்கிறாரா?

ஒண்ணுமே தெரியாவிட்டாலும் கூட எல்லாமே தெரிந்தது மாதிரிப் பேசும் தலைவர்களைத் தான் நாம் பார்த்திருக்கிறோம் என்று பேசிய பிரேமலதா, சில தினங்களுக்கு முன்பு முன்னுக்குப் பின் முரணாக, எம். ஜி. ஆர். பேச்சு மட்டும் உங்களுக்குப் புரிந்ததா?

அதைப் பற்றி ஏன் கேட்கவில்லை, எழுதவில்லை? என்று கடுமையான தொனியில் விஜயகாந்துக்கு வக்காலத்து வாங்கிப் பேசியது வாக்காள மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப டுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது!.

Exit mobile version