ஐ.பி.எல். 9 ஆவது சீசனின் ஆரம்ப விழாவில், சம்பியன் பாடலுக்கு பிராவோவுடன் இணைந்து சில மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களும் நடனமாடுகின்றனர்.
ஐ.பி.எல். 9 ஆவது சீசனின் முதல் போட்டி நாளை 9 ஆம் திகதி மும்பையில் இடம்பெறவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ்-ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னதாக நாளை மும்பை வாங்கடே மைதானத்தில் மாலை ஐ.பி. எல். கோலாகல ஆரம்பவிழா இடம்பெறவுள்ளது.
இதில், பொலிவுட் நட்சத்திரங்கள் கத்ரீனா கைப், ரன்வீர் சிங் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் குஜராத் லயன்ஸ் அணி வீரர் பிராவோ, தனது சம்பியன் பாடலுக்கு நடனமாடுகிறார்.
இது குறித்து ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா கருத்துத் தெரிவிக்கையில்,
மும்பையில் இடம்பெறும் ஐ.பி.எல். 9ஆவது சீசனின் ஆரம்பவிழாவில், சம்பியன் பாடலுக்கு பிராவோ நடனமாடுகிறார்.
அவருடன் இணைந்து இன்னும் சில மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களும் நடனமாடுகின்றனர்.
ஐ.பி.எல். இல் முதல் முறையாக இந்த தொடரில் எல்இடி விக்கெட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.