ilakkiyainfo

செர்க்கபுரியாக விளங்கும் ‘சிறீலங்காவில்’ ஒரு கூவம் நதி ஓடுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?- (வீடியோ)

புறக்கோட்டையிலுள்ள மிதக்கும் சந்தை காணப்படும் பேர குளத்தில் கடந்த வாரம் முதல் அதிக துர்நாற்றம் வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால், புறக்கோட்டை பகுதி முதல் சுமார் ஒரு கிலோ மீற்றர் வரையான பிரதேசத்திலுள்ளவர்கள் அதிக சிரமத்திற்குள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த, பேர குளப் பகுதியில், அனுதியின்றி, மலசல குளாயை இணைத்தமையாலேயே குறித்த துர்நாற்றம் வீசிவருவதாகவும்  இதற்கு உடனடி தீர்வொன்று அவசியம் என மேமல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளதோடு, அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
beira-lake-bad-smellஇதேவேளை குறித்த பகுதியால் இடம்பெறும் ரயில் போக்குவரத்தில் பயணிப்போர், தாம் அதிக சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
முதலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்களை அகற்றி வருவதாக, அமைச்சின் செயலாளர் ரூபசிங்க தெரிவித்தார்.
ஆயினும், குறித்த பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வொன்றை வழங்கும் பொருட்டு, உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும், அது வரை சாதாரணமாக மேற்கொள்ளும் சுத்தம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version