ஈரானில் இராணுவ தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்று கிழமை பாரிய இராணுவ கண்காட்சியும், அணிவகுப்பும் இடம்பெற்றதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் முப்படைகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த இராணுவ கண்காட்சியை ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹாணி தலைமை தாங்கி, ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது, ஈரான் ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்த அதிநவீன ஆயுதங்களும் காட்சியப்படுத்தப்பட்டதாக மேலும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்நிகழ்வுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
>