லத்தின் அமெரிக்காவில் பெண்மணி ஒருவருக்கு பேயோட்டும் காட்சி பார்வையாளர்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் இந்த வீடியோவில், இளம் வயது பெண் ஒருவர் வெள்ளை நிற பொடியால் வரையப்பட்ட கட்டத்துக்குள் அமரவைக்கப்பட்டுள்ளார்.
அப்பெண்ணை பிடித்திருக்கும் பேயோட்டுபவரின் உதவியாளர் புகைபிடித்துக் கொண்டே அப்பெண்ணை எழுப்புகிறார்.
அப்பெண்ணும் ரத்தத்தை துப்பியவாறு, கைகள் இரண்டையும் நேராக நீட்ட முடியாமல் மடித்து வைத்துக் கொண்டு லத்தின் மொழியில் முணுமுணுக்கிறார்.
போயோட்டுபவர், அப்பெண்ணின் தொண்டைப் பகுதியில் கைகை வைத்து பேசுகிறார், அப்பெண்ணும் தனது வாயில் இருந்து ரத்தத்தை துப்பியவாறு லத்தின் மொழியில் கத்துகிறார்.
தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது, கடந்த ஆண்டு போப் பிரான்சிஸ் அவர்கள் லத்தின் அமெரிக்காவில் பேய்கள் தொடர்பான கருத்துக்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
இருப்பினும், லத்தின் அமெரிக்க மக்கள், பேய் என்பது தங்கள் வாழ்வில் பாதியான ஒன்று என நம்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.