ஐ.எஸ். தீவிரவாதிகள் தம்மால் அடிமைகளாக பிடிக்கப்பட்டவர்களை தாம் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சியொன்றை ஈராக்கில் தமது படையணிக்கு புதிதாக ஆட்சேர்க்கப்பட்டவர்களுடன் பரிமாறிக் கொண்டுள்ளமை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி காணொளிக் காட்சியானது இறந்த தீவிரவாதியொருவரின் கையடக்கத்தொலைபேசியில் அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காணொளிக் காட்சியைப் பெற்ற குர்திஷ் ஜனநாயக கட்சி அதிகாரிகளால் அது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் ஐ.எஸ். தீவிரவாதிகள் சந்தையொன்றில் தம்மால் பாலியல் அடிமைகளாக பிடிக்கப்பட்டவர்கள் விற்பனை செய்யப்படுவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சியொன்றை வெளியிட்டிருந்தனர்.