சண்டே ரைம்ஸ் மற்றும் சி.ஏ.எப் நிறுவனமும் இணைந்து , செல்வந்தர்களில் எவர் தமது பணத்தை பதுக்கிவைக்காமல் , அதனை ஏழை எழிய மக்களுக்கு செலவுசெய்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். அதில் 13 வது இடத்தைப் பிடித்திருப்பது வேறு யாரும் அல்ல , ஈழத் தமிழரான சுபாஷ்கரன் அல்லிராஜா தான்.

உலகில் பலர் பணத்தை சம்பாதிக்கிறார். ஆனால் சம்பாதித்த பணத்தைப் பதுக்கிவைக்கிறார்கள். தாமும் தமது சந்ததியினரும் அனுபவிக்க சொத்தைச் சேர்க்கிறார்கள். ஆனால் சுபாஷ்கரன் அல்லிராஜா முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதர்.

சாதாரண மனிதராக பிரித்தானியா வந்து குடியேறிய அவர் , மோபைல் கம்பெனியை ஆரம்பித்தார்.

பல ஆண்டுகளாக லண்டனில் மோபைல் போன் ஜாம்பவான்களாக இருந்த பல கம்பெனிகளை பின்னுக்கு தள்ளி வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.

உலக தரவரிசையில் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக இவர் இடம்பித்தது மட்டும் அல்ல ,ஈழத் தமிழர்களுக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

கொஞ்ச பணம் சம்பாதித்துவிட்டால் கூட , அதனைவைத்து ரேடியோ நிலையம் TV நிலையம் என்று ஆரம்பித்து தமது புகழை பரப்ப நினைக்கும் மனிதர்களுக்கு மத்தியில் , சுபாஷ்கரன் மிகவும் வித்தியாசமானவர்.

அத்தோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை அவர் கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கு பல உதவிகளைச் செய்து வருகிறார்.

தனது சொந்த நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் அவர் உதவிபுரியவில்லை. எத்தியோப்பியா முதல் , ஐரோப்பா வரை உள்ள பல நாடுகளில் கஷ்டப்படும் மக்களுக்கும் ,சிறுவர்களுக்கும் சுபாஷ் பல உதவிகளைப் புரிந்து வருகிறார்.

இதனை ஆதாரத்தோடு தற்போது சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் , செல்வந்தராக இருக்கும்(தனிப்பட்ட மனிதர்கள்) யார் யார் எவ்வளவு பணத்தை தொண்டுக்காக செலவு செய்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

719166b45059cf0d84c374fbf52110b3அதில் பிரித்தானியாவில் 13 வது இடத்தில் சுபாஷ்கரன் அவர்கள் இருக்கிறார் என்பது பெருமைக்குரிய விடையம். மேலும் லைக்கா மோபைல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரேம் சிவசாமி போன்ற பல நல்ல மனிதர்கள் , சுபாஷ்கரனுக்கு பேருதவியாக இருந்துவந்துள்ளார்கள்.

அதுபோக சுபாஷ்கரன் அவர்களுக்கு அவரது தாயாரே என்றும் வழிகாட்டியாக இருந்து வருகிறார். வியாபார போட்டி காரணமாக சுபாஷ்கரன் மீது சேறு பூசும் நடவடிக்கைகள் பல கடந்த காலகட்டங்களில் இடம்பெற்றது.

இருப்பினும் அவை யாவையும் அவர் தகர்த்து எறிந்து , தனது தொண்டுப் பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார் , என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டிய விடையம் ஆகும்.

b4216306b6c3f6fe0b73cd0c202bef3a

Share.
Leave A Reply