•  ஒரு சந்தை (பொரு­ளா­தார மத்­திய நிலையம்) எங்கு அமைய வேண்டும் என்­பது  குறித்து  ஒரு  முடி­விற்கு வர­மு­டி­யாத  தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னர்   தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு குறித்து எவ்­வாறு விவாதித்து முடி­விற்குக் கொண்­டு­வ­ரப்­போ­கி­றார்கள்??

• இப்பிரச்சனையில்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் முடிவுகள் எதனையும் எடுக்காது இழுத்தடித்து வருவதன் மர்மம் என்ன?

•இவ் விட­யத்தைச் சாட்­டாக வைத்து வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு பாடம் கற்­பிக்க வேண்டும் என்­கின்ற நோக்­கத்­துடன் தமிழரசுக்கட்­சியைச் சேர்ந்த சிலர் திரை­ம­றைவில் இயங்கி வரு­வ­தா­கவும் அவர்கள் ஏனைய உறுப்­பி­னர்­களைத் தொடர்­பு­கொண்டு தாண்­டிக்­கு­ளத்­திற்கு ஆத­ரவு அளிக்­கு­மாறு அழுத்தம் கொடுத்து வரு­வ­தா­கவும் அறிய முடி­கி­றது.

தொடர்ந்து….
கடந்த சில வாரங்­க­ளாக தமிழ் அர­சி­யல்­வா­திகள் மற்றும் வடக்கைச் சேர்ந்த பொது­மக்­க­ளி­டையே அதிகம் பேசப்­படும் பேசு­பொ­ரு­ளாக வடக்கின் பொரு­ளா­தார மத்­திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்­கின்ற விவாதம் காணப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக கூட்­ட­மைப்­பி­ன­ரது பாரா­ளு­மன்ற மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்கள் இது தொடர்­பாக இரு அணி­க­ளாகப் பிரிந்து நின்று தம்முள் முரண்­பட்டு வரு­கின்­றனர்.

இவ் விடயம் தொடர்பில் ஒரு முடி­வினை எட்டும் நோக்­குடன் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவருமான இரா.சம்­பந்தன் தலை­மையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கூட்­டப்­பட்ட கூட்­டத்தில் இறுதி முடி­வுகள் எதுவும் எடுக்கப்படா­த­துடன் வடக்கைச் சேர்ந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற மற்றும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களின் கருத்­

துக்­களைக் கடிதம் மூல­மாக கோரு­வது எனவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இது தவிர

கடந்த வியா­ழக்­கி­ழமை இவ்­வி­டயம் தொடர் பில் கலந்­து­ரை­யாடி ஓர் முடி­வினை எட்­டு­வ­தற்­காக கூட்­டப்­பட்ட கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யி­லான கூட்­ட மும் நடை­பெ­றாமல் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

நேற்றும் இவ்விடயம் குறித்து பாராளுமன்றக் கட்டத் தொகுதியில் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கூடி ஆராய்ந்துள்ளனர்.

ஆக இப்­பந்தி எழு­தப்­ப­டும்­வரை வடக்கின் பொரு­ளா­தார மத்­திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்­பது குறித்து தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் ஓர் உறு­தி­யான முடி­விற்கு வர­மு­டி­யா­த­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர்.

இங்கு எழக்­கூ­டிய பிரச்­சினை என்­ன­வென்றால் ஒரு சந்தை (பொரு­ளா­தார மத்­திய நிலையம்) எங்கு அமைய வேண்டும் என்­பது குறித்தான சாதக மற்றும் பாதக நிலை­மை­களை ஆராய்ந்து   அது தொடர்பில் ஓர் உறு­தி­யான முடி­விற்கு வர­மு­டி­யாத  தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரும் அவர்­களின் தலை­மையும் மிகப்­பெ­ரிய சவால்­மிக்­க­தான தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு குறித்து எவ்­வாறு விவாதித்து முடி­விற்குக் கொண்­டு­வ­ரப்­போ­கி­றார்கள் என்­கின்ற ஐயத்தை தோற்­று­வித்­துள்­ளது.

ஒரு விட­யத்தை ஆராய்ந்து முடி­வெ­டுப்­பது தொடர்பில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னி­டத்தில் காணப்படுகின்ற இய­லா­மையும், திற­மை­யின்­மையும் கார­ண­மாக இவ்­வி­டயம் மேலும் மேலும் விவா­திக்­கப்­பட்டு தமிழ்த்­தே­சிய கூட்ட­மைப்பின் உறுப்­பி­னர்­க­ளி­டையே விரி­சல்­க­ளையும் ஒற்­று­மை­யின்­மை­யி­னையும் ஏனைய பிரச்­சி­னை­க­ளையும் உரு­வாக்கும் ஒன்­றாக மாறி­யுள்­ளது எனலாம். இது ஒட்­டு­மொத்த தமி­ழர்­களின் அர­சியல் பய­ணத்­திற்கே வேட்டு வைக்­கு­மொன்­றாக கூட மாறி­விடக் கூடிய அபாயம் உள்­ளது.

பொரு­ளா­தார ரீதி­யாக ஆராய்ந்து பார்க்­கு­மி­டத்து வடக்கின் பொரு­ளா­தார மத்­திய நிலையம் வட­மா­கா­ணத்தின் மையப்­ப­கு­தி­யான மாங்­கு­ளத்தில் தான் அமைக்­கப்­பட வேண்டும் என கரு­தப்­ப­டு­கின்­றது.

ஆனால் சில கார­ணங்­களால் இது வவு­னியா மாவட்­டத்தில் அமைப்­ப­தென்­ப­தாகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டு­விட்­டது.

ஆனால் வவு­னியா நக­ருக்கு அண்­மையில் உள்ள தாண்­டிக்­குளம் பிர­தே­சத்­திலா அல்­லது வவு­னியா நக­ரி­லி­ருந்து ஏறத்­தாழ 10 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஓமந்தைப் பிர­தே­சத்­திலா இப்­பொ­ரு­ளா­தார மத்­திய நிலை­யத்­தினை அமைப்­பது என்­பது தொடர்­பி­லேயே தற்­போது கூட்­ட­மைப்­பி­ன­ரி­டையே இழு­பறி நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற கூட்­ டத்­திற்கு வரு­கை­தந்த கூட்­ட­மைப்பின் பாரா­ளு­ மன்ற உறுப்­பி­னர்­க­ளான சர­வ­ண­பவன், சிவ­மோகன், சாந்­தினி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா போன்­றோரும், சத்­தி­ய­லிங்கம் மற்றும் டெனீஸ்­வரன் போன்ற வட­மா­காண அமைச்­சர்­களும் வடக் கின் பொரு­ளா­தார மத்­திய நிலையம் தாண்­டிக்­கு­ளத்­தி­லேயே அமைய வேண்டும் என தமது ஆத­ர­வினைத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இவர்கள் இரண்டு வாதங்­களை பிர­தா­ன­மாக முன்­வைத்­தி­ருந்­தனர்.

ஒன்று ஓமந்­தையில் இப்­பொ­ரு­ளா­தார மத்­திய நிலை­யத்­தினை அமைக்கக் கூடிய காணி இன்­னமும் உறு­தி­செய்­யப்­ப­ட­வில்லை. ஆகவே ஏற்­க­னவே இனங்­கா­ணப்­பட்ட தாண்­டிக்­கு­ளத்­தி­லுள்ள விவ­சாயப் பண்ணை அமைந்­துள்ள காணியில் சந்­தையை அமைக்க வேண்டும் என்­பது.

இரண்­டா­வது காரணம், மத்­திய அமைச்சர் ஒருவர் இப்­பொ­ரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை மத­வாச்­சிக்குக் கொண்டு செல்­வ­தற்கு முயற்­சிக்­கிறார் ஆகவே  இதனை தடுத்­து­நி­றுத்தும்  முக­மாக வடக்கில்  எங்­கை­யா­வது சரி உட­ன­டி­யாக சந்தை அமைக்கும் பணி­யினை ஆரம்­பித்து விட­வேண்டும் என்­ப­தாகும்.

இவ்­வி­டயம் தொடர்பில் ஆழ­மாக ஆராய்ந்து பார்த்­ததில் இவர்­க­ளது இவ்­வி­ரண்டு வாதமும் பொருத்­த­மற்­றது எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

ஓமந்­தையில் காணி உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்­பது தொடர்­பி­லான விட­யங்­களை விளக்கி கடிதம் அனுப்­பி­யுள்ள வட­மா­காண காணி ஆணை­யாளர் ஓமந்தைப் பிர­தே­சத்தில் இரண்டு காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்தி அவை சந்தை கட்­டு­மானப் பணி­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தக்­கூ­டி­யது எனக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதில் ஒரு காணி உட­ன­டி­யாகப் பயன்­ப­டுத்தும் வகையில் உள்­ள­தா­கவும் மற்­றை­யது சில நடை­மு­றை­களைப் பின்­பற்­று­வ­த­னூ­டாக மிகக் குறு­கிய காலத்தில் பயன்­ப­டுத்த முடியும் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

ஆக ஓமந்­தையில் காணி கிடைக்­க­வில்லை எனவே தாண்­டிக்­கு­ளத்தில் சந்­தையை அமை­யுங்கள் என்­கின்ற இவர்­க­ளது வாதம் அடிபட்டுப்­போ­கி­றது.

இவர்­க­ளது இரண்­டா­வது வாத­மான மத்­திய அமைச்சர் ஒருவர் இவ் அபி­வி­ருத்தித் திட்­டத்­தினை வடக்­கிற்கு வெளியே மத­வாச்­சிக்கு கொண்டு செல்ல முயற்­சிக்­கிறார் என்பது உண்­மை­யாக இருந்­தாலும் கூட அதனை சமா­ளித்து வடக்­கிற்­குள்­ளேயே அவ் அபி­வி­ருத்தித் திட்­டத்­தினை வைத்­தி­ருக்கக் கூடிய வல்­லமை கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் இல்­லையா என்­கின்ற கேள்வி எழு­கின்­றது.

பதி­ன்நான்கு  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும்  எதிர்க்­கட்சித்  தலைவர் பத­வி­யி­னையும் தன்­ன­கத்தே கொண்­டுள்ள தமிழ்த்தே­சியக் கூட்­ட­மைப்­பினர்,  தாம் தான் ஜனா­தி­ப­தியைப் பத­விக்­குக்­கொண்டு வந்தோம் என மார்பு தாட்­டிக்­கொண்­டி­ருக்கும் கூட்­ட­மைப்பினர் வெறும் சந்தைக் கட்­டு­மா­னத்தை வடக்­கிற்கு உள்­ளேயே வைத்­தி­ருக்கக் கூடிய அள­விற்கு கையா­லா­கா­த­வர்­களா?

என்­கின்ற கேள்வி எழு­கின்­றது. அது தவிர முன்னர் குறிப்­பிட்­டதைப் போல இச்­சி­றிய விட­யத்தைச் சாதிக்கக் கூடிய சக்தியில்லாதவர்கள்  தமிழ் மக்­க­ளுக்கு  அர­சியல்  தீர்வைப் பெற்றுத்­த­ரு­வார்கள்   என்று எப்­படி நம்­பு­வது?

ஆனால் இவ்­வி­டயம் தொடர்­பாக கூட்­ட­மைப்பைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற மற்றும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு வட­மா­காண முதலமைச்சர் விக்கி­னேஸ்­வரன் அனுப்­பிய கடிதத்தில், இப்­பொ­ரு­ளா­தார மத்­திய நிலையம் வவு­னியா மாவட்­டத்­தி­லேயே அமைக்­கப்­படும் என ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உறு­தி­ய­ளித்­துள்­ளனர்.

எனவே இது வடக்­கிற்கு வெளியே கொண்­டு­செல்­லப்­ப­ட­மாட்­டாது எனக் குறிப்­பிட்­டி­ருந்தார். ஆக, மத்­திய அமைச்­சரின் தலை­யீட்டில் இவ் அபி­வி­ருத்தித் திட்டம் வடக்­கிற்கு வெளியே சென்று விடும் என்­ற­வா­தமும் அடி­பட்டுப் போகி­றது.

இதன் மூலம் தாண்­டிக்­கு­ளத்தை ஆத­ரிக்கும் தமி­ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்த உறுப்­பி­னர்­களால் முன்­வைக்­கப்­பட்ட இரண்டு வாதங்­களும் பொருத்­த­மற்­றது அல்­லது அடிப்­ப­டை­யற்­றது என்­பது தெளிவா­கி­றது.

இதில் புரிந்­து­கொள்ள முடி­யாத விடயம் என்­ன­வென்றால்,

amaisarra
யாழ்.மாவட்­டத்தைப் பிர­தி நி­தித்­து­வப்­ப­டுத்தும்  சர­வ­ண­பவனும் பொது­வாக வன்னித் தேர்தல் மாவட்டம் என்று குறிப்­பி­டப்­பட்­டாலும் கூட, அதில் முல்­லைத்­தீவு மக்­க­ளினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தாகக் கூறிக்­கொண்­டி­ருக்கும் சிவ­மோகன் மற்றும் சாந்­தினி ஸ்ரீஸ்கந்த­ராஜா ஆகியோர் தாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்­க­ளுக்கு ஒப்­பீட்­ட­ளவில் நன்மை பயக்­கக்­கூ­டிய ஓமந்தைப் பிர­தே­சத்தை விடுத்து அதிக தூரத்தில் அமைந்­துள்ள தாண்­டிக்­குளப் பிர­தே­சத்தில் பொரு­ளா­தார மத்­திய நிலையம் அமை­வ­தற்கு ஏன் ஆத­ரவு தெரிவிக்­கி­றார்கள் என்­பதே ஆகும்.

vikiஇது தவிர இவ்­வி­ட­யத்தில் தமி­ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்த பல்­வேறு அர­சி­யல்­வா­திகள் திரை­ம­றைவில் காய் நகர்த்தி வருவதாகவும் அறி­யக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

இவ் விட­யத்தைச் சாட்­டாக வைத்து வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு பாடம் கற்­பிக்க வேண்டும் என்­கின்ற நோக்­கத்­துடன் தமிழரசுக்கட்­சியைச் சேர்ந்த சிலர் திரை­ம­றைவில் இயங்கி வரு­வ­தா­கவும் அவர்கள் ஏனைய உறுப்­பி­னர்­களைத் தொடர்­பு­கொண்டு தாண்­டிக்­கு­ளத்­திற்கு ஆத­ரவு அளிக்­கு­மாறு அழுத்தம் கொடுத்து வரு­வ­தா­கவும் அறிய முடி­கி­றது.

இத்­த­ரப்­பி­ன­ரது நோக்கம் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வ­ர­னுக்கு ஓர் குட்­டுப்­போ­டு­வது மற்றும் கூட்­ட­மைப்பில் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­லுள்ள ஒரு சில­ரது மேலா­திக்­கத்தை வெளிக்­காட்­டு­வது என்­ப­தே­யாகும்.

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைமைப் பத­விக்­கான போட்­டியும் இப்­பி­ரச்­சி­னையின் பின்­ன­ணியில் செல்­வாக்குச் செலுத்­து­வ­தாக அவதானிகள் கருத்­து­ரைக்­கின்­றனர்.

sritharannnவட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிறி­தரன், சிவ­சக்தி ஆனந்தன், சித்­தார்த்தன் ஆகியோர் குறிப்­பிட்­ட­வாறு தாண்­டிக்­கு­ளத்­துடன் ஒப்­பி­டு­மி­டத்து ஓமந்தைப் பிர­தேசம் வடக்கைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் புவி­யியல் ரீதியில் நன்­மை­ய­ளிப்­ப­தாக காணப்­ப­டு­கின்­றது.

அது தவிர அபி­வி­ருத்­தியில் பின்­தங்­கிய ஓமந்தைப் பிர­தே­சத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கும் இத்­திட்டம் உத­வி­ய­ளிப்­ப­தாக அமையும். எதிர்­கா­லத்தில் குறித்த பொரு­ளா­தார மையத்தைச் சுற்றி ஒரு நகரக் கட்­டு­மா­னத்தை விஸ்­த­ரிக்கக் கூடிய காணி­களும் அங்கு காணப்படு­வதால், எதிர்­கால நகர விஸ்­த­ரிப்­பிற்கும் ஓமந்தை பொருத்­த­மா­ன­தாக அமையும்.

மாகா­ண­சபை உறுப்­பினர் ஒருவர் தனது கடி­தத்தில் குறிப்­பிட்­ட­வாறு 2010ஆம் ஆண்டு இடம்­பெற்ற வவு­னியா மாவட்ட ஒருங்கிணைப்­புக்­குழுக் கூட்­டத்தில் பொரு­ளா­தார மத்­திய நிலையம் அமைப்­ப­தற்கு பொருத்­த­மான இட­மாக ஓமந்­தையே தெரிவு செய்யப்பட்டது என்­ப­துவும் இங்கு சுட்­டிக்­காட்­டப்­ப­டத்­தக்­கது.

மறு­பு­றத்தில் தாண்­டிக்­கு­ளத்தில் பொரு­ளா­தார மத்­திய நிலையம் அமைய வேண்டும் என்­ப­தற்கு வலு­வான கார­ணங்கள் எத­னையும் அதனை ஆத­ரிப்­ப­வர்­களால் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என்­பதும் கவ­னிக்­கத்­தக்­கது.

அமைக்­கப்­ப­ட­வுள்ள பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை ஓமந்­தையில் அமைப்­பதே பொருத்­த­மா­னது எனக் கூறு­வ­தற்குச் சாத­க­மாக இத்­த­கைய கார­ணிகள் இருந்தும் கூட தமி­ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்த ஒரு அணியினர் தாண்டிக்குளத்திற்கு அழுத்தம் கொடுப்பது ஏன் என்கின்ற சந்தேகத்தினை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

sampanthanassஇங்கு எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், கடந்த இரு வாரங்களாக பத்திரிகைகளும், ஏனைய ஊடகங்களும், வல்லுநர்களும் பெரும்பாலான விவசாய அமைப்புக்களும் வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைவதே பொருத்தமானது என பல்வேறு விளக்கங்களுடன் எடுத்துக்காட்டியும் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் முடிவுகள் எதனையும் எடுக்காது இழுத்தடித்து வருவதன் மர்மம் என்ன?

இவ்விடயம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது எனத் தெரிந்தும் கூட ஏன் சம்பந்தர் முடிவெடுக்கத் தயங்குகிறார்?

சம்பந்தரிடத்தில் காணப்படுகின்ற முடிவெடுக்க தயங்கும் இத்தகைய போக்கு, மத்திய பொருளாதார நிலைய திட்டத்தை மட்டுமல்ல தமிழ் மக்களது அரசியல் தீர்வையும் பாதிக்கும் என்பது வெளிப்படை.

எனவே அரசியல் காரணங்களைக் கருத்தில் கொள்ளாது, அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கக் கூடிய இடமான ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப் பதற்கான முடிவினை எடுக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் அதன் தலைமையும் முன்வர வேண்டும் என்பதே மக்களது விருப்பமாகும்.

-அருணகிரிநாதன்-

Share.
Leave A Reply