பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நாளை மறுநாள் தான் பதவி விலகப் போவதாகவும்,அதே நாளில் புதிய பிரதமராக தெரேசா மே பதவி ஏற்பாரென டேவிட் கேமரூன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் தொடர்வது குறித்து மேற்கொள்ளப்பட்ட பொதுவாக்கெடுப்பில் , ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதற்கு ஆதரவாக 41.9 சதவீதத்தினரும், எதிராக 51.9 சதவீதத்தினரும் வாக்களித்தனர்.
இதனால் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக போவதாக அறிவித்தார்.
கன்சர்வேடிவ் கட்சியின் சார்பாக புதிய பிரதமரினை தேர்வு செய்ய நடத்தப்பட்ட பிந்திய வாக்கெடுப்பில் ஆண்ட்ரியா லீட்சும் விலகியதை அடுத்து, உள்துறைச் செயலாளர் தெரேஸா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.