Site icon ilakkiyainfo

பொரு­ளா­தார மத்­திய நிலைய சர்ச்சை ஓய்ந்தது கருத்­துக்­க­ணிப்பில் 21 பேர் ஓமந்­தைக்கு ஆத­ரவு

வட ­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலையம் ஓமந்­தை­யிலா அல்­லது தாண்­டிக்­கு­ளத்­திலா அமை­ய­வேண்டும் என்­பது குறித்து எழுந்த சர்ச்­சைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­பி­ரச்­சி­னைக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­காக தமிழ்த் ­தே­சியக் கூட்ட­மைப்பின் வட­மா­காணத்திற்குட்பட்ட பாராளு­மன்ற, மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் நடத்­தப்­பட்ட கருத்­துக்­க­ணிப்­புக்கான வாக்­கெ­டுப்பில் 21 மக்கள் பிர­திநி­திகள் ஓமந்­தையில் அமைவதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­தோடு, 5 மக்கள் பிர­தி­நி­திகள் எதி­ராக வாக்­க­ளித்தனர்.

மேலும், 14பேர் வாக்­கெ­டுப்பில் பங்­கெ­டுக்­க­வில்லை. அந்­த­வ­கையில் ஓமந்­தைக்கு அதிக ஆத­ரவு கிடைத்­துள்­ளது.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் வட­மா­காண பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிறி­தரன், சிவ­சக்தி ஆனந்தன், சித்­தார்த்தன் ஆகியோரும் வடக்கு முதல்வர் சி.விக்­கி­னேஸ்­வரன் உள்­ள­டங்­க­லாக 18 மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களும் ஓமந்­தைக்கு ஆத­ர­வாக வாக்க­ளித்­துள்­ளனர்.

சிவ­மோகன், சாந்­தி­ ஸ்ரீஸ்­கந்­த­ராஜா ஆகிய இரண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட்­பட மூன்று மாகாண சபை உறுப்­பி­னர்கள் தாண்டிக்­கு­ளத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளனர்.

முன்­ன­தாக பொரு­ளா­தா­ரத்தை வலு­ப­டுத்தும் நோக்கில் நாடா­ளா­விய ரீதியில் பொரு­ளா­தார மத்­திய நிலை­யங்­களை அமைக்கும் செயற்­றிட்­டத்தின் கீழ் அர­சாங்கம் வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை வுனி­யாவில் அமைப்­ப­தற்­காக 200மில்லியன் ரூபாவை ஒதுக்­கீடு செய்­தி­ருந்­தது.

அதே­நேரம் 2010ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் திகதி அப்­போ­தைய ஆளுநர் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி மற்றும் அமைச்சர் ரிசாட் பதி­யூதீன் தலைமையில் நடை­பெற்ற வவு­னியா ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்­டத்­தின்­பொது ஓமந்­தையில் உள்ள அரச வீட்­டுத்­திட்­டத்­திற்கு அண்மை­யா­க­வுள்ள காணியில் வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை அமைப்­ப­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும் அண்­மைய காலத்தில் பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை தாண்­டிக்­கு­ளத்தில் அமைக்­க­வேண்­டு­மென்ற கருத்­துக்கள் தமிழ்த்தே­சியக் கூட்­ட­மைப்­பினுள் மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றன.

இதனால் கூட்­ட­மைப்­பினுள் இரண்டு கருத்­துக்கள் எழுந்­த­மை­யினால் சர்ச்­சைகள் எழுந்­தி­ருந்­தன.

அதே­நேரம் ஓமந்­தை­யி­லேயே அமை­ய­வேண்­டு­மென இப்­ப­குதி தொடர்­பாக ஆராய்ந்த நிபு­ணர்­குழு அறிக்­கையில் கூறப்பட்டிருந்ததோடு வட­மா­காண விவ­சாய அமைப்­புக்­களும், புத்­தி­ஜீ­வி­களும் வலி­யு­றுத்த ஆரம்­பித்­தனர்.

இவ்­வா­றான நிலையில் கடந்த 3ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்­பந்தன், மற்றும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் ஆகி­யோரின் தலை­மையில் கொழும்­பி­லுள்ள எதிர்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் விசேட கூட்டம் நடை­பெற்­றி­ருந்­தது.

இக்­கூட்­டத்தின் போது பொரு­ளா­தார மத்திய நிலை­யத்தை எங்கு அமைப்­பது என்­பது குறித்து ஜன­நா­யக அடிப்­ப­டையில் முடிவொன்றைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வடமாகா­ணத்தைச் சேர்ந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ரி­டத்தில் கருத்­துக்­க­ணிப்பை நடத்­து­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அதற்­கி­டையில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா தலை­மையில் வடக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பங்­கேற்ற கூட்­ட­மொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­டத்­தொ­கு­தியில் நடைபெற்றி­ருந்­தது.

இக்­கூட்­டத்தில் ஓமந்­தை­யி­லேயே அமை­ய­வேண்­டு­மென பெரும்­பான்­மை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் வலி­யு­றுத்­தப்­பட்ட நிலையில் வவு­னி­யாவில் பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை அமைப்­ப­தற்­கு­ரிய இடங்­களை பார்­வை­யி­டு­வ­தெ­னவும் வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுடன் விசேட சந்­திப்பைச் செய்­வ­தெ­னவும் முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

அத­னை­ய­டுத்து கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று ஓமந்­தைக்குச் சென்ற மாவை.சேனா­தி­ராஜா எம்.பி ஓமந்தை மற்றும் தாண்­டிக்­கு­ளத்தில் உள்ள காணி­களை நேரில் பார்­வை­யிட்­டி­ருந்த நிலையில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை வடக்கு முதல்வர் சி.வி.யைச் சந்தித்தி­ருந்தார்.

இதன்­போது குறித்த விடயம் தொடர்­பாக நீண்ட கலந்­த­ரை­யாடல் இடம்­பெற்­றி­ருந்­தது.

முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் ஓமந்­தையில் ஏற்­க­னவே தெரிவு செய்­யப்­பட்ட இடத்தில் பொரு­ளா­தார மத்­திய நிலையம் அமைக்கப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கான கார­ணங்­களை தெளி­வா­கவும் விரி­வா­கவும் எடுத்­து­ரைத்தார்.

இத­னை­ய­டுத்து குறித்த விடயம் தொடர்பில் நீங்­களே இறுதி முடி­வெ­டுங்கள் என முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ர­னிடம் மாவை.சேனாதிராஜா எம்.பி பொறுப்பை ஒப்­ப­டைந்­தி­ருந்­த­தோடு நாளை புதன்­கி­ழமை எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்­தனை விககினேஸ்­வரன் நேரில் சந்­திக்­கும்­போது இறுதி முடிவை எடுத்து பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தெ­னவும் கூறி­யி­ருந்தார்.

இவ்­வா­றி­ருக்­கையில், ஏற்­க­னவே எதிர்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான கூட்­டத்தில் தீர்­மா­னத்­திற்கு அமை­வாக உறுப்­பி­னர்கள் தமது கருத்­துக்­களை பதிவு செய்­வ­தற்­காக வட­மா­கா­ணத்தின் 10 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும்,  29 வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கும் பதி­வுத்­தபால் ஊடாக விண்­ணப்­பங்­களை அனுப்பி வைத்­தி­ருந்தார்.

நேற்று திங்­கட்­கி­ழமை நண்­பகல் 12 மணி­யுடன் கருத்­துக்­களை தெரி­விப்­ப­தற்­கான கால எல்லை நிறை­வ­டைந்­தி­ருந்த நிலையில் சிறிதரன், சித்தார்த்தன், சிவசக்தி அனந்தன், சாந்தி ஸ்ரீறிஸ்கந்தராஜா, சிவமோகன் ஆகிய ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு முதல்வர் உட்பட 21மாகாண சபை உறுப்பினர்களும் தமது வாக்குகளை வழங்கியிருந்தனர்.

அதன் பிராகரம் சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன் ஆகிய எம்.பிக்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்தலைமையிலான வடக்கு மாகாண சபை குழு, விவசாய அமைப்புக்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திய ஓமந்தை பகுதிக்கே பெரும்பான்மை கிட்டியுள்ளது.

இதனையடுத்து வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version