ilakkiyainfo

மயங்கி வீழ்ந்த காவலரை காப்பாற்றுவதற்காக கூண்டை உடைத்து வெளியே வந்த கைதிகள் (வீடியோ இணைப்பு)

மயங்கி வீழ்ந்த சிறைக்காவலர் ஒருவரை காப்பாற்றுவதற்காக கைதிகள் பலர் தாம் அடைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

178921

டெக்ஸாஸ் மாநிலத்தின் வெதர்போர்ட் நகரிலுள்ள சிறைச்சாலையில் கைதிகள் பலர் ஓர் கூண்டுக்குள் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது, அக் கூண்டுக்கு வெளியே காவலில் இருந்த ஆயுதமேந்திய சிறைக்காவலர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்தார்.

அப் பகுதியில் வேறு காவலர்கள் எவரும் இருக்கவில்லை. இந்நிலையில், மேற்படி சிறைக்காவலரின் உயிரைக் காப்பாற்று வதற்காக தமது சிறைக் கூண்டு கதவை பலவந்தமாக திறந்துகொண்டு வெளியே வந்து அபாய ஒலி எழுப்பினர்.

 

சிறைக் கூண்டை உடைத்துக்கொண்டு வெளியே வருவதன் மூலம் கைதி களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய அபாயம் இருந்தது. எனினும், கைவிலங்கிடப்பட்ட நிலையில் கைதிகள் பலர் வெளியே வந்தனர்.

அதன்பின் ஏனைய அதிகாரிகள் அங்குவந்து மேற்படி சிறைக்காவலருக்கு முதலுதவி அளித்தனர். கடந்த மாதம் நடைபெற்ற இச் சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மேற்படி சிறைக்காவலர் மயங்கி வீழ்ந்தபோது அவர் நடிக்கிறார் என்றே கைதிகள் ஆரம்பத்தில் எண்ணினராம். ஆனால், சிறிது நேரத்தின் பின் நிலைமையை அவர்கள் உணர்ந்து கொண்டனர் என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூண்டிலிருந்து வெளியே வந்ததால் தாம் சுடப்படக்கூடும் என அஞ்சியதாக கைதி ஒருவர் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும், கூண்டை உடைத்து கைதிகள் பலவந்தமாக வெளியே வந்த  சம்பவத்தை அடுத்து, அப் பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளதாம்.

வீடியோவை கீழே காணலாம் :

Exit mobile version