ஸ்பெய்னில் நடைபெறும் வருடாந்த காளைச் சண்டையில் பங்குபற்றிய பிரபல வீரர் ஒருவர், காளையினால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.
விக்டர் பாரியோ தொழில் சார் காளை அடக்கும் வீரரே இவ்வாறு உயிரிழந் துள்ளார்.
ஸ்பெய்னின் டேருவெல் நகரில் நேற்று முன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றது.
ஸ்பெய்னில் பாரம்பரிய காளைச் சண்டை (Bull Fight) மற்றும் காளை ஓட்டப் (Bull Run) போட்டிகள் பிரசித்தமானவையாகும்.
அண்மைக் காலமாக மிருக உரிமை ஆர்வலர்கள் இப் போட்டி களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனினும், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இப் போட்டிகள் நடைபெறு கின்றன.
பல்வேறு கேளிக்கைகள் இடம்பெறும் இவ் விழாவை பார்ப்பதற்கு வெளிநாட் டவர்கள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் திரள்வர்.
காளைகளினால் தாக்கப்பட்டு மெட்டாடோர் (Matador) என அழைக்கப்படும் வீரர்களும் பார்வையாளர்களும் காயமடையும் சம்பவங்களும் இடம் பெறுவதுண்டு.
நேற்று முன்தினம் நடைபெற்ற காளைச்சண்டை போட்டியில் பங்குபற்றிக் கொண்டிருந்த விக்டர் பாரியோவை காளை தனது கொம்புகளால் குத்திக் கிழித்தது.
சுமார் 500 கிலோகிராம் எடைகொண்ட இந்த காளையின் கவனத்தை திசை திருப்புவதற்கு அங்கிருந்த ஏனைய வீரர்கள் முயற்சித்தனர்.
எனினும், விக்டர் பாரியோ படுகாயமடைந்தார். பின்னர் அவர் களத்திலிருந்து தூக்கிச் செல்லப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக் கப்பட்டார்.
எனினும், அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. 2008 ஆம் ஆண்டு தொழில்சார் காளை அடக்கும் வீராக (Matador) விக்டர் பாரியோ அறிமுகமானார்.
அவரின் மரணத்துக்கு ஸ்பெய்னின் பிரதர் மரியானோ ரஜோய் பிறேவும் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
21 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய காளைச்சண்டைப் போட்டிகளின்போது வீரர் ஒருவர் உயிரிழந்தமை இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன் 1985 ஆம் ஆண்டு 21 வயதான ஜோஸ் கியூபெரோவின் இதயத்தில் மாடொன்று கொம்பி னால் குத்தியால் உயிரிழந்திருந்தார்.
கடந்த வருடம் ஸ்பெய்னின் பிரபல காளைச்சண்டையில் ரிவேரா ஒர்டோனெஸ் படுகாயமடைந்தார்.
ரிவேராவின் தந்தை 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது உயிரிழந்தார். இதேவேளை, மிருக உரிமைகளுக்காக போராடி வரும் PETA அமைப்பின் ஆண், பெண் தொண்டர்கள் ஸ்பானிய காளைச்சண்டை மற்றும் காளை ஓட்டப் போட்டிகளுக்கு எதிராக அரைநிர்வாண கோலத்தில் வரிசை யில் நின்று போலி இரத்தத்தை உடலில் ஊற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Barrio’s wife, Raquel Sanz, pictured, was in the crowd watching the horrific incident with friends
