ஹன்சிகா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். தமிழில் தற்போதைக்கு ஜெயம் ரவியுடன் இணைந்து ‘போகன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு சமூக சேவைகளிலும் ஹன்சிகா ஈடுபட்டு வருகிறார். தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
அதோடு மட்டுமில்லாமல், ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், இன்று சமூக வலைத்தளங்களில் ஹன்சிகா, இரவு நேரத்தில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு போர்வை மற்றும் துணி மணிகளை கொடுப்பது போலவும். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்குவது போலவும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
ஹன்சிகாவே நேரில் களத்தில் இறங்கி இந்த உதவிகளை செய்யும் காணொளி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த காணொளியை பார்த்த பலரும் ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருமண பந்தத்தில் இணையும் பிரபல நாயகி!! காணொளி..
“Yeh Hai Mohabbatein’s” என்ற ஹிந்தி நாடகத்தின் நாயகி திவ்யங்கா திரிபதிக்கு நேற்றைய தினம் திருமணம் .
சீரியல்களில் நடித்துவரும் இவர் விவேக் தஹியா என்பவரை காதலித்திருக்கிறார்.
இவரும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இவர்களது காதலுக்கு பெற்றோர்களிடம் இருந்து பச்சை கொடி கிடைக்க கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ நடைபெற்றுள்ளது.
திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி நாளைய தினம் நடக்க இருக்கிறது.
இந்த சீரியலின் தமிழ் ரீமேக் தான் “கல்யாணம் முதல் காதல்” வரை, சிங்கள ரீமேக் “மே ஆதரே” தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண பந்தத்தில் இணைந்த காணொளி இணைப்பு..