ஈரான் நாட்டில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் என பொலிசார் வலியுறுத்தி வருவதால் அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் தற்போது பர்தா அணிந்து போராடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டில் கடந்த 1979ம் ஆண்டில் நிகழ்ந்த இஸ்லாமிய புரட்சியை தொடர்ந்து பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் தலையை மறைக்கும் பர்தாவை அணிவது அவசியமாகி வருகிறது.
எனினும், அண்மைக் காலங்களில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயமாக்கியுள்ளதுடன், இதனை பின்பற்ற தவறும் பெண்களுக்கு அபராதம் மற்றும் சிறை என கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பர்தா அணியாத பெண்கள் பாலியல் தாக்குதலுக்கும் உள்ளாக வாய்ப்புள்ளதால் அதனை அவசியம் பெண்கள் அணிய வேண்டும் என பொலிசார் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் முதல் தங்களுடைய மனைவி, சகோதரி, தோழி உள்ளிட்ட பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆண்களும் பர்தா அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள Masih Alinejad என்ற பெண் ஊடகவியலாளர் வலியுறுத்தியுள்ளதை தொடர்ந்து தற்போது ஈரான் நாட்டு ஆண்கள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.