ilakkiyainfo

சுவிஸில் தனியொரு மீனை வளர்த்தால் தண்டனை!

வீடுகளிலும் அலுவலக ங்களிலும் கோல்ட்பிஷ் போன்ற அலங்கார மீன்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கு பலர் விரும்புகின்றனர்.

சிலவேளை, தமக்குப் பிடித்த ஒரு மீனை மாத்திரம் போத்தல்கள் மற்றும் சிறு தொட்டியில் வைத்து வளர்ப்பவர்களும் உள்ளனர்.

ஆனால், சுவிட்ஸர்லாந்தில் இவ்வாறு தனியொரு மீனை வளர்த்தால் நீதிமன்றத்தில் குற்றவாளியாகக் காணப்படலாம்.

ஏனெனில், சுவிட்ஸர்லாந்தில் 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மிருக உரிமைச் சட்டத்தின்படி, மீன் ஒரு “சமூக” உயிரினம் என்பதால் மீனொன்றை தனியாக வளர்க்க முடியாது.

 குறைந்தபட்சம் துணையொன்றையும் சேர்த்து இரு மீன்களாக வளர்க்க வேண்டும். மீன்களுக்கு மாத்திரமல்ல கிளி போன்றவற்றையும் தனித்து அடைத்து வளர்க்க முடியாது.

18261fish-2

பூனையொன்றை வளர்ப்பதானால் அப் பூனை ஏனைய பூனைகளுடன் இணைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் வெளியில் சென்றுவர அனுமதிக்க வேண்டும்.

வீட்டுக்குள்ளேயே அடைத்து வளர்ப்பதானால் குறைந்தபட்சம் இரு பூனைகளை வளர்க்க வேண்டும்.

Exit mobile version