குமா­ர­புரம் படு­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­குங்கள். இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்­பாக உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் அதிக கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

இது அரசு தரப்பு சட்­டத்­த­ரணி சுதர்­சன டீ. சில்­வாவின் வாதம்.

திடீ­ரென சூடு விழுந்­தது. அப்­போது என் மகள் சூடு­பட்ட நிலையில் எனது கையில் விழுந்து தண்ணீ தண்­ணீ­யென கத­றி­ய­ழுதாள்.

விடிய விடிய ஏதும் செய்­ய­மு­டி­யா­த­படி என் பிள்­ளையை கையில் தாங்­கி­யி­ருந்தேன். விடி­யும்­போது அவள் செத்­துக்­கி­டந்தாள். இது ஒரு அம்­மாவின் கதை.

நானும் தன­லட்­சுமி அக்­காவும் பாரதிபுரத்­தி­லி­ருந்து கிளி­வெட்­டிக்கு டியூ­ஷ­னுக்குப் போய்­வ­ருவோம்.

என்னை அவள்தான் சைக்­கிளில் ஏந்­தி­வ­ருவாள். சம்­பவம் நடை­பெற்ற தினம் நாமி­ரு­வரும் குமா­ர­பு­ரம் ­ப­கு­திக்கு வரும்­போது இரா­ணு­வத்­தினர் தாறு­மா­றாக சுட்­ட­வண்ணம் எம் எதிரே வந்­தனர்.

பாது­காப்புத் தேடி தேநீர்க் கடைக்குள் புகுந்தோம். எம்­முடன் பலர் புகுந்­தனர். இரா­ணு­வத்­தினர் சுற்­றி­வ­ளைத்து நின்று சுட்­டார்கள். நான் கீழே விழுந்து படுத்­து­விட்டேன்.

சுட்­ட­வெ­டிகள் என் காலில் பட்டு நான் மயங்­கி­விட்டேன். மறுநாள் தான் தெரியும் அக்கா தன­லட்­சுமி வல்­லு­ற­வுக்குட்­ப­டுத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கிறாள் என்று.

நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்த ஜோசப் மோசஸ் அன்­ட­னியின் வாக்­கு­மூலம் இது வீதி­­வழி இரா­ணுவம் துப்­பாக்கி வேட்­டுக்­களை தீர்த்த வண்ணம் வந்­த­போது பயத்தின் கார­ண­மாக சுமார் 20 பேர் எனது கடைக்குள் புகுந்­தனர்.

பூட்­டப்­பட்ட கடைக்­க­தவின் ஓட்­டைக்­குள்ளால் கபில என்­பவன் சுட்டான். பின்னர் கதவை உடைத்து சுட்டான். பலர் ஸ்தலத்­தி­லேயே இறந்­தனர். இச்­சம்­ப­வத்தில் சீர­ழிக்­கப்­பட்ட 16 வயது நிரம்­பிய மாணவி அரு­மைத்­துரை தன­லட்­சு­மியும் எனது கடைக்குள் ஒளிந்து இருந்தாள்.

எல்­லோரும் வெளியே ஓடிய போதும் அவள் கடைக்குள் இருந்தாள். அவளை இரா­ணு­வத்­தினர் இழுத்துச் சென்று அரு­கி­லுள்ள பாழ­டைந்த பால்­சே­க­ரிப்பு நிலை­யத்­துக்குள் வைத்து துஷ்­பி­ர­யோகம் செய்­துள்­ளனர்.

மறுநாள் பார்த்­த­போது குறித்த பெண்ணின் உடல் பனை­யோ­லையால் மூடப்­பட்­டி­ருந்­தது. தேநீர்க் கடை வீர­சா­மி­காளி முத்­து­வினால் (11.06.2015) அளிக்­கப்­பட்ட சாட்­சி­ய­மிது.

160727160611_kumarapuram_judgement2_640x360_bbc_nocreditஇரு­பது வரு­டங்­க­ளுக்கு முன் (1996 பெப்­ர­வரி 11) கிளி­வெட்டி கிரா­மத்­துக்கு  அரு­கி­லி­ருக்கும் தெஹி­வத்தை இரா­ணுவ முகாமைச்சேர்ந்த இரா­ணு­வத்­தினர்  மது­போ­தையில் குமா­ர­புரம் என்னும் கிரா­மத்­துக்குள் புகுந்து   மூர்க்­கத்­த­ன­மாக  துப்­பாக்கிப்  பிரயோகம் செய்து 26 அப்­பாவி பொது­மக்­களை படு­கொலை செய்த  “குமா­ர­புரம் படு­கொலை” சம்­பந்­த­மான விசா­ர­ணைகள் சுமார் 20 வரு­டங்­க­ளுக்குப் பிறகு (2016 ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்­களில்) அநு­ரா­த­புரம் மேல்­நீ­தி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போதே அழைப்­பாணை விடுக்­கப்­பட்ட சாட்­சி­யாளர்கள் மேற்­படி சாட்­சி­யங்­களை அளித்­துள்­ளனர்.

அனு­ரா­த­புரம் மேல்­ நீ­தி­மன்­றத்­தினால் முன்னாள் தெஹி­வத்தை இரா­ணுவ முகா­மைச்­சேர்ந்த 6 இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக தலா 101 குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்ட நிலையில் மேற்­படி வழக்கு ஜூரி சபை முன் விசா­ரிக்­கப்­பட்ட போது,

இதற்­கான சாட்­சி­யங்­களை மூதூர் பொலிஸார் நெறிப்­ப­டுத்தி அனு­ரா­த­புரம் மேல்­நீ­தி­மன்றில் நடை­பெற்ற விசா­ர­ணை­யின்­போது ஆஜர்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

சம்­ப­வங்­களை நேரில் கண்­ட­வர்கள், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் என 20 பேருக்கு சாட்­சி­யா­ளர்­க­ளாக அழைப்பு விடுக்­கப்­பட்­ட­போதும் நான்­குபேர் மர­ணித்த கார­ணத்­தினால் 16 பேர் சாட்­சி­ய­ம­ளித்­தனர்.

மாரி­முத்து மகேஸ்­வரன் (58), மகேஸ்­வரன் சுகந்­தினி (24), ஜே.ஜெய­நாதன் (46), சிவ­குணம் புவி­தரன் (42), இரா­ச­துரை சத்­தி­ய­பாமா (37), கண­பதிப் பிள்ளை குமு­தினி (45), நந்­த­கோபால் நாக நந்­தினி (32), அழ­கு­துரை புவ­னேந்­தினி (23), திருப்­பதி மஞ்­சுளா தேவி (24), மாரி­முத்து துரை­ராஜா (60), லட்­சுமி (49), இரா­சையா நாகேஸ்­வரி, வீர­சாமி காளி­முத்து, நட­ராஜா தவ­மணி, தங்­கவேல் மருதாய், கண­பதிப் பிள்ளை சிவ­னேசன், தங்­கவேல் கோணேஷ்­வரன் (37), ஸ்டீபன் லட்­சுமி, ஜோசப் மோசஸ் அன்­டனி, சுப்­பி­ர­ம­ணியம் இரா­ச­லிங்கம் ஆகி­யோ­ரு­டைய சாட்­சி­யங்கள் நீதி­மன்றில் அளிக்­கப்­பட்­டன.

சாட்­சியம் அளித்­த­வர்­களின் வய­து­களை 20 வரு­டங்கள் கழித்துப் பார்ப்­போ­மாயின் சம்­பவம் நடை­பெற்ற காலத்து வய­து­களைத் தெரிந்­து­கொள்ள முடியும்.

குமா­ர­பு­ரக்­கி­ராமம், திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு நெடுஞ்­சா­லையில் (ஏ.15) கிளி­வெட்டி கிரா­மத்­தி­லி­ருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் வடக்குப் பக்­க­மாக மூதூ­ரையும் எல்­லைப்­ப­டுத்­தி­யி­ருக்கும் ஒரு குக்­கி­ரா­ம­மாகும்.

1981 ஆம் ஆண்­ட­ளவில் இக்­கி­ராமம் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அரு­ணா­சலம் தங்­கத்­து­ரையின் சகோ­த­ர­ரான குமா­ர­து­ரை­ய­ால் 46, ஏழைக் குடும்­பங்­க­ளுக்­கென உரு­வாக்­கப்­பட்ட கிரா­ம­மாகும்.

குமா­ர­புரம் படு­கொலைச் சம்­பவம் நடை­பெற்ற காலத்தில் இக்­கி­ரா­மத்தில் சுமார் 74 குடும்­பங்கள் இருந்­த­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

மிக­மிக மோச­மான வறு­மை­கொண்ட இக்­கி­ராம மக்கள் மலை­யக வம்­சா­வ­ளியை பூர்­வீ­க­மாகக் கொண்­ட­வர்­க­ளா­கவும் அயல் கிராமங்களின் கூலி­க­ளா­கவும் வாழ்ந்து வந்­தி­ருக்­கி­றார்கள்.

தெற்கே­ அல்­லைக்­கு­ளமும் வடக்கே வளம் கொண்ட வயல்­வெ­ளிகளும் கிழக்கே நெற்­சந்­தைப்­ப­டுத்தும் பாரிய கட்­டடமும் மேற்­கே வயல்­வெ­ளிகளும் கொண்ட இக்­கி­ரா­மத்தில் ஓலைக்­கொட்­டில்­க­ளிலும் குச்சு வீடு­க­ளிலும் நாக­ரிகம் உள்­நு­ழை­யாத இக்­கி­ரா­மத்தில் வாழ்ந்த மக்கள் தான் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

குமா­ர­புரம் படு­கொ­லைகள் (11.02.1996) எவ்­வாறு நடந்­தது என்­பது பற்­றிய பின்­ன­ணியை மக்கள் தெரி­வித்த தக­வல்­களின் அடிப்­ப­டையில் உத்­தி­யோ­கப்­பற்றற்ற முறையில் இவ்­வாறு தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

குமா­ர­பு­ரத்­துக்கு மிக அருகில் இருக்கும் ஒரு சிங்­க­ளக்­கி­ராமம் தெஹி­வத்தை கிளி­வெட்­டி­யி­லுள்ள இரா­ணுவ முகா­முக்கு சம்­பவ தினம் மாலை (11.02.1996) மாலை­யு­ணவு தெஹி­வத்தை இரா­ணுவ முகா­மி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கி­றது.

இது தினந்­தோறும் நடை­பெற்­று­வ­ரு­வது வழக்கம். சம்­ப­வ­தினம் சி.ஐ.டி.பாலம் என அழைக்­கப்­படும் பாலத்தின் கீழ் மறைந்­தி­ருந்த ஆயுத­தா­ரி­களால் உணவு கொண்­டு­வந்த இரு இரா­ணுவ வீரர்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இரா­ணுவ வீரர்கள் ஸ்தலத்­தி­லேயே பலி­யா­னார்கள்.

muthoorஆயு­த­தா­ரிகள் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­து­விட்டு குறுக்­குப்­பாதை வழி­யாக மேற்­படி குமா­ர­புரம் கிரா­மத்­துக்குள் வந்து ஒளிந்திருப்பதாக வதந்­திகள் பரப்­பப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இச் செய்­திகள் பெரும்­பான்மை சமூ­கத்தை சேர்ந்­த­வர்­களால் இல்­லா­ததும் பொல்­லா­த­து­மாக தெஹி­வத்தை இரா­ணுவ முகா­முக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இரா­ணுவ வீரர்கள் இருவர் ஆயுத தாரி­க­ளினால் சுடப்­பட்­டதன் எதி­ரொலி சுமார் 60 நிமி­டங்­க­ளுக்குள் பிர­தி­ப­லிக்கத் தொடங்­கி­யது.

தெஹி­வத்தை இரா­ணுவ முகா­மி­லி­ருந்து சாரி­சா­ரி­யாக குமா­ர­பு­ரத்தை நோக்கி ஓடி வந்த இரா­ணுவ வீரர்கள் வழி­நெ­டுக துப்­பாக்கிப் பிரயோகம் செய்த வண்ணம் காட்டுமிராண்­டித்­த­ன­மாக நடந்து கொண்­டார்கள்.

மக்கள் தெரி­வித்த தக­வல்­க­ளின்­படி வானை பிளக்கும் அள­வுக்கு துப்­பாக்கி வேட்­டுக்கள் தீர்க்­கப்­பட்­டன.

எதிரே வந்த மக்கள் கண்மண் தெரி­யாமல் சுடப்­பட்­டார்கள். அவ­லக்­கு­ரல்­க­ளுடன் அங்கும் இங்கும் பீதி­யோடு ஓடும் மக்கள் கூட்­டத்தை நோக்கி ஈவி­ரக்­க­மின்றி துப்­பாக்கி பிர­யோ­கங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

அன்­றைய படு­கொ­லையில் குமா­ர­பு­ரத்தைச் சேர்ந்த அப்­பாவி பொது­மக்கள் 26பேர் மேற்­படி இரா­ணுவத் தாண்­ட­வத்­துக்கு பலி­யா­னார்கள். சு.சிவ­ராஜா (70), கி.கோவிந்தன் (72), சி.சின்னத் துரை (56), வ.நட­ராஜா (22), சு.லட்­சுமி (35),

அ.கம­லா­தேவி (35), சு.பாக்­கியம் (30), அ.வள்­ளிப்­பிள்ளை (28), செ.பாக்­கியம் (26), பாக்­கி­ய­ராஜா வசந்­தினி (6), ஆ.அன்­னம்மா, ச.தன­லட்­சுமி (16), ரா.கம­லேஸ்­வரி (13), த.கலா (12), அ.ரஜி­னி­காந்தி (10), தீ.பத்­மினி ( 9), சி.பிர­சாந்­தினி (6), சு.சுபா­ஜினி (3), து.கரு­ணா­கரன் (15), க.சுவா­தி­ராஜா (15), வி.சுதா­கரன் (14), த.நிஷாந்தன் (11), சு.பிர­பா­கரன் (11), அ.பரமேஸ் (30).

இச்­சம்ப­வத்தில் சிறுவர் கள், ஆண்கள், பெண்கள் என 26 பேர் படு­கொ­டூ­ர­மாகக் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இதில் ஒரு பாட­சாலை மாணவி வல்­லு­ற­வுக்குட்­ப­டுத்­தப்­பட்டு படு­மோ­ச­மாக கொல்­லப்­பட்­ட­தாக சாட்­சி­யங்கள் தெரி­வித்­தி­ருந்­தன.

காய்­க­றித்­தோட்­டத்­துக்கு நீர்­பாய்ச்ச சென்ற கண­வனை விடி­ய­வ­ருவார், ஒளிச்­சி­ருந்து வருவார், உயிர்­தப்­பி­வ­ருவார் என விடிய, விடிய காத்­தி­ருந்த மனைவி எப்ப விடி­யு­மெனக் காத்­தி­ருந்த மனை­விக்கு கணவன் தோட்­டத்தில் ஒரு மூலையில் நூற்றுக் கணக்­கான சன்னங்கள் பாய்ந்­தி­ருக்க கோடரியால் சிதைக்­கப்­பட்டு பாம்பு புற்று அருகே விவசாயி சிவக்­கொ­ழுந்து சின்­னத்­துரை (58) படு­கொலை செய்­யப்­பட்டுக் கிடந்­தமை. எனது பிள்­ளையை சுட்­டு­விட்­டார்கள் சுட்­டு­விட்­டார்கள் என கத­றிக்­கொண்டு தகப்பன் ஒருவர் தனது 12 வய­து­பிள்­ளை­களை கையில் தூக்­கி­ய­படி ஓடிக் கொண்­டி­ருந்த காட்சி.

அழ­கான அந்த கும­ரிப்­பிள்ளை தனது கிரா­ம­மான பார­தி­பு­ரத்­தி­லி­ருந்து கிளி­வெட்­டிக்கு டியூ­ஷ­னுக்கு போய் திரும்பிக் கொண்டிருந்தவேளை இடையில் அ­கப்­பட்டுக் கொண்ட இப்பெண் (தன­லட்­சுமி) பாலியல் கொடு­மையின் அட்­டூ­ழி­யங்கள் உட­லெல்லாம் எழுதப்பட்ட நிலையில் படு­கொலை செய்­யப்­பட்­டமை போன்ற அந்த மரணத் திரு­விழா பற்றி குமா­ர­புரம் மக்கள் கண்­ணீ­ரோடு உரைப்­பதைக் கேட்க முடியும்.

குமா­ர­புரச் சம்­பவம் நடை­பெற்று சுமார் நான்கைந்து நாட்­க­ளுக்குப் பின் ஒரு இரா­ணுவ வீரர் கிரா­மத்­துக்குள் வந்து இப்­படிக் கூறி­யி­ருக்­கிறார்.

நானே அப்­பெண்ணைச் சுட்டேன். அவள் எமது சகாக்­களால் கற்­ப­ழிக்­கப்­பட்ட கொடு­மையை என்னால் பார்க்க முடி­ய­வில்லை. தாங்கிக் கொண்­டி­ருக்க முடி­ய­வில்லை. அப் பெண் உயி­ரோடு இருப்­பதில் இனி எவ்­வித பய­னு­மில்­லை­யென்ற காருண்ய நோக்கில் காருண்யக் கொலை செய்தேன்.

அவ்­வ­ளவு கொடுமை நிறைந்த சம்­ப­வ­மிது. நடை­பெற்ற கொடு­மையை என்னால் தடுக்க முடி­யாமல் போய்­விட்­டது. சகிக்­க­மு­டி­யாத நிலை­யி­லையே சுட்டேன் என அந்த இரா­ணுவ வீரர் மக்­க­ளிடம் கூறி­ய­தாக குமா­ர­பு­ர­வாசி ஒருவர் தெரி­வித்தார்.

சம்­பவம் நடை­பெற்­றதைக் கேள்­வி­யுற்ற அன்­றைய திரு­கோ­ண­மலை மாவட்ட பாராளு­மன்ற உறுப்­பினர் அமரர் அ.தங்­கத்­துரை சம்­பவ இடத்­துக்குச் சென்று மர­ணித்த உடல்­களை மூதூர் வைத்­தி­ய­சா­லையில் சேர்ப்­பித்து உற­வி­னர்­களால் அடை­யாளம் காட்­டப்­பட்­டது.

இச்­சம்­பவம் நடை­பெற்ற மறு­வாரம் மூதூர் நீதி­பதி சுவர்­ண­ராஜா முன்­னி­லையில் அடை­யாள அணிவகுப்­பொன்று நடத்­தப்­பட்­டது. இதன்­போது குறித்த தெஹி­வத்தை இரா­ணுவ முகாமைச் சேர்ந்த 9 படை­வீரர்கள் கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­களால் அடை­யாளம் காணப்­பட்டு மூதூர் நீதி­மன்றில் வழக்குத் தொட­ரப்­பட்­டது.

ஆரம்­பத்தில் மூதூர் நீதி­மன்றில் விவ­சா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட குமா­ர­புரம் கொலை­வ­ழக்கு பின்பு திரு­கோ­ண­மலை மேல்நீதி­மன்­றுக்கு மாற்­றப்­பட்டு எதி­ரி­க­ளான இரா­ணுவ வீரர்கள் திரு­கோ­ண­மலை பாது­காப்பு பற்றி சந்­தேகம் தெரி­வித்­ததன் பேரில் மேற்­படி வழக்கு 2012 ஆம் ஆண்டு அனு­ரா­த­புர மேல் நீதி­மன்­றுக்கு மாற்­றப்­பட்­டது.

அனு­ரா­த­புர நீதி­மன்றில் குமா­ர­பு­ரத்தைச் சேர்ந்த சாட்­சி­யங்கள் அழைக்­கப்­பட்டு 15 தட­வை­க­ளுக்கு மேல் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டி­ருந்த போதும் தீர்ப்பு வழங்­கப்­ப­டாமல் கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு மேலாக கிடப்பில் இருந்த குமா­ர­புரம் படு­கொலை வழக்கு கடந்த ஜூன் மாதம் (2016) முதல் மீண்டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

நீதி­மன்­றினால் 20 சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு அழைப்­பாணை விடுக்­கப்­பட்ட போதும் நான்கு பேர் இறந்­து­விட்ட கார­ணத்­தினால் 16 பேரே சாட்சி­ய­ம­ளித்­துள்­ளனர்.

இதே போன்று படைத்­த­ரப்பில் சந்­தே­கத்தின் பேரில் 8 இரா­ணுவ வீரர்கள் பொது­மக்­களால் அடை­யாளம் காணப்­பட்­ட­போதும் 2 இரா­ணுவ வீரர்கள் மர­ணித்­ததன் கார­ண­மாக ஆறு பேரே நீதி­மன்­றுக்கு ஆஜ­ராகி வந்­துள்­ளனர்.

இச்­சம்­பவம் தொடர்பில் காயம் சித்­தி­ர­வதை, பாலியல் வன்மை, உயிர் இழப்­புகள் போன்­ற­வற்­றுடன் தொடர்­பு­டைய 120 உடன் சாட்சியம் வழங்கி எதி­ரி­களை அடை­யாளம் காட்­டி­யுள்­ளனர் என ஆரம்ப விசா­ர­ணையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அனு­ரா­த­புரம் மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைகள் ஆனி, ஆடி மாதங்­களில் தொடர்ந்­தேர்ச்­சி­யாக நடை­பெற்று வந்த வேளையில் விசா­ர­ணையின் போது சாட்­சி­யங்கள் அளித்த வாக்கு மூலங்கள் குமா­ர­புரம் படு கொலையின் கொடூ­ரங்­களைப் படம்­பி­டித்துக் காட்­டு­வ­தாக அமை­கி­றது. அதில் இரண்­டொன்றை வாச­கர்­களின் அவ­தா­னிப்­புக்­காகத் தரு­கின்றேன்.

சுடா­தீர்கள் சுடா­தீர்கள் எனக் கையெ­டுத்துக் கும்­பிட்டோம்.

கத்­தினோம் ஆனாலும் படை­யினர் கேட்­க­வில்லை. எனது தந்­தை­யையும் (கிட்­டிணன் கோவிந்தன்) கண­வரும் (அரு­ணா­சலம் தங்­கவேல்) (50) ஆயு­தங்­க­ளுடன் வந்­த­வர்­களால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டனர்.

இரா­ணுவ சீரு­டையில் வந்­த­வர்கள் சாராயம் குடித்­தி­ருந்­தனர். தள்­ளாடி தள்­ளாடி வந்­தார்கள். எனது கண­வரை சுட்­டவர் கழுத்தில் மாலை­யாக தோட்­டாக்­களைப் போட்­டி­ருந்தார் (சாட்சி மரு­தாயி சாட்­சியம் 29.06.2016).

சுமார் 4 மணி­ய­ளவில் எமது கிரா­மப்­பக்கம் வெடிச்­சத்தம் கேட்­டது. பயத்தின் கார­ண­மாக வீட்­டுக்குள் இருந்து விட்டேன் அப்­போது அங்­கு­வந்த இரா­ணு­வத்­தினர் வீட்டுக் கதவைத் திறந்து சுடத் தொடங்­கினர்.

எனது மாமியும் (கந்­தப்­பொடி கம­லா­தேவி 48) எனது தங்கை தங்­கவேல் கலா­தேவி (12) சுட்டுக் கொல்­லப்­பட்­டனர். (சாட்சி தங்­கவேல் கோம­ளேஸ்­வரன் சாட்­சியம் (04.07.2016).

நான் குமா­ர­பு­ரத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட போதும் திரு­மணம் முடித்து பள்ளிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்தேன். சம்பவ தினம் குமாரபுரத்துக்கு எனது தயார் வீட்டுக்கு வந்திருந்தேன்.

எனது சகோதரி பாக்கியவதியின் வீட்டுக்கு எனது பிள்ளைகளான சு.பிரபாகரன் (12), சு.சுபாஜினி (14) மற்றும் என் கணவர் சி.சுந்தரலிங்கம் சென்றிருந்தனர்.

சம்பவம் நடைபெற்ற மறுநாள் எனது சகோதரி வீட்டுக்கு காலை சென்ற போது எனது இரு பிள்ளைகளும் சகோதரியும் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். எனது கணவரும் காயப்பட்டிருந்தார். நான்கு வருடங்களின் பின் அவரும் இயற்கை மரணம் எய்திவிட்டார். (சாட்சி இதயராணி சுந்தரலிங்கம்)

இரு­பது வரு­டங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற குமா­ர­புரம் படு­கொலை விசா­ர­ணைகள் அனு­ரா­த­புரம் மேல் நீதி­மன்றில் நீதி­பதி மஞ்­சுள தில­க­ரட்ண தலை­மையில் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூலை 27 ஆம் திகதி வரை (27.06.2016 – 27.07.2016) 7 ஜூரிமார் முன்­னி­லையில் நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யா­னது கடந்த 27.07.2016 அன்று முடிவடைந்து தீர்ப்பு வழங்­கப்­பட்­டது. குற்றம் சாட்­டப்­பட்ட 6 இரா­ணுவ வீரர்­களும் அனைத்து குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­தலை செய்யப்பட்டனர்.

தலைமை நீதி­பதி மஞ்­சுள தில­க­ரட்ண ஆறு இரா­ணு­வத்­தி­ன­ரையும் விடு­தலை செய்து தீர்ப்பு வழங்­கினார்.

ஜூரி­மாரின் ஏக­ம­ன­தான முடி­வுக்கு அமை­யவே குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­ட­தா­கவும் 20 வரு­டங்­களின் பின் உற­வி­னர்­களால் பிர­தி­வா­திகள் அடை­யாளம் காணப்­பட்­டதை மட்டும் வைத்து அவர்­களை குற்­ற­வா­ளி­க­ளாக அறி­விப்­பது தர்­ம­மா­காது என தலைமை நீதி­பதி தீர்ப்பின் போது எடுத்­து­ரைத்தார்.

திரு­கோ­ண­மலை தெஹி­வத்த இரா­ணுவ முகாமில் 1996 ஆம் ஆண்டு கட­மை­யாற்­றிய சுவி சிறி­கெ­தர நிசாந்த, தென்­தலு முதி­யன்­ச­லாகே, சுஜித் சிசிர குமார, மார­சிங்­க­பே­டிகே கபி­ல­தர்­ஷன, ஹேரத் முதி­யன்­ச­லாகே அபே­சிங்க, பவ­ரம்­பே­டிகே உப­சேன, ஹிட்டி பண்­டா­ர­லாகே அபே­ரத்ன ஹிட்­டி­பண்­டார ஆகிய ஆறு முன்னாள் இரா­ணுவ கோப்­ரல்­களே விடு­தலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளாகும்.

மூதூர் நீதி­மன்றில் 1996 ஆம் ஆண்டு இக்­கொ­லைகள் தொடர்­பான சுருக்க முறை­யற்ற வழக்கு இடம்­பெற்று வந்த நிலையில் சட்­டமா அதி­ப­ரினால் 6 இரா­ணுவ கோப்­ரல்­க­ளுக்கும் எதி­ராக வட­மத்­திய மாகாண அனு­ரா­த­புர நீதி­மன்றில் மாற்­றப்­பட்டு வழக்கு விசா­ர­ணைகள் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இடம் பெற்று வந்­தன.

தனித்­த­னி­யாக ஒவ்­வொரு பிர­தி­வா­தி­க­ளுக்­கெ­தி­ராக 101 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தமை நீதி­மன்ற வர­லாற்றில் பிர­பல்யம் கொண்ட வழக்கு எனப் பேசப்­ப­டு­கி­றது.

இவ்­வ­ழக்கில் சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், தொடர்பு கொண்­ட­வர்கள் என்ற வகையில் 108 பேருக்கு அழைப்பாணை சாட்­சி­யங்­க­ளாக விடுக்­கப்­பட்­ட­போதும் 38பேர் விசா­ரிக்­கப்­பட்­டார்கள் என்றும் இச்­சம்­ப­வத்­துக்கு ஆதா­ர­மாக தடயப்பொருட்­க­ளாக  துப்­பாக்­கிகள், அதற்­கு­ரிய ஆவ­ணங்கள் பிரேத பரி­சோ­தனை அறிக்கை 24….,

சட்­ட­வைத்­திய அதி­கா­ரியின் அறிக்கை 25, இர­சா­ய­னப்­ப­குப்­பாய்வு அறிக்­கை­யென சட்­டமா அதி­ப­ரினால் ஜூரி சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட­துடன்  சாட்­சி­யா­ளர்­க­ளாக, பொலிஸ் அதி­கா­ரிகள் விசேட வைத்­திய நிபு­ணர்கள் அரச உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் சாட்­சி­யா­ளர்­க­ளான பொது­மக்கள் உள்­ளிட்ட 107 பேர் நீதி­மன்றில் முன்­னிலைப் படுத்­தப்­பட்­டி­ருந்­தனர். சுமார் 1500 பக்­கங்­களில் சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­பட்­டமை இவ்­வ­ழக்கில் விசேட அம்­ச­மாகும்.

இவ்­வ­ழக்கின் தீர்ப்புத் தொடர்­பாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.எஸ். இரத்­தி­னவேல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டுள்ளார்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை யாகும்.

-திருமலைநவம்-

Share.
Leave A Reply