சீனாவின் தென்மேற்கில் உள்ள சோங்கிங் பகுதியில் லவோட்டு எனும் கிராமத்தில் வசிக்கிறார் 53 வயதான ஷியா யுவான்ஹாங்.
அதிகப்படியான திசு விரிவாக்கக் குறைபாட்டினால் இவரது முகம் வழமைக்கு மாறாகப் பெரிதாகவும் விகாரமாகவும் காணப்படுகிறது.
முக அளவு பெரிதானதன் காரணமாக இவருக்கு காது கேட்பதில் குறைபாடும் ஏற்பட்டுள்ளது.
இவருக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என இவரது குடும்பத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
எவ்வாறாயினும், சிகிச்சைகளுக்காக பெருந்தொகைப் பணத்தை செலவிடும் நிலையில் தாம் இல்லை என ஷியா யுவான்ஹாங்கின் குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இளம்பிராயத்தில் இந்தக் குறைபாடு ஏற்பட்ட போதிலும் போதிய பண வசதியின்மை காரணமாக இவருக்கான மருத்துவ சிகிச்சைகளை குடும்பத்தாரால் மேற்கொள்ள முடியாது போயுள்ளது.
எனினும், தற்போது ஷியா யுவான்ஹாங்கின் சகோதரர், முக சீரமைப்பு சிகிச்சைகளுக்கான நிதியைத் திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.