அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி தனது உதட்டில் மியாவ் என்று பச்சை குத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல New York tattoo parlor ல் கடந்த வியாழன் அன்று பிரபல மொடல் அழகியும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான Kendall Jenner சென்றுள்ளார்.
அங்கு தனக்கு பச்சை குத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். பார்லர் பணியாளர் JonBoy எங்கே எழுத வேண்டும் என கேட்டுள்ளார். உடனே அவர் தனது உதட்டின் கீழ் உதட்டில் மியாவ் என்று எழுதும் படி கூறியுள்ளார்.
அதன் படியே அவரும் உதட்டில் எழுதினார். இதை JonBoy புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டராகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அதன் பின் அவர் பச்சை குத்திக் கொண்டு பார்லரை விட்டு அழகாக கேட்வாக் செய்து நடந்து சென்றார்.
அது மட்டுமில்லாமல் Kendall Jenner கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது கை விரலில் இரண்டு அழகான இதயம் போன்று பச்சை குத்தியுள்ளார். அவருக்கு பச்சை குத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Kendall Jenner உதட்டில் பச்சை குத்திய போது அவர் அணிந்திருந்த கருப்பு நிற ஆடை விற்பனைக்கு உள்ளதாக தனியார் ஓன்லைன் நிறுவனம் அறிவித்துள்ளது.