தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெரிய ஆணுறுப்பைக் கொண்டிருப்பதைக் கண்ட அவரின் மனைவி அச்சமடைந்து போத்தலொன்றினால் தலையில் தாக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
32 வயதான எம்னோம்போ மதிபி எனும் இந்த இளைஞர் ஒரு கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது.
அதன்பின் தென் ஆபிரிக்காவின் கொஃபீ பே எனும் கரையோர நகரில் தேனிலவுக்குச் சென்று முதல் தடவையாக இவர்கள் பாலியல் உறவில் ஈடுபட முயன்றபோது விபரீதம் ஏற்பட்டது.
அப்போது தான் முதல் தடவையாக ஆண் ஒருவரின் அந்தரங்க உறுப்பைக் கண்ட எம்னோம்போவின் மனைவி, அவரின் பெரிய ஆணுறுப்பைப் பார்த்து அச்சமடைந்தாராம்.
இதனால், அச்சமடைந்த மணமகள், அருகிலிருந்த போத்தலொன்றை எடுத்து எம்னோம்போவின் தலையில் தாக்கினார். அதையடுத்து வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றார் எம்னோம்போ.
இது தொடர்பாக எம்னோம்போ மதிபி கூறுகையில், “ஆரம்பம் எல்லாம் நல்ல படியாகத் தான் நடந்துகொண்டிருந்தது. ஆனால், நான் எனது உள்ளாடையைக் களைந்தவுடன் நிலைமை மோசமடைந்தது.
எனது பெரிய உறுப்பைப் பார்த்து எனது மனைவி பயந்து விட்டார்.
அது தனது உறுப்பை காயப்படுத்திவிடும் என அவர் அஞ்சினார். திடீரென போத்தலொன்றை எடுத்து அவர் எனது தலையில் தாக்கினார்.
அவருக்கு நான் பரிசளித்த கரடி பொம்மையைப் பயன்படுத்தி என்னை மூச்சுத் திணறலுக்குட்படுத்தவும் அவர் முயன்றார்” எனத் தெரிவித்துள்ளார்.
எம்னோம்போ வீறிட்டுக் கத்தியதால் அவ் விடுதியின் அருகிலுள்ள அறைகளில் இருந்த ஏனைய வாடிக்கையாளர்களும் எழுந்து கொண்டனராம். பின்னர் வெவ் வேறு பஸ்கள் மூலம் தானும் மனைவியும் வீடு திரும்பியதாகவும் எம்னோம்போ தெரிவித்துள்ளார்.
“சிறிய ஆணுறுப்பைத் தான் விரும்புவதாக எனது மனைவி கூறுகிறார். ஆனால், ஆணுறுப்பை பெரிதாக்கும் சிகிச்சைகள் குறித்து தான் கேள்விப்பட்டுள்ளேன். சிறிதாக்கும் சிகிச்சைகள் பற்றி கேள்விப்படவில்லை” என்கிறார் எம்னோம்போ.
(Mnombo Madyibi, 32, ended up with a bandaged head after getting intimate with his wife on their honeymoon having decided to abstain until they were wed)
அதேவேளை, எனது மனைவி விரும்பியவாறு தேனிலவுக்கு ஸான்ஸிபாருக்குச் செல்லாமல் குறைந்த செலவில் தேனிலவுப் பயணத்தை மேற்கொண்டமையால் எனது மனைவி ஆத்திரமடைந்தார் என நான் எண்ணுகிறேன்.
எனினும், அவருக்கு எதிராக முறைப்பாடு நடவடிக்கை மேற்கொள்ள நான் விரும்பவில்லை. எனது மனைவியை நான் மிகவும் நேசிக்கிறேன்” எனவும் எம்னோம்போ தெரிவித்துள்ளார்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட https://www.facebook.com/ilakkiyainfo/ அல்லது https://twitter.com/ilakkiyainfo ஐ கிளிக் செய்யுங்கள்.