அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தால் தன்னுடன் உடலுறவு கொள்ளலாம் என பிரபல ஹாலிவுட் நடிகை பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகையும் பாப் பாடகியுமான மடோனா(58) தான் இந்த அதிரடி பேட்டியை அளித்துள்ளார்.
நியூயோர்க் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் மடோனா நேற்று முன் தினம் பங்கேற்றுள்ளார்.
அப்போது, ‘ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு அதிரடி வாய்ப்பை அளிக்கப் போகிறேன்.
குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ட்ரம்பை தோற்கடித்து ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தால், இயற்கைக்கு மாறான முறையில் கூட அவர்களுடன் உடலுறவு கொள்ள அனுமதிப்பேன்’ என அதிரடியாக பேசியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், ஹிலாரிக்கு வாக்களிக்கும் நபரிடம் எவ்வாறெல்லாம் உல்லாசமாக இருப்பேன் என்பதையும் வெளிப்படையாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 8-ம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு பெருமளவில் ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.