அனாதரவான நிலையில் வீதியில் விடப்படும் முதியவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல அபேகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதுகாவலர்கள் அல்லது பொறுப்பேற்கக் கூடியவர்கள் எவரும் இன்றி அனாதரவாக நிர்க்கதியான நிலையில் விடப்படும் முதியவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படக்கூடிய வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.
சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கி வரும் முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்படும் இவ்வாறான முதியவர்களின் சொத்துக்களே இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது.
இவ்வாறு வீதியில் விடப்படும் முதியவர்கள் தொடர்பில் பத்திரிகைகள் வாயிலாகவும் ஏனைய வழிகளிலும் தகல்கள் வெளியிட்டு உறவினர்களுக்கு அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தல்களுக்கு பதில் எதனையும் வழங்காது முதியவர்கள் இறந்ததன் பின்னர் அவர்களது சொத்துக்களுக்கு எவரும் உரிமை கோர முடியாது, அவ்வாறான சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளது. எனவும் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.