ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, March 25
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    தொடர் கட்டுரைகள்

    மாத்தையாவை கைது செய்ய பிரபாகரன் அனுமதி!! : கைதின் முழுமையான பொறுப்பும் சொர்ணத்திடம் ஒப்படைப்பு!! (சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- பகுதி-3)

    AdminBy AdminOctober 31, 2016Updated:November 3, 2016No Comments6 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    .

    மாத்தையா கைதின் முழுமையான பொறுப்பும் சொர்ணத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

    ஏற்கனவே பிரபாரன் மீது வைத்திருந்த விசுவாசம், தனது பொறுப்பிலிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊடுருவி மாத்தையாவின் சதிக்கரங்கள்  உள்நுழைந்ததாக அவர் நம்பியது  என இரண்டும்  சேர்ந்து  அவரை  ஒரு வெறி கொண்ட  வேங்கையாகத்தான் மாத்தையாவின் முகாமிற்கு கொண்டு சென்றது.

    தனது வாகனத்திலிருந்த விறுவிறுவென இறங்கிய சொர்ணம், நேராக வாயிலுக்கு சென்றார். அங்கு மாத்தையாவின் அணியின் இரண்டு போராளிகள்  காவல்கடமையில் நின்றனர்.

    இதை படிக்கும் உங்களிற்கும், சொர்ணத்தின் அணியிலிருந்தவர்களிற்கும்தான் அந்த சமயத்தில் ஒருவித பதட்டம் நிலவியது என நினைக்கிறேன்.

    வாயில்கடமையில் நின்ற போராளிகளிற்கு சொர்ணம் வந்ததன் காரணமோ, நடந்த, நடக்கவுள்ள விபரீதமோ எதுவும் தெரிந்திருக்கவில்லை.

    குறைந்தபட்சம் ஒரு மோதலிற்கான ஏற்பாட்டுடன் கூட அவர்கள் நிற்கவில்லை. மாத்தையா விவகாரத்தில் தீராத மர்மத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விடயங்களில் ஒன்று இது.

    மாத்தையா விவகாரம் திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல.

    தன்மீதான வலை இறுகுவது மாத்தையாவிற்கு ஏற்கனவே தெரிந்ததுதான். அதனால்த்தான் யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்த அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு சென்று உண்ணாவிரதம் இருந்தார்.

    அந்த சமயத்தில் அன்ரன் பாலசிங்கமும் மாத்தையாவின் சதி பற்றிய தகவல்களை நம்பியிருக்க வேண்டும்.

    அதனால்த்தான் இந்த விடயத்தில் அவர் அக்கறை காட்டவில்லை.

    தனது வீட்டில் வந்து உண்ணாவிரதம் இருந்த மாத்தையாவை பார்த்து, “எதற்காக இங்கு வந்து உண்ணாவிரதம் இருக்கிறாய்?

    உனக்கு ஏதாவது பிரச்சனையென்றால் ஏதாவது கோயில்ல போய் இரு. நாலு சனத்திற்காவது விசயம் தெரியவரும்” என கூறி அனுப்பி விட்டார்.

    சொர்ணம் நேராக  அந்த காவலர்களிடம்  சென்று கேட்டது  ஒரேயொரு கேள்விதான். அவர்கள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டார்கள்.

    “நீங்கள்  பிரபாகரனின் இயக்கமா? மாத்தையாவின் இயக்கமா?” இதுதான் சொர்ணம் கேட்ட ஒரே கேள்வி. இதொரு கேள்வியா? அவர்கள் பிரபாகரன் இயக்கம் என்றார்கள்.

    அப்படியாயின் ஆயுதங்களை  கீழே வைக்கச் சொன்னார். அவர்கள் வைத்து விட்டார்கள். நேராக சொர்ணம் உள்ளே சென்றார்.

    அவரைத் தொடர்ந்து அணி உள்நுழைந்தது.  நல்ல வேளையாக   மாத்தையாவின்  வலது கரமான ஒற்றைக்கை சுரேஷ் அன்று முகாமில் தங்கியிருக்கில்லை.

    அவர் நின்றிருந்தால், நிச்சயம் மோதலொன்று வெடித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. அல்லது அதுவுமொரு ஊகமோ தெரியவில்லை.

    முகாமின் மையத்திலிருந்த வீட்டில்த்தான் மாத்தையா தங்கியிருந்தார்.

    சொர்ணம்   தலைமையில் அணியொன்று வருவதை கண்டதும்  அவர் விபரீதத்தை  உணர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

    முன் விறாந்தையில் உட்கார்ந்திருந்தவர், எழுந்து உள்பக்கமாக ஓடி கழிவறைக்குள் நுழைந்து விட்டார்.

    பின்னாலேயே  ஓடிச் சென்ற சொர்ணமும்  அணியினரும்  அறைக்கதவை உடைத்து திறந்தனர்.

    உள்ளே நுழைந்த சொர்ணம், அதுவரை  மிக மரியாதையாக அணுகிவந்த தனது பிரதித்தலைவரை தூசண வார்த்தைகளை உபயோகித்து மிரட்டினார்.

    மாத்தையாவும்  எந்த எதிர்ப்பிலும்  ஈடுபடவில்லையென்பதுதான் ஆச்சரியமான விடயம்.

    col-sornam-coming-to-the-discussion-with-mr-karikalan
    வழக்கமாக எந்த கோபமான சமயத்திலும் இரண்டொரு தூசண வார்த்தைகள் சொர்ணத்தின் நுனி நாக்கில் வந்துவிடும்.

    மிக ஆக்ரோசமாக  சமயங்களில்  தூசண வார்த்தைகள்  உபயோகிப்பது  அந்த அமைப்பில் ஆச்சரியமான சங்கதியல்ல.

    குறிப்பாக மிக இறுக்கமான  களங்களில் ரவைகளிற்கு சமமான தூசண வார்த்தைகளும் வரும். இதுவும் அப்படியொரு களஇறுக்கத்திற்கு சமமான நிலைதானே.

    மாத்தையா அந்த சமயத்தில் செய்வதற்கு எதுவுமிருக்கவில்லை. அவர் பேயறைந்தவர் போல நின்றார்.

    தூசண வார்த்தைகள் மற்றும் தனது ஆளுமையினால் சூழலை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சொர்ணம், அப்படியே துரிதமாக செயற்பட்டு, மாத்தையாவின் கையை மடக்கி பின்னால் கொண்டு வந்து கைதியாக்கினார்.

    பின்னாளில் மிகப்பெரும் ஆவலைத் தூண்டும் விடயமாக மாறிய, மாத்தையா விவகாரத்தில் நேரயாக பங்குபற்றி அவரை கைதியாக்கியவர் சொர்ணம்.

    மாத்தையாவை கைது செய்ததன்  மூலம், தனது தலைவரை பாதுகாத்துக் கொண்டு விட்டேன் என உணர்ந்ததன் பின்னர்தான் அவர் நிம்மதியடைந்தார்.

    இந்த சமயத்தில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிபூர்வமான விசுவாசமும், இயக்கம் மீதான பற்றும் பிரபாகரனை நிச்சயம் மனம் நெகிழச் செய்திருக்கும் என நினைக்கிறேன்.

    நீண்ட காலமாக அவர், தனது தலைவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமையினால் பிரபாகரன் குடும்பத்திலும் அவர் ஒரு அங்கத்தவராக இருந்தார்.

    பிரபாகரன் மீது அவர் கொண்டிருந்த கேள்விக்கிடமற்ற விசுவாசமும், பற்றுதலும் இது போன்ற எண்ணற்ற சம்பவங்களை இயக்க வரலாறு முழுவதும் எழுதிச் சென்றுள்ளது.

    இதனாலேயே இறுதிநாட்கள் வரை பிரபாகரனின் முதலாவது நம்பிக்கைக்குரிய விசுவாசியாக அவரிருந்தார்.

    அவரது திருமண விவகாரத்தில், அவர் எவ்வளவு விசுவாசியாகவும், இயக்கத்திற்கு அப்பால் எதனையும் சிந்திக்காதவராகவும் இருந்தார் என்பதும் வெளிப்பட்டது.

    அவரை திருமணம் செய்யுமாறு பிரபாகரன் கூறிவிட்டார்.

    sasa_zps1432a4c4

    அவர் இந்த விடயத்தை பிரபாகரனின் மனைவி மதிவதனியடம் சொல்லியிருக்கிறார்.

    பிரபாகரனிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவல்ல, மற்றும் அவரை சூழ்ந்திருக்கும் படையணியினர் எல்லோருக்கும் ஒரு தாயாராக மதிவதனி இருந்தார்.

    சிலரைவிட ஓரிரு வயதுகள் மூத்தவராக இருந்தார்.

    பலருக்கு தாயாரின் வயதில் இருந்தார். எனினும், அனைவரிற்கும் தாயாராக இருக்கும் பக்குவம் அவரிடமிருந்தது.

    சொர்ணம் வந்து விடயத்தை சொன்னபோது, அந்த பொறுப்பை மதிவதனியே எடுத்துக் கொண்டு விட்டார்.

    அப்பொழுது  மகளிர்படையணி  தளபதிகள்  ஒருவராக  ஜனனி இருந்தார்.

    1993 இல் புலிகள் நடத்திய ஒப்ரேசன் தவளை நடவடிக்கையின் கட்டளைத்தளபதிகளில்  ஒருவராக சொர்ணம் இருந்தார்.

    அவரின் கீழ் செயற்பட்ட அணிகளில், மகளிர்படையணியும் ஒன்று. தவளை நடவடிக்கையில் ஈடுபட்ட மகளிர்படையணியின் பிரிவொன்றை ஜனனி வழிநடத்தினார்.

    அந்த சமயத்தில் இரண்டு பேரிற்குமிடையில்   ஒருவித   அந்நியோன்யம்   இருந்ததாக அப்பொழுதே களத்தில் நின்ற போராளிகள் பேசிக் கொண்டனர். அல்லது அவர்கள் பேசும் விதத்தில் அந்த அந்நியோன்யம் இருந்தது.

    ஏற்கனவே சொர்ணத்தின் யுத்த முறை பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.

    யுத்தகளங்களில் அவர் கட்டளை வழங்கினால் பத்து சொல்லில் இரண்டு சொல்தான் யுத்தகள கட்டளைகள்.

    மிகுதி எட்டும் முரட்டுத்தனமான வார்த்தைகள் (அவற்றில் தூசணங்களும் அடக்கம்). இதுதான் அவர் சூழலை கட்டுக்குள் கொண்டுவரும் விதம்.

    ஆனால் ஜனனி விடயத்தில் அவரால் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. அது பொதுவான மனித இயல்புதான்.

    காதலியுடன் பேச நிறைய தயார்படுத்தல்களுடன் போவதும், அவளுடன் பேசும்போது தடுமாறுவதும் பற்றித்தானே முழு தென்னிந்திய திரைப்படங்களும் வருகின்றன.

    பாடல்களும் வருகின்றன. சிகண்டியின் முன்னால் நின்ற பீஷ்மரைப்போலத்தான், அவர் சமயங்களில் ஜனனியின் முன்னால் நின்றார்.

    ஆனாலும், அந்த சூழ்நிலையை காதலாக அல்லது மனதிற்கு நெருக்கமான உரையாடல் பொழுதாக மாற்றும் கலை அவரிடம் இருக்கவில்லை.

    அவர்தான் மிகத்தீவிரமான இராணுவ வீரனாயிற்றே. அல்லது அதற்கான பொழுதிருக்கவில்லை.

    பூநகரி களத்திற்கு விடுதலைப்புலிகளின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் ஆட்கள் சென்றனர்.

    பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியான இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்தும் போராளிகள் சென்றிருந்தனர்.

    அந்த அணியிலிருந்த போராளியொருவன், நிலவரத்தை அவதானித்திருக்கிறான். பின்னர், அந்த சண்டை முடிந்து போராளிகள் முகாம் திரும்பி விட்டனர்.

    கள விடயங்கள் பற்றி மதிவதனி போராளிகளுடன் பேசிய சமயத்தில், அவர்கள் இந்த விடயத்தை சொல்லிவிட்டனர்.

    இதேபோல, பெண்கள் அணியிலும் இது அவதானிக்கப்பட்டிருந்தது.

    அது மகளிர் தளபதிகளில் ஒருவரான ஜெயாவின் காதுகளிற்கும் சென்றிருந்தது.

    அவர் ஒருநாள் விடயத்தை அடேல் பாலசிங்கத்தின் காதில் போட்டிருக்கிறார். அடேல் அதனை எடுத்தக் கொண்டு மதிவதனியிடம் வந்தார். அடேல் ஆச்சரியப்படும் விதத்தில் மதிவதனி ஏற்கனவே அந்த தகவலை வைத்திருக்கிறார்.

    sornammmmaஅதன் பின்னர் ஜனனியுடனும் பேசி அந்த திருமணத்தை மதிவதனி முடித்து வைத்தார்.

    திருமணத்தின் பின்னரும், அந்த குடும்பங்கள் மிக நெருக்கமாக இருந்தன.

    விடுமுறைகளில், அல்லது குறிப்பிட்ட காலஇடைவெளிக்கொருமுறை இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக பொழுதைக் கழித்து கொண்டார்கள்.

    துவாராகாவை விடவும், வயதில் மிக இளையவராக இருந்தபோதும், சொரண்ணத்தின் மகளும் துவாரகாவும் மிக நெருங்கிய நண்பிகளாக இருந்தனர்.

    யுத்தம் முடிவதற்கு முந்தைய சில வருடங்களில், இருவரும் சகோதரிகளைப் போலவே ஒட்டித் திரிந்தனர்.

    வாகனம் ஓடப்பழகுகிறோம் பேர்வழி என இருவரும் ரக்ரரில் ஏறி புதுக்குடியிருப்பின் ஒதுக்குப்புற தெருக்களை அதகளப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

    அல்லது பரதநாட்டியம் பழக கிளிநொச்சிக்கு போய் வந்து கொண்டிருந்தார்கள்.

    மாத்தையாவின் விவகாரத்தின் பின்னர், பல உயர்மட்ட தலைகள் உருண்டன. சில திரும்பி வந்தன. சில வரவில்லை.

    பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்தும் பலர் தூக்கப்பட்டனர்.

    இதனால்  மெய்ப்பாதுகாவலர் அணி ஆட்டம் கண்டது.

    இந்த சமயத்தில் சொர்ணம்  ஒரு வித்தியாசமான முடிவு எடுத்தார்.

    தான் இல்லாத ஒரு மெய்ப்பாதுகாவலர் அணியை உருவாக்குவது பற்றி பிரபாகரனிடம் கூறினார்.

    அவர் இயக்கத்தில் சேர்ந்த இரண்டாவது வருடத்தில் இருந்து, இந்த சம்பவம் நடக்கும் 1994 வரையும் பிரபாகரனின் நிழலாக இருந்தார்.

    விடுதலைப்புலிகளின் மிகத்தீர்க்கமான இந்த காலகட்டத்தில் அவர் இல்லாத பிரபாகரனை காண்பது அரிதான சம்பவமாக இருந்தது.

    இப்டியொரு சூழலிலத்தான் அவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். இதனை பிரபாகரனும் ஏற்றுக் கொண்டார்.

    சொர்ணம் இல்லாவிட்டால் யார் என்ற சிக்கல்கள் எதுவும் படையணிக்குள் இருக்கவில்லை.

    விடுதலைப் புலிகளின் படையணிகளிற்குள்ளேயே இம்ரான் பாண்டியன் படையணிதான் ஒரு விசித்திரமான சிக்கலை எதிர்கொண்டபடியிருந்தது.

    மற்றைய படையணிகளில்  உள்ள ஒருவரிற்கு  படிமுறையான வளர்ச்சி இருந்து கொண்டேயிருக்கும்.

    அங்கு தொடர்ந்து வெற்றிடங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கும். ஏனெனில், அது தொடரந்து களத்தில் நிற்கும் படையணிகள்.

    மரணம் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இது தவிர, ஒருபடையணியில் உள்ளவர், உள் முரண்பாடு காரணமாகவோ அல்லது, தேவை நிமித்தமாகவோ வேறு ஒரு பிரிவிற்கு செல்ல முடிந்தது.

    இந்த இடமாற்றம் இம்ரான் பாண்டியன் படையணியில் கிடையவே கிடையாது. பாதுகாப்பு கடமைகளில் உள்ளவர்கள் வெளியில் சென்றால், இரகசிய கசிவு ஏற்படலாம் என்பதால் அந்த ஏற்பாடு.

    தவிரவும், அந்த படையணி தொடர்ந்தும் யுத்தகளத்தில் நிற்கும் படையணியல்ல.

    அதனால் ஒப்பீட்டளவில் உயிரிழப்பு வீதம் குறைவானது. இதனால், இரண்டாம் மட்டதளபதிகள் அந்த படையணியில் ஏராளமாக இருந்தார்கள்.

    அதனால் சொர்ணத்தின்  மாற்றத்தில் சிக்கல்கள்  இருக்கவில்லை. அற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

    அவரது விசுவாசத்தை நிரூபிக்கவோ என்னவோ அவர் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருந்த சமயங்களில்த்தான், மிக ஆபத்தான நெருக்கடிகளை பிரபாகரன் எதிர்கொண்டார்.

    இப்படித்தான், அடுத்தவரிடம் பொறுப்பை ஒப்படைக்கலாம் என தயாரானபோது, இன்னொரு பெரிய நெருக்கடி ஏற்பட்டது.

    ஏற்கனவே நடந்த மாத்தையா விவகாரத்தைவிட மிகத் தீவிரமானதாக இது அப்பொழுது நோக்கப்பட்டது. மாத்தையா விவகாரம் வெளித்தெரிந்த ஆபத்து.

    இது மிக நுணுக்கமாக, திட்டமிடப்பட்ட ரீதியில் நடந்தது.

    ஒருநாள் பிரபாகரன் குடிக்கும் நீரில் சயனைட் கலக்கப்பட்டிருந்தது.

    தொடரும்…

     

    “இந்திய புலனாய்வு அமைப்புடன் உனக்கு தொடர்புள்ளதா??’ நேரடியாகவே மாத்தையாவிடம் கேட்ட பிரபாகரன்!!: (சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- பகுதி-2)

    சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன் – (பகுதி-01)

     

    Post Views: 19

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 03: நாஜிகளை தப்பவைத்த அமெரிக்க உளவுத்துறை

    January 5, 2023

    வலது தீவிரவாதத்தின் நிழலில் – 02: ஜேர்மன் அதிவலதின் கதை: ஒரு பின்கதைச் சுருக்கம்

    January 3, 2023

    வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில்-01: ஜேர்மன் சதிமுயற்சியின் அதிர்வலைகள்

    January 1, 2023

    Leave A Reply Cancel Reply

    October 2016
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!

    March 25, 2023

    ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ

    March 25, 2023

    “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்

    March 25, 2023

    இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது

    March 25, 2023

    14 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை; இளைஞன் தலைமறைவு

    March 25, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!
    • ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ
    • “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்
    • இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version