Site icon ilakkiyainfo

வடக்கில் கார்த்திகை 27இனை குறிவைத்துள்ள விஷக்கிருமிகள்..!!

தற்போது புதிதாக உருவெடுத்துள்ளது பிரபாகரனின் படை எனும் பதற்றம் என்பது அனைவரும் அறிந்ததே இத்தனை காலமும் இல்லாத புதிய படை ஒன்று எங்கிருந்து வந்தது? அதன் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மை என்ன? என்ற வகையில் சிந்திக்கப்பட வேண்டியது அவசியம்.

யாழில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களுக்கு இன்றுவரை விடை கொடுக்க முடியவில்லை மாணவர்களை சுட்டது, அடுத்து புலனாய்வு அதிகாரிகள் மீது வாள் வீச்சுகள் பின்னர் ஆவா இவை அனைத்திற்கும் சரியான காரணம் முன்வைக்கப்படவில்லை.

ஆனாலும் இல்லாத பதற்றத்தை உருவாக்க மட்டுமே இவை என்பது மட்டும் ஒரு பக்கம் தெளிவாகின்றது. தற்போது பிரபாகரன் படை என்று பொலிஸாருக்கு எச்சரிக்கையும், 21 நாள் காலக்கெடுவும் கடிதம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது வடக்கில் அமைதியை நிலைகுலைய செய்து உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வடக்கை அடிமைப்படுத்த நினைத்துள்ள விஷக்கிருமிகள் திட்டமிட்டு இதன் பின்னணியில் செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்த சொந்தங்களுக்காக அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கபட்டு வருகின்றது. அதனை தடுத்து குழப்ப திட்டமிட்டுள்ள சில விஷக்கிருமிகளின் செயற்பாடே பிரபாகரனின் படை எனப்படும் புதிய முயற்சி என தென்னிலங்கை புத்திஜுவிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் 27ஆம் திகதி அன்று யாழில் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அதிகமாக இருந்த போதும் அவற்றின் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் உணர்வு பூர்வமாகவும் எழுச்சியுடனும் மாவீரர் தினம் நடைபெற்றது என்பது அறிந்ததே.

தற்போது மீண்டும் மாவீரர் தினம் அண்மித்துள்ளது இந்த வேளையில் பிரபாகரன் படை என புதிய குழு உள்ளது, அது வடக்கு பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என பொய்கள் பரப்பப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரை பொறுத்தவரையில் இவ்வாறான அச்சுறுத்தலுக்கு பயந்து பதவியில் இருந்து சென்றுவிட மாட்டார்கள் மாறாக யாழில் வழமைக்கு மாறான நிலை ஏற்படும்.

அவ்வாறே தற்போது பிரபாகரன் படை என கூறி விடுத்துள்ள கடிதத்தில் 21 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது இந்த காலத்தில் வடக்கில் வழமைக்கு மாறாக பொலிஸாரும் அதிரடிப் படையும் குவிக்கப்படுவார்கள்.

அவ்வாறு நிகழ்ந்து விட்டால் மாவீரர் தினத்தை குழப்பி விட முடியும் என்பதே சதியாலோசனை செய்துள்ள விஷக்கிருமிகளின் திட்டம்.

இதில் சதியாளர்கள் எதிர்பார்ப்பது ஒருகல்லில் இரு மாங்காய் செயற்பாடே அதாவது யாழின் அமைதியை சீர்குலைத்து அதனை எப்போதும் அடிமைப்படுத்தி இராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்தது தணிந்து வரும் பதற்ற நிலையை தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்தி உயிர்சேதங்களை ஏற்படுத்தி விட முடியும் இந்த காரணங்களுக்காகவே சில விஷக்கிருமிகள் திட்டமிட்டு பொலிஸாரை தூண்டி விட்டுள்ளார்கள் எனவும் தென்னிலங்கை புத்திஜுவிகள் தெரிவித்துள்ளனர்.

பொது மக்கள் யுத்தத்தால் இறந்த உறவுகளை எண்ணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் பதற்றம் ஏற்படுத்தப்பட்டால் அது ஒரு சில சமயம் பாரிய கலவரமாக கூட மாறிவிட முடியும்.

அந்த நிலையில் அதிகபடியான பொலிஸார் இருக்கும் போது, ஏற்கனவே மறைமுகமாக கொந்தளித்துள்ள யாழ் முழுவதும் பதற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனைப்பயன்படுத்திக் கொண்டால் யாழை அழிக்க எளிதாகி விடும் என்பதே உண்மை.

இந்த திட்டங்களின் முதல் அத்தியாயமே தற்போது பரப்பப்பட்டுள்ள பிரபாகரன் படை எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version