அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் டொனால்ட் டிரம்பை ஹிட்லருடன் ஒப்பிட்டு வகுப்பு நடத்திய வரலாற்று ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்துள்ளது குறித்த நிர்வாகம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் அமைந்துள்ள Mountain View மேநிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார் 65 வயதான Frank Navarro.
சம்பவத்தன்று குறித்த ஆசிரியர் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் போது அவரை அழைத்த நிர்வாகம் உடனடியாக பள்ளியை விட்டு சென்று விட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
வகுப்பில் ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் டிரம்ப் குறித்து வகுப்பில் தெரிவித்த கருத்து ஒன்று மாணவர் ஒருவரின் பெற்றோருக்கு கவலையை அளிக்கும் வகையில் அமைந்திருந்ததாக அந்த ஆசிரியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Navarro கடந்த 40 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் திறம்பட செயல்பட்டு வருகிறார். பணி இடை நீக்கம் தொடர்பாக பேசிய அவர், குறித்த புகார் தொடர்பான விளக்கம் கேட்க நிர்வாகம் தயாரில்லை எனவும், பெற்றோரிடம் இருந்து வந்த புகார் குறித்த கடிதத்தை வாசிக்க தம்மை அனுமதிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
பள்ளி நிர்வாகம் குறித்த சம்பவத்தை உறுதி செய்த போதிலும் புகார் குறித்த தகவல்களை வெளியிட மறுத்துள்ளது. இது கருத்துரிமையை நசுக்கும் செயல் என்று ஆசிரியர் நாவரோ தெரிவித்துள்ளார்.
தமது வக்குப்புகள் அனைத்தும் வரலாற்று ஆதாரங்களை கொண்டு மட்டுமே இருக்கும் எனவும், ஒரு சாராருக்கு சார்பாகவோ பிரசார திட்டத்துடனோ அமையாது எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
1930 முதல் 1933 வரையான காலகட்டத்தில் ஹிட்லரின் முழக்கம் எல்லாம், ஜேர்மனையை பெருமை கொள்ள செய்வேன் என்பதே, அதே முழக்கத்தை தற்போது டிரம்ப் பயன்படுத்தியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
Navarro குடியிருக்கும் பகுதியில் டிரம்பின் வெற்றிக்கு பின்னர் அசாதாரண சூழல் நிலவி வருவதாகவும், சாலைகளில் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.