முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 71 ஆவது பிறந்த தினத்தை குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இதன்போது முன்னாள் சபாநாயகர் சமல் ராபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் ராஜபக்சவின் புத்திரர்கள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை தனது 71 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் இன்றைய நாளில் http://www.mahindarajapaksa.lk/ என்ற முகவரியைக் கொண்ட தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளார்.
நாரஹேன்பிட்டிய – அபயாராம விகாரையில் சமய வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இங்கு 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசனைப் பொதிகள் வழங்கப்பட்டன.