இலங்கையில் தற்போது இராணுவ புரட்சி என்ற கோஷம் வலுப்பெற்றுள்ளது. நல்லாட்சி நிலவும் சந்தரப்பத்தில் இவ்வாறான பரப்புரைகள் பல்வேறு மட்டங்களில் தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தினேஷ் குணவர்த்தன இராணுவ சூழ்ச்சி ஏற்பட போவதாக பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் தனது இரகசிய இடத்திற்கு, முக்கியமான நபர் ஒருவரை நியமிக்கும் செயற்படொன்றை மேற்கொண்டதாக லங்காஈநியூஸ் செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
நல்லாட்சியை உருவாக்குவதற்காக அர்ப்பணித்த சிவில் அமைப்பினால் தொடர்ந்து வெளியிட்ட தகவல்கள் மற்றும் கோரிக்கைகளின் முடிவாக இராணுவ புலனாய் பிரிவின் பணிப்பாளராக செயற்பட்ட கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளரான பிரிகேடியர் சுரேஷ் சலே அந்த பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார்.
அந்த இடத்திற்கு கோத்தபாயவுக்கு ஆதரவற்ற ஒருவரை நியமிப்பதற்கு இராணுவ தளபதி மற்றும் ஜனாதிபதி செயற்பட்டுள்ளனர்.
பிரிகேடியர் சுரேஷ் சலேவினால் நல்லாட்சிக்கு ஆதரவானர் போன்று காட்டிக் கொண்டு, போலி அறிக்கைகளை தயாரித்து கடந்த ஆட்சியாளர்களை காப்பாற்றுவதற்கு செயற்பட்டுள்ளார்.
இந்த குற்றவாளிகளுக்கு இராணுவம் என்ற முத்திரை குத்தி பாதுகாப்பதற்கு காரணம் வேறு ஒன்றும் அல்ல அவர்கள் ஊடாக ராஜபக்சர்கள் சிக்கிக் கொள்வதனை தடுப்பதற்காகவே என தெரியவந்துள்ளது. எனினும் இறுதியில் சுரே சலே நீக்கப்பட்டமையினால் கோத்தபாயவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
தங்களின் குற்றவாளிகளை காப்பாற்றவில்லை என்றால் அது தனது சகோதரருக்கு ஆபத்தென்பதனை அவர் அறியாமல் இல்லை. எனினும் நிலைமை மாற்றுவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோத்தபாய நேற்றைய தினம் அந்த செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்.
அதற்கமைய இராணுவ மிலிட்டரி பொலிஸாரின் புலனாய்வு பிரிவான SIUவின் கட்டளை அதிகாரியாக கர்னல் க்லிபர்ட் சோய்ஸாவை, கோத்தபாய நியமித்துள்ளார்.
நேற்று மாலை இந்த நியமிப்பு தற்போதைய இராணுவ தளபதியினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடென்ற போதிலும், இந்த செயற்பாட்டின் முக்கிய கதாபாத்திரமாக கோத்தபாய ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கர்னல் க்லிபர்ட் சொய்ஸா வேறு யாரும் அல்ல அப்போதைய காலப்பகுதியில் பீலட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்புவதற்கு செயற்பட்ட மேஜர் ஜெனரல் மானவடு மற்றும் மேஜர் ஜெனரல் விஜேசிறியின் சிறந்த நண்பராகும்.
கோத்தபாய கூறினால் எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ளும் மானவடுவின் குழுவின் பிரதான கதாபாத்திரமாக அவர் காணப்படுகின்றார். உடதலவின்ன கூட்டு கொலையில் அவரது பெயரும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
க்லிபர்ட் சொய்ஸாவை SIUவின் பிரதானியாக்குவதன் ஊடாக பல பாதிப்புகள் ஏற்பட கூடும். இராணுவ புலானாய்வு பிரிவு பணிப்பாளராக யார் செயற்பாட்டாலும் இராணுவத்தில் குற்றவாளிகள் தொடர்பிலான செயற்பாடுகளின் போது மிலிட்டரி பிரதானியிடம் அனுப்பி வைக்கப்படும்.
பொலிஸாரினால் இராணுவத்தினரின் குற்ற செயல்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது SIUயுடன் இணைந்து செயற்பட நேரிடும்.
அதற்கமைய இதுவே குற்றவாளிகளை காப்பாற்றிக் கொள்வதற்கு காணப்படுகின்ற சிறந்த இடமாகும். இதன் காரணமாகவே கோத்தபாய ராஜபக்ச தனக்கு வேண்டப்பட்ட ஒருவரான கர்னல் க்லிபர்ட் சொய்ஸாவை அந்த இடத்திற்கு நியமித்துள்ளார் என ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.