பிரித்தானியாவில் அமைந்துள்ள ஒரு குட்டி நகரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஆபாச இணையத்தளங்கள் இயக்கப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள Consett நகரத்தில் இருந்து தான் நூற்றுக்கணக்கான ஆபாச இணையத்தளங்கள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்குள்ள குடிமக்களில் 400 பேருக்கும் மேற்பட்டவர்கள் சிறு சிறு ஆபாச இணையத்தள நிறுவனங்களுக்கு இயக்குநர்களாக செயல்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் டயட் மாத்திரை முதல் மிக மோசமான ஆபாச குறுந்தகடுகள் வரை விற்பனைக்கு கிடைப்பதாக கூறப்படுகிறது.
லட்சக்கணக்கன மில்லியன்களை மிக விரைவில் இங்குள்ள மக்கள் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் மட்டும் இதுபோன்ற 429 நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறித்த நிறுவனங்களுக்கெல்லாம் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் சைமன் டாவ்சன் என்பவர் செயல்பட்டு வருகிறார்.
ஆபாச இணையத்தளங்களை உருவாக்கி செயல்படுத்துவது மடுமின்றி அதில் தேவையான அனைத்து அம்சங்களையும் இவர்களே தயாரித்து பதிவேற்றம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.