சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொழிலதிபர்கள் சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. சேகர் ரெட்டி குறித்து ‘அ’ முதல் ‘ஃ’ வரை முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்ள கீழுள்ள படத்தை காணுங்கள்.
பிறப்பு: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ‘தொண்டான் துளசி’ என்ற கிராமம்.
வேலை: வேலூரில் இருந்து சென்னை ஐ.சி.எஃப்-புக்கு ரயிலில் தினக்கூலியாக பயணம்.
முதல்படி: ரயில்வே கான்ட்ராக்ட் வேலைக்கு… கமிஷன் அடிப்படையில் ஆட்களை பிடித்துக் கொடுப்பது.
இரண்டாவது படி: ரயில்வே யூனியன் தேர்தலின்போது, ‘பலமான’ அணிக்கு ஆட்களைத் திரட்டிக்கொடுத்து தேர்தல் வேலை பார்த்தது.
மூன்றாவது படி: யூனியன் தலைவர் மூலம் ரயில்வே கான்ட்ராக்ட் வேலைகள் கைக்கு வந்தன.
நான்காவது படி: ரயில்வே யூனியன் தலைவர் மூலமாக, வில்லிவாக்கம் (அப்போது ஆசியாவிலேயே பெரிய தொகுதி அதுதான்) தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியிலான வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்ட்.
ஐந்தாம்படி: அ.தி.மு.க. (1994) உறுப்பினர் அட்டை பெறுதல்.
ஆறாவது படி (இறங்குபடி) : தேர்தலில், (1996 – 2001) அ.தி.மு.க. தோல்வி. அதனால், கொஞ்ச காலம் சைலன்ட்.
ஏழாவது படி: அ.தி.மு.க-வில் மீண்டும் (2001 – 2006) தீவிரமாக வலம் வருதல்.
எட்டாவது படி: திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் நெருக்கம்.
ஒன்பதாவது படி: ஜெ. ஆட்சி மற்றும் ஆயுள் நிலைக்க திருப்பதியில் சிறப்புப் பூஜை, அன்னதானம், மருத்துவ முகாம்.
பத்தாவது படி: மருத்துவ முகாம், திருப்பதி லட்டு மூலம் மருத்துவர்கள் விஜயபாஸ்கர், வெங்கடேஷ் வழியாக கார்டனுக்குள் நுழையும் வாய்ப்பு.
11-வது படி: வாரத்தின் ஒவ்வொரு விஷேச நாட்களிலும் போயஸ் கார்டனுக்கு, திருப்பதியில் இருந்தே ரெட்டி கார் மூலம் லட்டு வரவழைக்கப்பட்டு சப்ளை.
12-வது படி: அ.தி.மு.க-வின் சக்தி மையமான போயஸ் கார்டனுக்குள் எளிதில் நுழைந்து திரும்பும் வல்லமையால், மந்திரிகள் சரண்டர்.
13-வது படி: தமிழகம் முழுவதும் ஒப்பந்தப் பணிகளுக்கு ஆர்டர் எடுக்கும் வாய்ப்பு.
14-வது படி: பி.ஆர்.பி.ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பிரதான ‘கனிமவள’ பிரமுகர்களின் நட்பும்… சப்-கான்ட்ராக்ட் பணியும்.
15-வது படி: ஐ.ஏ.எஸ். ராமமோகன ராவின் ஆலோசனையால், ‘மணல் குவாரிகள்’ அரசுடைமையானது. ராமமோகன ராவ், சேகர் ரெட்டியின் நண்பரானார்.
16-வது படி: திருப்பதி தேவஸ்தான தேவசம் போர்டு உறுப்பினர்.
17-வது படி: தமிழக முதல்வர் ஜெ. உடல்நலம்பெற மந்திரி ஓ.பி.எஸ்ஸை திருப்பதிக்கு அழைத்துப் போய் மொட்டை அடித்தார்.
18-வது படி: ஜெ. விரைந்து குணம்பெற அப்போலோவில் அன்னதானம், பூஜை, கோயில்களில் நேர்த்திக்கடன்.
19-வது படி (இறங்குபடி): டிசம்பர்-5 முதல்வர் ஜெ. இறப்பு. டிசம்பர்-6 அன்று மாலை முதலே, ரெட்டி மீது ஐ.டி. கண்காணிப்பு ஆரம்பம்.
20-வது படி (இறங்குபடி): டிசம்பர்-7 ரெய்டில் சிக்கினார் ரெட்டி. வேலூர், காட்பாடி, காந்தி நகர் வீடுகளில், ரெய்டு. அண்ணா நகர், தி.நகர் அலுவலகங்களிலும் ரெய்டு. தொழில் பங்குதாரர்கள் சீனிவாசலு, பிரேம் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு.
21-வது படி (இறங்குபடி): 96 கோடியே 89 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளும், 9 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் ரெய்டில் பறிமுதல் என முதற்கட்டத் தகவல்.ரூ.36 கோடியே 29 லட்சம் மதிப்புள்ள 127 கிலோ தங்கமும் பறிமுதல். கைப்பற்றப்பட்ட மொத்தச் சொத்துக்களின் மதிப்பு ரூ.142 கோடியே 81 லட்சம் என வருமானவரித் துறை அறிக்கை.
22-வது இறங்குபடி: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு. டிசம்பர்-21 சேகர் ரெட்டியும், அவருடைய கூட்டாளி சீனிவாசலுவும் கைது.
23-வது இறங்குபடி: சி.பிஐ. கோர்ட்டில் சேகர் ரெட்டி – சீனிவாசலு ஆஜர். ஜனவரி-3 வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவு.