சென்னை: நடிகை சமந்தா மாலத்தீவுகளில் எடுத்த புகைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். நடிகை சமந்தாவுக்கும் அவரது காதலரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.
இந்நிலையில் சமந்தா கிறிஸ்துமஸை கொண்டாட மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார். மாலத்தீவில் அவர் இயற்கை அழகோடு ஒன்றிவிட்டார்.
மாலத்திவீல் அவர் கருப்பு நிற உடை, கருப்பு தொப்பி அணிந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் ரொம்பவே குட்டியாக ஒரு உடை அணிந்துள்ளார்
சமந்தா அணிந்திருக்கும் உடையை பார்த்த ரசிகர் ஒருவரால் கருத்து தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. சம்மு பேண்ட்டை மறந்துவிட்டீர்கள் என தெரிவித்துள்ளார்.
சமந்தாவின் புகைப்படத்தை பார்த்த மற்றொரு ரசிகர் நல்லா இல்லை என தெரிவித்துள்ளார்.
அன்டர் வேர் எங்கே என ஒரு ரசிகர் சமந்தாவிடம் கேட்டுள்ளார்.
உலகில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ எது தெரியுமா?
மும்பை: ரயீஸ் படத்தில் வரும் லைலா மெய்ன் லைலா பாடல் வீடியோ தான் உலகில் அதிகமானோர் பார்த்து ரசித்த வீடியோ ஆகும்.
ஷாருக்கான் நடித்துள்ள ரயீஸ் படம் ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மாஹிரா கான் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
சன்னி ஆட்டம் போட்டுள்ள லைலா மெய்ன் லைலா பாடல் வீடியோ தான் உலகில் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்ட வீடியோ ஆகும். சன்னியின் பாடல் வீடியோ இப்படி ஒரு சாதனை படைத்துள்ளது.
தனது பாடல் வீடியோ படைத்த சாதனையை பார்த்த சன்னி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாதனையை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
குர்பானி படத்திற்காக ஜீனத் அமன் ஆடிய லைலா மெய்ன் லைலா பாடலுக்கு தான் தற்போது சன்னி நடனம் ஆடியுள்ளார். இது ஜீனத் பாடலை விட வித்தியாசமாக வந்துள்ளது என்கிறார் சன்னி.