தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்­தி­லுள்ள அவ­நம்­பிக்­கைகள் அபிப்­பி­ராய பேதங்கள் என்ற எதிர் ­மனப் போக்­குகள் ஆயுத பண்பு கொண்ட குழுக்­க­ளுக்கு இடையே அடிக்­கடி முனைப்பு பெற்றுக் கொண்­டாலும் மாற்று தகை­மை­க­ளுக்­கான சிந்­த­னை­க­ளையோ எண்­ணங்­க­ளையோ தோற்­று­விக்­காத போக்கே இருந்து வந்­துள்­ளது.

இந்த போக்­குக்கு ஒரு மாற்று நிலை உரு­வாக வேண்­டிய தேவை. இரண்டு இடை நிலைப் புள்­ளி­க­ளி­லி­ருந்தே ஆரம்­ப­மா­கின்­றது என்­பது ஒரு நிதர்­ச­ன­மான உண்மை.

அந்த புள்­ளிகள் பற்றி அதிகம் ஆராய வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஒன்று வட­மா­காண சபைத் தேர்­த­லுக்­காக வர­வ­ழைக்­கப்­பட்ட ஆளுமை. இன்­னொன்­று தமிழ் தேசியம் தடு­மாறிப் போகி­றது என்ற அதி­ருப்­தி­க­ளாலும் விரக்­தி­யி­னாலும் உருவாக்கப்­பட்ட புதிய அமைப்பு.

இவை­யி­ரண்­டுமே தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்­பிற்கு சவா­லா­கவும் கீரைக் கடைக்கு எதிர்க்­க­டை­யா­கவும் பார்க்­கப்­பட்­டதன் கூட்டு மொத்த விளை­வையே இன்று எல்­லோரும் பார்த்து கொண்­டி­ருக்­கின்றோம்.

தமிழ் மக்­க­ளுக்கு இன்று அவ­சி­ய­மா­னது அர­சியல் தீர்வா? அபி­வி­ருத்­தியா? ஒற்­று­மையா என்ற கேள்­விக்கு விடை­ய­ளிப்­ப­தென்­பது கடினமான காரியம்.

இத்­த­கைய குழப்­பத்தை எல்லோர் மன­திலும் உண்­டாக்கி விட்­டி­ருப்­பது வட­மா­காண சபையின் கல­வ­ரங்­களும் குழப்­பங்­களும் முரண்பாடு­களும் முட்டி மோதல்­க­ளு­மாகும்.

மழை விட்டும் தூவானம் ஓய­வில்­லை­யென்­ப­து போல் வட­மா­காண சபையின் ஆட்சி முறை­க­ளிலும் அதி­கார வன்­மு­றை­க­ளிலும் பல கெடு­பி­டிகள் புதிது புதி­தாக தலை­தூக்கி கொண்­டி­ருக்­கின்­றன.

வட­மா­காண சபையின் முத­ல­மைச்­ச­ருக்கும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சிக்கும் இடை­யே­யுள்ள முரண்­பா­டு­க­ளுக்கும் முட்டி மோதல்களுக்கும் முற்று புள்ளி வைத்­தது போல் தென்­பட்­டாலும் நீறு­பூத்த நெருப்பை போல் உள்­ள­டங்கி காணப்­படும் முரண்­பா­டுகள் இன்னும் வெளிப்­ப­டவே செய்­கின்­றன.

வட­மா­காண சபை முதல்வர் விவ­கா­ரத்தை கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் சாது­ரி­ய­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் கையாண்டு தீர்வை கொண்டு வந்­தி­ருக்­கின்­ற­போதும் அது வேறு வேறு திசை­களில் வெடிக்கப் பார்க்­கி­ற­தென்­பது கூட எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற விடயந்தான்.

அர­சியல் தீர்வு விவ­காரம் கைகூடி வரு­கின்ற வேளையில் அல்­லது அர­சியல் யாப்­புக்­கான முன்­னெ­டுப்­புக்கள் தீவிரம் அடைந்து காணப்படு­கின்ற நிலையில் தமிழ் தரப்­பினர் மத்­தியில் குறிப்­பாக வட மாகாண ஆட்­சியை நடத்­தி­ கொண்­டி­ருக்கும் ஆளும் தரப்பினர்களுக்கு இடையே முரண்­பா­டு­களும் முட்டி மோதல்­களும் இடம்­பெற்று கொண்­டி­ருக்­கின்றன.

mathammaதமிழர் தரப்­பி­ன­ரி­டையே ஒற்­று­மை­யில்லை. ஒருமித்த திசை நோக்­கிய பயணம் இல்­லாமல் ஒவ்­வொரு கட்­சி­யி­னரும் ஒவ்­வொரு தலை­மை­களும் தம் தம் திசை நோக்கிப் பய­ணிக்க முற்­ப­டு­கி­றார்கள் என்ற குற்­றச்­சாட்­டு­களும் விமர்­ச­னங்­களும் சகல தரப்­பி­ன­ராலும் முன்­வைக்­கப்­படும் நிலையே காணப்­ப­டு­கி­றது.

இவ்­வா­றான கருத்­துக்கள் உள்ளூர் மக்­க­ளான வட கிழக்கு மக்கள் மத்­தியில் மாத்­தி­ர­மல்ல, தென்­னி­லங்கை பெரும்­பான்மை மக்களிடமும் அவர்­களின் தலை­மை­க­ளிடம் கூட ஏற்­பட்­டி­ருப்­பது கவலை தரும் விட­யந்தான்.

இதற்கு அப்பால் சர்­வ­தேச சமூகம் மற்றும் நாட்டின் தலை­வர்கள் என்ற வகை­யிலும் இக் குழப்ப நிலை­களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்­ளமை நிலை­மை­களை சிக்­க­லாக்கும் போக்­கா­கவே காணப்­ப­டு­கி­றது.

ஊர் இரண்­டு­பட்டால் கூத்­தா­டிக்கு கொண்­டாட்டம் என்­ப­து போல் தமிழ் கட்­சி­க­ளுக்கு இடையே ஏற்­பட்­டி­ருக்கும் குழப்பம் முரண்­பாடு பிணக்கு என்ற விவ­கா­ரங்கள் எதி­ரி­க­ளுக்கும் மாற்­றா­னுக்கும் வெறும் வாய்க்கு அவல் கிடைத்­தது போல் ஆகி­விட்ட நிலை­மையே உருவாக்­கி­யி­ருக்­கி­றது.

ஆயுதப் போர் மௌனிப்­புக்கு பின் ஒரே­யொரு மாற்று வழி­யாக தமிழ் மக்கள் தேர்ந்­தெ­டுக்க வேண்­டிய பாதை­யாக இருந்­தது கூட்­ட­மைப்பு எனும் ஆபத்து வாய்ந்­த­வ­னென்று கூறப்­ப­டு­கின்ற இரட்­சகன். இதை புறக்­க­ணித்தோ அல்­லது விலத்திக் கொண்டோ இன்­னு­மொரு பாதையை மார்க்­கத்தை தேர்ந்­தெ­டுக்கக் கூடிய வாய்ப்பு தமிழ் மக்­க­ளுக்கு இருந்­த­தே­யில்லை.

தமி­ழ­ரசுக் கட்­சி­யெனும் மரபு வழிக்­கட்­சி­யோடு இணைக்­கப்­பட்ட ஆயுதப் பண்பு கொண்ட…. கட்­சி­க­ளையும் இணைத்­துக்­கொண்ட கூட்டமைப்பின் பின்னே செல்ல வேண்­டிய தேவை 2010 ஆம் ஆண்­டுக்குப் பின் வட கிழக்கு மக்­க­ளுக்கு ஏற்­பட்­டது.

தவிர்க்­கப்­பட முடி­யாத விடயம். இருந்த போதிலும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியை தலை­மைக்­கட்­சி­யாக ஏற்றுக் கொள்ள வேண்­டிய தேவையும் உரு­வா­கி­யது உண்­மையே!

இன்­னொ­ரு­வ­கையில் கூறு­வ­தானால் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மையின் கீழ் எல்­லோரும் ஒன்­றி­ணைந்து செல்ல வேண்டிய அவ­சி­யமும் உண­ரப்­பட்­டது.

இருந்த போதிலும் கூட்­ட­ணிகள் நீடித்த வாழ்க்கை கொண்­ட­தாக இருப்­ப­தில்­லை­யென்­பது பொது­வான அபிப்­பி­ராயம் மாத்­தி­ர­மின்றி உலகில் பல உதா­ர­ணங்­க­ளு­முண்டு.

தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பென்­பது போர் முடி­வுக்குப் பின்­னுள்ள நிலை­மை­களில் தமிழ் மக்­களைத் தாங்கிப் பிடிக்கும் கட்­சி­யா­கவே கரு­தி­னார்கள் என்­ப­தற்கு மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது.

இடை­யி­டையே கூட்­ட­மைப்பு பதி­யப்­பட வேண்டும். அர­சியல் கட்­சி­யாக மாற்­றப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கைகள் இடைக்­கிடை எழுந்தது மாத்­தி­ர­மின்றி அது உட்­கட்சி போராட்ட நிலை­மை­களை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்­தி­லுள்ள அவ­நம்­பிக்­கைகள் அபிப்­பி­ராய பேதங்கள் என்ற எதிர் ­மனப் போக்­குகள் ஆயுத பண்பு கொண்ட குழுக்­க­ளுக்கு இடையே அடிக்­கடி முனைப்பு பெற்றுக் கொண்­டாலும் மாற்று தகை­மை­க­ளுக்­கான சிந்­த­னை­க­ளையோ எண்­ணங்­க­ளையோ தோற்­று­விக்­காத போக்கே இருந்து வந்­துள்­ளது.

இந்த போக்­குக்கு ஒரு மாற்று நிலை உரு­வாக வேண்­டிய தேவை. இரண்டு இடை நிலைப் புள்­ளி­க­ளி­லி­ருந்தே ஆரம்­ப­மா­கின்­றது என்­பது ஒரு நிதர்­ச­ன­மான உண்மை.

அந்த புள்­ளிகள் பற்றி அதிகம் ஆராய வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஒன்று வட­மா­காண சபைத் தேர்­த­லுக்­காக வர­வ­ழைக்­கப்­பட்ட ஆளுமை. இன்­னொன்­று தமிழ் தேசியம் தடு­மாறிப் போகி­றது என்ற அதி­ருப்­தி­க­ளாலும் விரக்­தி­யி­னாலும் உரு­வாக்­கப்­பட்ட புதிய அமைப்பு.

இவை­யி­ரண்­டுமே தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு சவா­லா­கவும் கீரைக் கடைக்கு எதிர்க்­க­டை­யா­கவும் பார்க்­கப்­பட்­டதன் கூட்டு மொத்த விளை­வையே இன்று எல்­லோரும் பார்த்து கொண்­டி­ருக்­கின்றோம்.

இன்­னு­மொரு விட­யத்­தையும் இங்கு கூட்டிப் பார்க்க வேண்டும். 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­த­லின் ­போது வேட்­பாளர் நிய­மனப் பட்­டியல் கார­ண­மாக உண்­டா­கிய மனத் தாக்­கங்­களும் பக்­க­வி­ளை­வு­களும் கூட்­ட­மைப்பின் போக்கை ஒரு ஆரோக்­கி­ய­மான வழியில் நடத்திச் செல்­ல­வில்லை.

இவ்­வாறு பார்க்­கின்­ற­ போது வர­லாற்று மய­மான முரண்­பா­டு­களும் பூசல்­க­ளுமே வட கிழக்கின் இன்­றைய ஒட்­டு­மொத்த விளைவுகளுக்கு அடி­பூண்ட கார­ண­மாக இருந்­தி­ருக்­கி­றது.

இத­னுடன் இன்­னு­மொரு விட­யத்­தையும் இணைத்து கொள்ள வேண்டும். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலின் முடி­வு­களின் படி கூட்­ட­மைப்­புக்கு எதிர்­பா­ராமல் கிடைத்த தேசியப் பட்­டி­யல்கள் இரண்டு.

இவ்­ வி­வ­கா­ரங்­களை ஒரு பட்­ட­றி­வா­கவோ அல்­லது அனு­மா­ன­மா­கவோ கொண்டு பார்க்­கின்­ற­ போது ஒரு உண்மை புலப்­பட முடியும்.

இவை­யெல்லாம் சொல்­லாமல் கொள்­ள­மாமல் நேற்று முளைத்­த­வை­யா­கவோ அல்­லது இன்று உரு­வா­கி­ய­தா­கவோ கொள்ள முடி­யாது.

வட­மா­கா­ணத்தின் அனைத்து நிலை­மை­க­ளிலும் ஒரு வர­லாற்று ஓட்டம் உட்­க­லந்து வரு­வது வெளிப்­ப­டை­யா­கவே புலப்­ப­டு­கின்ற விடயம்.

வட கிழக்கு விவ­காரம் இவ்­வ­ளவு தீவிரம் கொண்­ட­மைக்­கான கார­ண­மென்ன? இவ்­ வி­வ­கா­ரத்தில் கூட்டுக் கட்­சி­யென்ற வகையில் ஆயுதப் பண்­புகள், கொண்ட கட்­சிகள் விட்­ட­த­வ­றென்ன.

தலைமைக் கட்­சி­யென்ற வகையில் தமி­ழ­ரசுக் கட்சி தனது ஆளுமைப் போக்கை எவ்­வாறு நெறிப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும் என்­பது அறி­யப்­பட வேண்­டிய தகவல்.

வட­மா­காண சபை­யை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது ஆளு­கைக்கு உட்­ப­டுத்­தி­னாலும் தமி­ழ­ரசுக் கட்சி சார்ந்த உறுப்­பி­னர்கள் அதிக எண்­ணிக்கை கொண்­ட­வர்­க­ளாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இருந்­த­போ­திலும் கூட்­ட­மைப்பு என்ற தத்­து­வத்தின் அடிப்­ப­டையில் ஏனைய கட்­சி­களும் சம­பலம் கொண்­டவை என்ற தத்­து­வத்தின் அடிப்­ப­டை­யி­லேயே மதிக்­கப்­பட்­டது மாத்­தி­ர­மின்றி பத­வி­களும் பங்­கி­டப்­பட்­டி­ருந்­தன.

2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை இயங்கத் தொடங்­கிய காலத்­தி­லி­ருந்து 2015 ஆம் ஆண்டு நல்­லாட்­சி­யென்ற பெயரில் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஆட்சி அமைக்­கப்­படும் வரை வட­மா­காண சபை மத்­திய அரசின் எதிர்­வா­தி­க­ளா­கவே இயங்­கி­னார்கள் என்­பது பொது­வான உண்மை.

இன்னும் விப­ர­மாக கூறு­வ­தாயின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிப் போக்கை நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் எதிர்க்கும் சபை­யா­கவே வடக்கு மாகாண சபை இருந்து வந்­துள்­ளது.

இவ்­வா­றா­ன­வே­ளை­க­ளி­லெல்லாம் மாற்றுக் கட்­சிகள் மத்­திய அரசை ஆத­ரிக்கும் நிலை காணப்­பட்­ட­போதும் கூட்­ட­மைப்பு அந்த கைங்கரி­யத்தை செய்­ய­வு­மில்லை.

செய்­வ­தற்கு ஏற்ற நிலையும் இருக்­க­வில்லை. கூட்­ட­மைப்பு ஒரு கூட்டு கட்­சி­களின் கலப்­பாக இருந்­த­போ­திலும் இவை அனைத்­தி­னது நோக்­கமும் போக்கும் ஒன்­றா­கவே இருக்க வேண்­டி­யி­ருந்­தது.

103bb207-ec1e-495c-95c5-9e67c9248ae8எப்­பொ­ழுது நல்­லாட்சி உரு­வாக்­கப்­பட்­டதோ அங்­கி­ருந்­துதான் பிணக்­கு­க­ளுக்­கான அடி­யி­டுகை இடப்­பட்­டி­ருக்­கி­றது என்­பது ஒரு சாதா­ரண வாய்ப்­பாடு. இவற்றின் பின்­ன­ணியில் பல பிர­யோ­கங்கள் இருந்­தது என்­பதும் உண்­மையே!

உண்­மையில் வடக்கு மாகாண சபையின் தற்­போ­தைய பிரச்­சி­னை­க­ளுக்கு தூண்­டு­கோ­லாக மாகாண சபையில் அங்கம் பெறும் அனைத்து கட்­சி­களும் ஒத்து ஊதி­யுள்­ளார்கள் என்­பது ஒரு கசப்­பான உண்­மைதான்.

அமைச்­சர்கள் பல்­வே­று­வி­த­மான ஊழல்­க­ளிலும் மோச­டி­க­ளிலும் ஈடு­பட்டு கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்ற குற்­றச்­சாட்டை பொது மக்களை விட மாகாண சபை உறுப்­பி­னர்­களே சபையில் வேண்­டிய நேர­மெல்லம் விமர்­சித்­துள்­ளார்கள். பிரஸ்­தா­பித்­துள்­ளார்கள்.

அவ்­வாறு இருந்த நிலை ஏன் மாறி­யது என்­ப­தற்கு சரி­யான கார­ணத்தை கண்­டு­கொள்ள முடி­யா­விட்­டாலும் ஊழல் மோசடி என்ற விவகாரங்கள் வந்­த­ போது தங்கள் தங்கள் கட்­சி­களை சுதா­க­ரித்து கொள்ள நினைக்­காமல் உண்மை தன்­மைக்­காக கூட்டுக் குரல் கொடுத்­தி­ருக்க வேண்டும்.

குற்றம் புரிந்­த­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்­டு­மென்­பது இயற்­கை­யான நியதி. ஆனால் உத்­தி­யோ­க­பூர்­வ­மான குற்றம் காணப்படாதவர்­க­ளையும் எதிர்­கா­லத்தில் குற்­ற­வா­ளி­க­ளாக காண வேண்­டு­மென்ற நோக்கில் நிய­தி­க­ளையும் சட்­டங்­களை மாற்ற வேண்டி வந்­ததன் பலா­ப­லனே இன்று வட­ம­ாகாண சபை நாற்­ற­மெ­டுப்­ப­தற்­கான சபை­யாக ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இது தார்­மீக அடிப்­ப­டை­யிலும் சமூகம் சார்ந்த வகை­யிலும் சிந்­திக்­கப்­பட வேண்­டிய விடயம். உரி­மைக்­காகப் போரா­டிய ஒரு சமூ­கத்தின் எல்லாப் பிர­கி­ரு­தி­க­ளுமே ஊழலும் மோச­டியும் கொண்­ட­வர்கள் என்ற உல­க­ளா­விய அளவில் தப்­பான அபிப்­பி­ரா­­யத்தை உரு­வாக்கும் அள­வுக்கு எல்­லாமே நடந்­தே­றி­ விட்­டது.

கொச்சை தமிழில் கூறு­வ­தனால் நீங்கள் எல்­லோ­ருமே கள்ளர். நீங்­களா போரா­டி­னீர்கள் என்று கை நீட்டி ஏள­னப்­ப­டுத்தும் அள­வுக்கு எல்லாமே தலை கீழாக்­கப்­பட்டு விட்­டது.

இன்று தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கின்ற விடயம் மாற்­றங்கள் அபி­வி­ருத்­திகள், அர­சியல் தீர்வு என்ற அள­வு­க­ளுக்கும் அப்பால் ஒற்றுமையென்ற விடயம் முன் நிலைப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

வட கிழக்­கி­லுள்ள தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­துவப்­ப­டுத்­து­கின்ற கட்­சி­க­ளுக்கு இடையில் நேரான சீரான ஒற்­று­மையை கொண்­டு­வர வேண்­டிய கால கட்­டத்தில் வந்து நிற்­கின்­றோ­மென்­பது தான் யதார்த்தம்.

ஏலவே எல்­லா­வ­கை­யிலும் எதை எதை­யோ­வெல்லாம் நம்பி ஏமாந்து போன­வர்­க­ளாக தமிழ் மக்கள் காணப்­ப­டு­கின்­றார்கள். இன்­றைய சூழலில் ஒற்­று­மையைப் பலப்­ப­டுத்­து­வதே காலத்தின் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அண்­மையில் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த இந்­தியப் பிர­த­மர் நரேந்­திர மோடியை கூட்­ட­மைப்­பினர் சந்­தித்து உரை­யா­டி­ய ­போது அவர் வலி­யு­றுத்­திய ஒரு விடயம். தமிழ் மக்­க­ளுக்கு இடை­யி­லான ஒற்­றுமை.

இந்த ஒற்­று­மையை மக்கள் வேண்டி நிற்­கின்­ற­போதும், மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­ப­வர்­கள் நாங்கள் என்று கூறிக் கொள்­கின்ற கட்சி­யா­ளர்கள் தங்­க­ளுக்குள் ஒரு வட்­டத்தைப் போட்டுக் கொண்டு தங்கள் கட்­சி­யையும் தங்­க­ளையும் பெரு­மைப்­ப­டுத்த நினைக்கின்றார்­களே தவிர மக்­களின் நோக்­கங்­க­ளையும் அபிப்­பி­ரா­யங்­க­ளையும் நிறை­வேற்­று­ப­வர்­க­ளாக காணப்­ப­டு­வ­தில்லை.

இவர்­க­ளு­டைய இப்­பி­ரிப்­பாண்­மையால் மக்கள் தங்­க­ளுக்குள் தாங்கள் மோதிக் கொள்­வது மாத்­தி­ர­மின்றி தலை­வர்­களை நிந்­திப்­பதும் விமர்­சிப்­ப­து­மான மோச­மான நிலை­மை­களே உரு­வாக்கி விடப்­ப­டு­கி­றது.

வெண்ணெய் திரண்டு வரு­கின்ற வேளையில் தாழி உடைந்த கதை­போ­லவே தமி­ழர்­க­ளு­டைய இன்­றைய நிலை காணப்­ப­டு­கி­றது. இதற்­கு­ரிய பரி­கா­ரங்கள் எங்­கி­ருந்து கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது என்­பதே எஞ்சி நிற்கும் கேள்­வி­யாகும்.

தமிழ் மக்­க­ளுக்­கான கட்­சிகள் ஒவ்­வொன்றும் தம்­மி­டை­யே­யுள்ள மன வீக்­கங்­க­ளையும் கௌர­வங்­க­ளையும் தூக்கி ஒரு­புறம் ஒதுக்கி வைத்­து­விட்டு தம்­மி­டை­யே­யுள்ள ஒற்றுமையைப் பலப்படுத்தும் கைங்கரியங்களை முன்னிலைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தம்மைத்தாமே சுய விமர்சனத்துக்கு உள்ளாக்குவதன் மூலமே பெறுமதிமிக்க முடிவுகளையோ தீர்மானங்களையோ எடுக்க முடியும்.

இக்கட்டுரையின் முற்பகுதியில் குறிப்பிட்டது போல் கூட்டு கட்சிகள் அல்லது கூட்டணிகளின் ஆயுட்காலமென்பது நீண்டகால வாழ்வைக்  கொண்டதல்ல என்பதை உலக மற்றும் உள்ளூர் நிலைமைகளை படிப்பினையாக கொண்டு நாம் அறிந்து கொண்டாலும் அதை பொய்யாக்குகின்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கின்ற கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, புௌாட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய அனைத்து கட்சிகளும் அமைப்பை பலப்படுத்த வேண்டும்.

அதற்கு ஒன்றுக்கொன்றான விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளவும் தியாகம் பண்ணவும் தயாராக இருக்கின்ற நிலையிலேயே தமிழ் மக்களின் பலமும் ஒற்றுமையும் இந்த கூட்டமைப்பின் ஒற்றுமை மூலம் நிரூபிக்கப்பட முடியும்.

சில வேளைகளில் தமது பலத்தை பரீட் சித்து காட்டவோ அல்லது மக்கள் செல்வாக்காளர் நாமென்று விதண்டாவாதம் பேசி தனிப்போக்கை யாராவது கடைப்பிடிக்க எத் தனிப்பார்களானால் அது விபரீதமாகவும் மாற்று விளைவுகளையும் தந்து விடுமென்பதை ஒவ்வொரு கட்சியும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உண்மையை சொல்வதனால் பேதங்க ளையும் பிணக்குகளையும் முரண்பாடு களை யும் மறந்து விட்டு ஒற்றுமையை பலமாக கட்டி யெழுப்ப வேண்டிய கால கட்டம் மாத் திரமல்ல. சந்தர்ப்பங்களும் இல்லாமல் போய்விடு மென்பதை உணர வேண்டும்.

திரு­மலை நவம்

Share.
Leave A Reply