ilakkiyainfo

தற்கொலை விளையாட்டுக்கு இரையான தமிழ் மாணவன்! தவிக்கும் பெற்றோர் (காணொளி)

இந்தியா – மதுரையில் புளூவேல் இணைய விளையாட்டை விளையா டியதன் காரணமாக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை மாவட்டம் விளாச்சேரியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விளையாட்டு மோகத்தில் இருந்த விக்னேஷ் கடந்த மூன்று தினங்களாக யாருடனும் பேசாமல் ஒருவிதமான குழப்பமான மனநிலையோடு இருந்ததாக கூறப்படுகின்றது.

_97614487_whatsappimage2017-08-31at2.50.42pmஇந்த நிலையில், நேற்று விக்னேஷின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் புளுவேல் விளையாட்டை விளையாடி யுள்ளார்.

ஆட்டத்தின் முடிவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் விக்னேஷின் இடது கையில் நீலத் திமிங்கலத்தின் படம் வரைய ப்பட்டுள்ளது. Suicide Game எனப்படும் புளூவேல் விளையாட்டின் விபரீதம் குறித்து கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

நன்றாக படிக்க கூடிய தமது மகன் விஷம விளையாட்டினால் உயிரிழந்த தைக் கண்டு விக்னேஷின் பெற்றோர் கலங்கி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டத்தில் யாராவது இந்த விளையாட்டில் ஈடுபடுவது குறித்துத் தெரியவந்தால், காவல்துறைக்கு தகவல் அளிக்க தனி எண் ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை நகரக் காவல்துறை இது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவில் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த ப்ளூ வேல் கணினி விளையாட்டில் ஈடுபடுபவர்கள் 50 வேலைகளைச் செய்ய வேண்டும். அதிகாலை 4.20க்கு எழுவது, பேய்ப் படங்களைத் தனியாகப் பார்ப்பது, சுயமாக காயங்களை ஏற்படுத்திக்கொள்வது, திமிங்கிலத்தின் படத்தை கூர்மையான பொருளால் கையில் வரைந்துகொள்வது, உயரமான கட்டடத்தின் உச்சிக்கு ஏறுவது போன்ற பணிகள், விளையாட்டின் நிர்வாகிகளால் அளிக்கப்படும். முடிவில் அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் இந்த விளையாட்டிற்கு 130 பேர்வரை பலியாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

சமூகவலைதளங்களில் இருந்தும் தேடுபொறிகளில் இருந்தும் இந்த விளையாட்டிற்கான இணைப்பை நீக்கும்படி இந்திய அரசு ஏற்கனவே இணையதள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

Exit mobile version