முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் கரமொன்றைத் துண்டித்து சுறா மீனுக்கு இரையாக்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் ஊழல்கள் குறித்த கட்டுரைகள் காரணமாக பிரபல சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு என்ன நடந்தது என்பது பல வருடங்களாக மர்மமாகவே நீடித்து வருகிறது.
எனினும் தனது கணவரை கண்டுபிடித்துத் தருமாறும், அவரது கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தண்டிக்குமாறும் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வந்திருந்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் சீ.ஐ.டி.யினர் வசம் விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டது.
பிரகீத் எக்னெலிகொட இராணுவப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு மின்னேரிய இராணுவ முகாமில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டது வரையான ஆதாரங்கள் சீ.ஐ.டி.யினரால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவப் புலனாய்வாளர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
எனினும் பிரகீத் எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் அண்மைக்காலம் வரை வெளிவரவில்லை. இந்த நிலையில் அவர் மின்னேரிய இராணுவ முகாமில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலம் கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலைக் கடற்பரப்பில் அமிழ்த்தப்பட்டு உள்ளதாகவும்,
இதற்கிடையே பிரகீத்தின் சாவை உறுதிப்படுத்தும் வகையில் அவரது சடலத்திலிருந்து கரமொன்று துண்டிக்கப்பட்டு படுகொலைக்கான உத்தரவைப் பிறப்பித்திருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வாறு துண்டிக்கப்பட்ட பிரகீத்தின் கை தனது வீட்டில் வளர்க்கப்பட்ட சுறா மீனுக்கு கோத்தபாய ராஜபக்சவினால் இரையாக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.