யாழ் ஊர்காவற்துறைப் பகுதியில் யுவதி ஒருவரைக் காதலிப்பதாக ஏமாற்றி அவருடன் அந்தரங்கமாக இருந்த பின்னர் ஏமாற்றிய பொலிஸ்காரருக்கு எதிராக குறித்த யுவதி ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
24 வயதான குறித்த யுவதியை அந்த ஊரையே சொந்த இடமாகக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காதலித்து வந்ததாகவும் யுவதியைக் கர்ப்பமாக்கிய பின்னர் அந்த யுவதியுடனான தொடர்பைத் துண்டித்து விட்டதாகவும் அவரால் தான் கர்ப்பமாக உள்ளதாகவும் யுவதி ஊர்காவற்துறை பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
தற்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் புத்தளம் பகுதியில் கடமையாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.