வட மாகாண முதலமைச்சர் இன்று மல்வத்து பீட மகாநாயக்க தேரரை சந்தித்தார்
வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இன்று முற்பகல், மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.
மல்வத்து விகாரைக்குச் சென்ற வட மாகாண முதலமைச்சர், திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல மகாநாயக்கத் தேரரை சந்தித்தார்,.
வடக்கில் பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளமை தொடர்பிலும் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் முதலமைச்சர் மகாநாயக்க தேரரிடம் தெளிவுபடுத்தியிருந்தார்.
இதன்போது, வட மாகாண முதலமைச்சருக்கு, மகாநாயக்க தேரர் புத்தர் சிலையொன்றையும் தம்மபத போதனைகள் அடங்கிய நூல் ஒன்றையும் வழங்கினார்.
வட மாகாண நிலை மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட கடிதமொன்று இதன்போது மகாநாயக்க தேரரிடம் கையளிக்கப்பட்டது.