ilakkiyainfo

இணைய கொலைக்காரன்!! காவு கேட்கும் நீலத்திமிங்கிலம் – எஸ். வினோத் (சிறப்பு கட்டுரை)

இரவில் தனி­யாகப் பேய்ப் படம் பார்ப்­பது, கையில் பிளேடால் வரை­வது, கண்ணை மூடிக்­கொண்டு மிக வேக­மாக சைக்­கிளில் பய­ணிப்­பது என்­ற­வாறு அமைந்­தி­ருக்கும்.

இறு­தி­யாக நீங்கள் வெற்றி பெறு­வ­தற்­கான கடைசி சவா­லுக்­காக காத்­தி­ருக்­கும்­போது, இறுதி சவால் உங்களை தற்­கொலை செய்துகொள்ளச் சொல்லும்.நீங்கள் தற்­கொலை செய்­து ­கொள்ள முடி­யாது என மறுத்தால், ஆட்­டத்தில் இருந்து விலக முடி­யாது என்­ப­துதான் இதில் இருக்கும் பேரா­பத்து.

2015 ஆம் ஆண்டு முதல் தற்­கொலை நிகழ்ந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனை தொடர்ந்து இன்று வரை உலகில் ஆயி­ரக்­க­ணக்­கான சிறுவர்கள் மற்றும் இளை­ய­வர்­களின் உயிரை தற்­கொலை எனும் வடிவில் காவு கொண்­டுள்­ளது இந்த புளூவேல். இந்த பட்­டி­யலில் எமது அயல் நாடான இந்­தி­யாவும் இணைந்­துள்­ளமை எம்மை கவ­லை­யும் பீதி­யும் அடை­யச்­செய்­துள்­ளது.

விளை­யாட்டாக கூட விளை­யாடி பார்க்கக் கூடாத ஒரு விளை­யாட்டு ரஷ்­யாவில் பிறந்து அயல் நாடான இந்­தியா வரை பல உயிர்­களை தற்­கொலை எனும் போர்­வையில் காவு­கொண்­டுள்­ளது புளூவேல்.

பொது­வாக கணினி விளை­யாட்­டுக்கள் சிறு­வர்­களை முழு­மை­யாக தம் வசம் ஈர்த்து வசி­யப்­ப­டுத்தி விடு­கின்­றன.

இதனால் சிறு­வர்கள் கணினி விளை­யாட்­டுக்கு அடி­மை­க­ளாகி கல்விச் செயற்­பாட்டில் இருந்து திசை மாறு­கின்­றனர். அவ்­வாறு இன்று உலகை அச்­சத்­திற்கு உள்­ளாக்கி உள்ள மற்­று­மொரு விளை­யாட்டு புளூவேல்.

நீலத் திமிங்­கிலம் என தமிழில் அர்த்­தப்­படும் இந்த புளூவேல் கேம், இன்று உலகில் பர­வ­லாக பேசப்­படும், பல­ரது சாபத்திற்குள்ளானதுமான ஒரு விளை­யாட்­டாக மாறி­யுள்­ளது. இந்த சாபத்­திற்கு காரணம் இதை விளை­யா­டு­பவர்­க­ளுக்கு போட்டி முடிவில் கிடைக்கும் பரி­சுதான்.

பரிசு என்­றதும் அது பணமோ பொருளோ அல்ல உயிர்…! பொது­வாக போட்டி ஒன்றில் வெற்றி பெறு­ப­வ­ருக்­குதான் பரிசு கிடைக்கும். ஆனால் இது விதி­வி­லக்­கா­னது. இந்த போட்­டியில் போட்­டி­யாளர் இறு­தியில் தன் உயிரை போட்டி ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு பரி­ச­ளிக்க வேண்டும். இதுதான் போட்­டியின் விதி.

பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முன்னாள் உள­வியல் மாண­வ­ரான ரஷ்யாவைச் சேர்ந்த பிலிப் புடகின் என்­பவர் இந்த விளை­யாட்டைக் கண்­டு­பி­டித்­துள்ளார்.

சமூ­கத்தில் எந்த மதிப்பும் இல்­லாமல் இருப்­ப­வர்­களை தற்­கொலை செய்­ய­வைத்து அதன் மூலம் சமூ­கத்தை “சுத்தம்” செய்­வ­தாக தன் தரப்பு நியாய வாதத்தை முன்­வைத்து பிலிப் இந்த விளை­யாட்டை அறி­முகம் செய்­துள்ளார்.

asset-version-7ad38d2226-blue

இந்த விளை­யாட்டால் 2015 ஆம் ஆண்டு முதல் தற்­கொலை நிகழ்ந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனை தொடர்ந்து இன்று வரை உலகில் ஆயிரக்­க­ணக்­கான சிறு­வர்கள் மற்றும் இளை­ய­வர்­களின் உயிரை தற்­கொலை எனும் வடிவில் காவு கொண்­டுள்­ளது இந்த புளூவேல். இந்த பட்­டி­யலில் எமது அயல் நாடான இந்­தி­யாவும் இணைந்­துள்­ளமை எம்மை கவ­லை­யும் பீதி­யும் அடை­யச்­செய்­துள்­ளது.

போட்­டி­யிட்டால் நாம் ஏன் தற்­கொலை செய்­துகொள்ள வேண்டும் என்ற கேள்வி உங்­க­ளுக்குள் எழு­கின்­ற­தல்­லவா? அது தான் புளூவேல் போட்­டியில் உள்ள மாயை.

50 சவால்­களை கொண்­டுள்ள இப் போட்­டியில் சில தம்மைத்தாமே துன்­பு­றுத்­திக்­கொள்ளும் வகை சவால்களையும் உள்­ள­டக்­கி­யது. இறுதி சவால் தற்­கொலை.

இவ்­வாறு அபா­ய­க­ர­மான சவால்­களை கொண்ட புளூவேல் என்­பது இணை­யத்தில் குழு­வாக ஆடப்­படும் ஒரு விளை­யாட்டு. இந்த விளை­யாட்டை நாமாக தேடிப் போய் விளை­யாட வேண்­டிய அவ­சியம் இல்லை. உங்கள் உயிரை பறிக்க இது­வா­கவே இணைய வழியில் வந்து உங்கள் வாசல் கதவை தட்டும்.

அதன் படி இந்த விளை­யாட்டில் உங்­களை இணைத்­துக்­கொள்­வ­தற்­காக முதலில் மின்­னஞ்சல் மூலம் உங்­க­ளுக்கு ஓர் அழைப்பு வரும்.

அந்த மின்னஞ்சல் அழைப்பில் ‘புளூவேல் சேலஞ்சை எதிர்­கொள்ளத் தயாரா?’ என உங்­களை அழைக்கும். ‘ஆம்’ என்று நீங்கள் பதில் அனுப்­பினால், விளை­யாட்டின் விதி­மு­றை­களை உங்­க­ளுக்கு அனுப்­பு­வார்கள்.

முதலில் பார்ப்­ப­தற்கு மிக எளி­தான விதி­மு­றை­யா­கவே தோன்றும். இவை எம்மை இந்த விளை­யாட்­டுக்கு உள்­ளீர்க்க விரிக்­கப்­படும் மாய­வலை.

அறி­யாமலேனும் இம் மாய வலையில் நீங்கள் சிக்­கி­விட்­டீர்­க­ளாயின் இந்த போட்­டியில் உள்ள 50 சாவால்­களை எதிர்­கொண்டு நீங்கள் செய்து காட்ட வேண்டும்.

சவாலை நீங்கள் செய்து முடிப்­பதை காணொளி­களாகவோ அல்­லது புகைப்­ப­ட­மா­கவோ எடுத்து அந்தக் குழு­வுக்கு அனுப்ப வேண்டும்.

இறு­தி­யான சவாலை நீங்கள் எதிர் கொண்டு செய்­து­விட்டால் நீங்கள் வெற்­றி­யாளர். ஆனால் போட்­டியின் இறுதி 50 ஆவது சவாலை செய்த பின்னர் போட்­டியின் வெற்­றி­யா­ள­ராக பெரு­மிதம் அடைய நீங்கள் இவ்­வுலகில் இருக்க மாட்­டீர்கள்.

காரணம் அதி­ப­யங்­க­ர­மான அந்த இறுதி சவால் தற்­கொலை செய்­து ­கொள்ள வேண்டும் என்­ப­துதான். இறுதி சவாலில் நீங்கள் ஓடவும் முடி­யா­து, ­ஒ­ளி­யவும் முடி­யாது.

முதல் கட்ட சவால்கள் மிக எளி­தா­கவே இருக்கும். ஒரு நீலத் திமிங்­கி­லத்தை வரைய வேண்டும், தனி­யாக இரவு பன்­னி­ரெண்டு மணிக்கு மயா­னத்­திற்கு செல்ல வேண்டும், இனிப்­பு­களை அள்ளி வாய் நிறைய சாப்­பிட வேண்டும்.

இவற்றில் ஒவ்­வொன்­றையும் நீங்கள் செய்து முடிக்க முடிக்க, உங்­க­ளுக்கு பாராட்­டுகள் கிடைக்கும். மெல்ல படி­நி­லைகள் உயர உயர சவால்கள் கடி­ன­மா­கிக்­கொண்டே போகும். அடுத்து வரும் சவால்கள் எம்மை நாமே வதைத்­துக்­கொள்­வது.

இதன்படி இரவில் தனி­யாகப் பேய்ப் படம் பார்ப்­பது, கையில் பிளேடால் வரை­வது, கண்ணை மூடிக்­கொண்டு மிக வேக­மாக சைக்­கிளில் பய­ணிப்­பது என்­ற­வாறு அமைந்­தி­ருக்கும்.

இறு­தி­யாக நீங்கள் வெற்றி பெறு­வ­தற்­கான கடைசி சவா­லுக்­காக காத்­தி­ருக்­கும்­போது, இறுதி சவால் உங்­களை தற்­கொலை செய்­து­கொள்ளச் சொல்லும்.

நீங்கள் தற்­கொலை செய்­து ­கொள்ள முடி­யாது என மறுத்தால், ஆட்­டத்தில் இருந்து விலக முடி­யாது என்­ப­துதான் இதில் இருக்கும் பேரா­பத்து.

இப்­போ­துதான் நாம் அவர்­களின் வலையில் முழு­மை­யாக சிக்­கிக்­கொண்­டுள்­ளதை உணர்வோம். காரணம் ஆரம்ப நாளில் இருந்து நடந்த மின்­னஞ்சல் தொடர்­பா­டல்­களின் ஊடாக உங்­க­ளுக்கே தெரி­யாமல் உங்கள் கணி­னி­யிலோ அல்லது கைய­டக்க தொலை­பே­சி­யிலோ ‘ட்ரோஜன் வைரஸ்’ எனப்­படும் வைரஸ் அனுப்­பப்­பட்டு, உங்கள் இர­க­சிய தக­வல்கள் அக்­கு­ழுவின் கையில் சிக்கி இருக்கும்.

இனி நீங்கள் சவாலை ஏற்­க­வில்லை என்றால், உங்கள் இர­க­சிய தக­வல்கள் கசி­ய­வி­டப்­படும் என மிரட்­டு­வார்கள். பெரும்­பா­லான சிறு­வர்கள், இளம் வய­தி­னரை அந்தக் கும்பல் குறி­வைக்­கி­றது. சிறு­வர்கள் விப­ரீதம் தெரி­யாமல் பயந்­துபோய் தற்­கொலை செய்­து­கொள்­கி­றார்கள்.

ரஷ்­யாவை மைய­மா­கக்­கொண்டு ஆரம்­பித்த இந்த விளை­யாட்டு, இணையம் மூலம் உலகம் முழு­வ­து­மாக சிறு­வர்கள் உட்­பட சுமார் 3000க்கும் அதி­க­மா­ன­வர்­களை தற்­கொ­லைக்குத் தூண்­டி­யுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த சில மாதங்­க­ளாக உலகம் முழு­வதும் இந்த விளை­யாட்டு பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் ரஷ்ய அர­சாங்கம் நேர­டி­யாகத் தலை­யிட்டு விசா­ரணை மேற்­கொண்­டது. உலகம் முழு­வதும் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு இந்த விளை­யாட்டை பற்­றிய விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது.

விளை­யாட்டின் முக்­கிய சூத்தி­ர­தா­ரி­யான இலியா சிட்ரோவ் எனும் 26 வய­து­டைய இளைஞர் கைது செய்­யப்­பட்டார்.

இதனால் இந்த விளை­யாட்டு குறித்து பெற்­றோரும் ஆசி­ரி­யர்­களும் நிம்­மதி பெரு மூச்­சு­விட்­டனர். இருந்த போதிலும் மும்­பையைச் சேர்ந்த சிறுவன் மன்­பிரீத் சிங்கின் தற்­கொலை, அவன் நண்­பர்­களின் வாக்­கு­மூலம் போன்­றவை மூலம் புளூவேல் விளை­யாட்டு தொடர்பான பீதி மீண்டும் உலகம் முழு­வதும் பரவ ஆரம்­பித்­துள்­ளது.

புளூவேல் என்றால் நீல நிறத் திமிங்­கிலம் என்று அர்த்தம். அமெ­ரிக்­காவில் உள்ள ஒரு கடற்­க­ரையில் திமிங்­கி­லங்கள் திடீ­ரென தண்­ணீரை விட்டு வெளியே தாமாக வந்து இறந்­தன.

அதைப் பார்க்க திமிங்­கிலங்கள் தாமாகத் தற்­கொலை செய்­து­கொண்­டதைப் போலி­ருந்­தது. இதை அடிப்­ப­டை­யாக வைத்துத் தான் இந்த விப­ரீத விளை­யாட்­டுக்கு புளூவேல் சேலஞ்ச் எனப் பெய­ரிட்­டுள்­ளனர்.

தற்­கொ­லையைத் தூண்டும் குழுக்கள், தங்கள் உறுப்­பி­னர்­களை தற்­கொ­லைக்குத் தூண்டி, அவர்கள் தற்­கொலை செய்­து­கொள்­வதை நேரலையில் ஒளி­ப­ரப்பி ரசிப்­ப­வர்கள் என இணை­யத்தில் ஆபத்தை விளை­விக்­கக்­கூ­டிய குழுக்கள் அதி­க­மாக உள்­ளன.

ஒரு ஆய்­வின்­படி உலகம் முழு­வதும் தற்­கொ­லையைத் தூண்டும் இணை­ய­த்த­ளங்­களின் எண்­ணிக்கை அதி­க­மாகி இருப்­பதும், அதனால் சுமார் 51 சத­வீதம் சிறு­வர்­களின் மரணம் அதி­க­மாகி இருப்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

தொழில்­நுட்ப வளர்ச்சி அதி­க­ரித்துச் செல்ல செல்ல சிறு­வர்கள் உட்­பட எம்­ம­வர்­க­ளுக்கு இணைய பாவ­னை­யா­னது இல­குவில் கிடைக்கும் ஒன்­றாக மாறி­விட்­டது.

ஒரு கால­கட்­டத்தில் நகர்­ப்பு­றங்­களில் செல்வம் படைத்­த­வர்­க­ளுக்கு மாத்­திரம் என வரை­ய­றைக்குள் இருந்த இணை­யப்­பா­வ­னை­யா­னது இன்று கிரா­மப்­பு­றங்­களில் வாழ்­ப­வர்­க­ளுக்கும் இல­குவில் கிடைக்கும் நிலைக்கு விருத்­தி­ய­டைந்­துள்­ளது.

இதுவரை­ கா­லமும் நாம் சிறு­வர்­களை இணைய பாவ­னையில் இருந்து கட்­டுப்­ப­டுத்தி வைத்­தது இணைய பாவ­னையால் தீய வழிக்கு சென்று விடு­வார்கள் என்ற அச்­சத்­தி­னா­லேயே.

ஆனால் தற்­போது சிறு­வர்­களின் உயிரை காப்­பாற்ற அவர்­களை இணையம் பாவிப்­பதை கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய நிலைக்கு இன்­றைய தொழில்­நுட்ப வளர்ச்சி எம்மை ஆட்­டிப்­ப­டைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

எனவே பெற்றோர் தம் பிள்­ளைகள் இணை­யத்தை பயன்­ப­டுத்தும் போது அது குறித்து மிகவும் விழிப்­பு­ணர்­வுடன் இருக்க வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.

இன்­றைய சிறு­வர்கள் தொழில்­நுட்ப அறிவை மித­மாக கொண்­ட­வர்­க­ளாக உள்­ளனர். இதனால் அவர்­க­ளுக்கு இணைய பாவனை குறித்து நாம் புதி­தாக ஒன்றும் கற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய அவ­சியம் இல்லை.

பல இணைய விளை­யாட்­டுக்கள் பிள்­ளை­களின் பொழு­துப்­போக்­கிற்கு துணை புரிந்­தாலும் உயிர் பறிக்கும் விளை­யாட்­டுக்கள் குறித்து அவர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை வழங்க வேண்­டி­யது பெற்­றோரின் முக்­கிய கட­மை­யாகும்.

அண்­மையில் மது­ரையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் புளூவேல் விளை­யாட்­டிற்கு அடிமை­யாகி தன் உயிரை மாய்த்­துக்­கொண்­டுள்ள நிலையில் இவ்­வி­ளை­யாட்டின் ஆதிக்கம் எமது நாட்­டையும் நெருங்கி விட்­டதை எமக்கு பறை­சாற்றுகின்­றது. எனவே நாம் இது குறித்து மேலும் அவ­தா­ன­மாக இருந்து எமது பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும்.

இணை­யத்தால் இன்று நமக்குப் பல நன்­மைகள் இருந்­தாலும் மெய் உலகைப் பிர­தி­ப­லிக்கும் மெய்­நிகர் உல­கான இணை­யத்­துக்கும் கறுப்பு பக்­கங்கள் உள்­ளன.

துடிப்பு,வேகம், கோபம், ஆர்வம், சோகம், தனிமை, மனக் குழப்பம், ஏக்கம் நிறைந்த இளம் ரத்­தங்­களை விபரீதங்­களை நோக்கி இணை­யமும் அழைத்துச் சென்­று­வி­டு­கி­றது.

பெற்­றோரின் கவ­னமும். ஆசி­ரி­யர்­களின் பொறுப்பும், நண்­பர்­களின் அக்­க­றை­யும்தான் இளைய சமு­தா­யத்தை காக்கும். இந்த கறுப்புத் தளங்­களை ஒழிக்க எமது சமூகம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

சிறு­வர்­க­ளுக்கு ஏற்­படும் மன அழுத்தம், மன உளைச்­சலைப் போக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை பெற்­றோரும் ஆசி­ரி­யர்­களும் இணைந்து முன்­னெ­டுப்­பதன் மூலம் சிறு­வர்கள் இவ்­வா­றான விளை­யாட்­டுக்­க­ளுக்கு இரை­யா­காமல் பாது­காத்­துக்­கொள்ள முடியும்.

– எஸ். வினோத் –

Exit mobile version