பல வருட காலமாக தனது தலைமுடியை உண்டு பழகிய இருபது வயதான இளம்பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின், மும்பை ராஜ்வாஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து இரண்டு இறாத்தல் முடி அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாந்தி மற்றும் வயிற்றுவலி எற்பட்ட நிலையில் அப்பெண் மருத்துவமனைக்குச் சென்ற போதே இந்தவிடயம் மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சை மேற்கொள்ள முன்னர் அப்பெண் அறுபத்தாறு இறாத்தல் நிறையுடையவராக இருந்தார் எனவும் இவ்வாறு தலைமுடியை உண்பது ரிபேன்சல் சின்ரம்ஸ் எனும் மனநோய் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தப் பெண் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.