ilakkiyainfo

சரத் பொன்சேகா மூலம் இராணுவ புரட்சிக்கு வாய்ப்பு: தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம்

இரா­ணு­வத்தின் அதி உயர் பத­வி­யான பீல்ட் மார்ஷல் பதவியை வகிக்கும் இரா­ ணுவ வீர­ரான சரத்­பொன்­சே­காவை பாரா­ளு­மன்ற உறுப்பி­ன­ராக வைத்­தி­ருப்­பதன் மூலம் நாட்டில் இரா­ணுவ சதிப்­பு­ரட்சி இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க ­மாக காணப்­ப­டு­கின் றன. எவ்வாறு ஹிட்லர் இரா­ணுவ வீர­னாக இருந்து ஆட்­ சியை பிடித்­தாரோ அதே­போன்று இலங்­கை­யிலும் நடக்­கலாம்.

ஆகவே, இவ­ருக்கு எதி­ராக வழக்கு தொடுக்­க­வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது என தேசிய ஒற்­று­மைக்­கான சட்­டத்­த­ர­ணிகள் சங்கத்தின் சார்பில் சட்­டத்­த­ரணி அஜித் பிர­சன்ன தெரி­வித்தார்.

நாட்டின் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள் சிலர் இவ்­வாறு அமைச்சர்

சரத் பொன்­சே­கா­வுக்கு எதி­ராக வழக்கு தொடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் தேசிய ஒற்­று­மைக்­கான சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் நேற்று நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அமைச்சர் சரத் பொன்­சேகா இரா­ணுவம் தொடர்­பிலும் போரக்­குற்றம் தொடர்­பிலும் பல்­வே­று­பட்ட அபிப்­பி­ரா­யங்­களை முன்­வைத்து நாட்டின் இரா­ணு­வத்­திற்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்றார்.

அத்­துடன் ஒரு இரா­ணு­வத்தின் உயர் பத­வி­யான பீல்ட் மார்ஷல் பத­விக்­கு­ரிய சலு­கை­களை அனு­ப­வித்துக் கொண்டு பாரா­ளு­மன்ற உறுப்பி­ன­ரா­கவும் செயற்­படும் ஒரு­வ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடி­யாதா என பலரும் கேள்வி எழுப்­பு­கின்­றனர்.

ஆனால், அமைச்சர் சரத் பொன்­சே­கா­வுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடியும். இது தொடர்பில் இலங்­கையின் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள் நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்­றனர்.

ஆனால், அதற்கு முன்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை பின்­பற்­று­வ­தாக சத்­தி­யப்­பி­ர­மாணம் எடுத்­துள்ளார்.

அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அவ்­வாறு சத்­தி­யப்­பி­ர­மாணம் எடுத்­துள்­ளனர். அவர்­க­ளுக்கும் ஒரு கடமை இருக்­கன்­றது. அது என்­ன­வென்றால், இந்தப் பிரச்­சி­னையை நீதி­மன்­றத்­துக்கு கொண்டு செல்­வ­தற்கு முன்னர் இதற்கு ஒரு முடிவு எடுக்க முடியும்.

அத்­துடன், இலங்­கையில் ஒரு பீல்ட் மார்ஷல் என்­கின்ற நிலையில் இருக்­கின்­ற­வ­ருக்கு எடுக்­கக்­கூ­டிய சட்ட நட­வ­டிக்­கைகள் பற்றி இராணுவ சட்­ட­மூ­லத்தில் இல்லை.

ஏனென்றால் உண்­மையில் இந்த பதவி இலங்­கைக்கு உரி­ய­தல்ல. பீல்ட் மார்ஷல் பதவி என்­பது இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட நாடுக­ளுக்­கி­டையில் மூண்ட போரில் பங்­கேற்று நாட்­டிற்கு வெற்­றியைத் தேடித்­த­ரு­வதில் பங்­காற்­றிய முக்­கிய வீரர்­க­ளுக்கு வழங்கும் உய­ரிய பத­வி­யாகும்.

ஆனால் எமது நாட்டில் அவ்­வாறு இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட நாடு­க­ளுக்கு எதி­ராக போர் இடம்­பெ­ற­வில்லை. மார்ஷல் டிட்டோ போன்­ற­வர்­களே இதற்கு பொருத்­த­மா­ன­வர்கள் . உண்­மை­யி­லேயே இந்த பீரல்ட் மார்ஷல் என்­கின்ற பத­விக்கு சரத் பொன்­சேகா பொருத்த­மா­னவர் அல்ல.

அத்­துடன், இரா­ணு­வத்தில் இருப்­ப­வரை பாரா­ளு­மன்­றத்தில் வைத்­தி­ருப்­பது நாட்­டிற்கு பாரிய ஆபத்தை கொண்­டு­வந்­து­விடும். இவ்­வாறு இரா­ணுவ தள­ப­தி­யாக இருந்த ஹிட்­லரும் கூட பாரா­ளு­மன்­றத்தை சுற்றி பயங்­கர ஆயு­தங்கள், கன­ரக ஆயு­த­வா­க­னங்­களை வர­வ­ழைத்து, பாரா­ளு­மன்ற  ஜன்னல் வழி­யாக பீரங்­கி­களை இலக்கு வைத்து , “என்னை இந்த நாட்டின் தலை­வ­ராக ஏற்றுக் கொள்­கின்­றீர்­களா இல்­லையா என ” அச்­சு­றுத்தல் விடுத்தே நாட்டை ஆளும் பொறுப்­புக்கு வந்தார்.

ஆகவே, இவ்­வாறு சீரு­டையை கழற்றி வைக்­காத ஒரு இரா­ணுவத் தள­ப­தியை பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வந்தால் அன்று ஹிட்லர் செய்­தது போன்று ஒரு இரா­ணுவ சதிப்­பு­ரட்­சியை ஏற்­ப­டுத்தி இந்த ஜன­நா­யக நாட்டின் ஆட்­சியை சரத் பொன்­சேகா கவிழ்ப்­ப­தற்கு தாராளமா­கவே இடம் இருக்­கின்­றது.

மேலும், அவ­ருக்கு இரா­ணு­வத்­த­ரப்பில் இன்னும் ஆத­ரவு உண்டு. மகேஷ் சேனா­நா­யக்க இரா­ணு­வத்­த­ள­ப­தி­யா­னதும் ஏனைய அமைச்­சர்­களை சந்­திக்­க­வில்லை.

அவர் ஜனா­தி­ப­தியை சந்­தித்த பின்னர் சரத்­பொன்­சே­கா­வையே சந்­திக்கச் சென்றார். அது எதைக்­காட்­டு­கின்­றது? இன்றும் எல்­லோரும் சரத் பொன்­சே­கா­வுக்கு கீழ்ப்­ப­டி­வாக இருப்­ப­தையே காட்­டு­கின்­றது.

நான் ஒரு சட்­டத்­த­ரணி. நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பிற்கு கீழப்­ப­டி­கின்றேன் என்று சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்த ஒரு சட்­டத்­த­ரணி. ஆகவே, யாரா­வது அர­சி­ய­ல­மைப்பை மீறு­வார்கள் என்றால் ஒரு சட்­டத்­த­ரணி என்­ற­வ­கையில் அதற்கு தேவை­யான நட­வ­டிக்­கைகள் எடுப்­பது எமது கடமை.

அந்­த­வ­கையில் சரத் பொன்­சே­காவும் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மீறி­யுள்ளார். அப்­படி நான் சொல்­வ­தற்கு காரணம் இருக்­கின்­றது. அது என்­ன­வென்றால், அர­சி­ய­ல­மைப்பின் 91 ஆவது ஷரத்தின் 1 ஏ IX இன் பிர­காரம் பாரா­ளு­மன்­றத்தில் உறுப்­பி­னர்­க­ளாக தெரி­வு­செய்­யப்­பட்­ட­வர்­களின் தகு­திகள் பற்றி அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தா­வது,

முக்­கி­ய­மாக முப்­ப­டை­களில் பணி­யாற்றும் எந்­த­வொரு வீர­னுக்கும் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது. அத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்க முடி­யாது.

அப்­படி ஒரு வரை­முறை இருப்­ப­தற்கும் காரணம் ஒன்­றுண்டு. இரா­ணு­வத்தில் நிரந்­தரப் படையில் இருக்கும் ஒரு­வ­ருக்கு இரா­ணுவம் தொடர்பில் முடி­வு­களை எடுக்­க­மு­டியும்.

அவர்­க­ளுக்கு ஆயுதம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆக­வேதான் அவர்­களை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் ஏற்ப­தில்லை.

ஆனால், சரத் பொன்­சே­காவோ இரா­ணு­வத்தின் உய­ரிய பத­வி­யான பீல்ட் மார்ஷல் பத­வியை அனு­ப­வித்­துக்­கொண்டே பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கின்றார்.

அது மட்­டு­மன்றி அவ­ருக்கு அமைச்சுப் பத­வியும் வழங்­கப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­கவே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவியை பெற்­றுள்ளார்.

நான் சொல்­வது பிழை என்றால் சரத்­பொன்­சேகா என்­மீது வழக்­கொன்றை தொடுக்­கலாம். கடந்த சுதந்­திர தினக் கொண்டாட்டத்தின்போதும் பீல்ட் மார்ஷல் சீரு­டை­யு­டனும் அதற்­கான ஒரு சின்­ன­த­தையும் கையில்­கொண்டே சரத்­பொன்­சேகா அமர்ந்­தி­ருந்தார்.

ஏன்? அண்­மையில் இரா­ணு­வத்­த­ள­ப­தி­யான பின்னர் மகேஷ் சேனாநாயக்க சரத்பொன்சேகாவை சந்திக்க சென்றபோதும் அதன் பின்னர் கடற்படைத்தளபதியான ட்ராவிஸ் சின்னையாவும் அவரை சந்திக்கச் சென்றபோதும் தத்தமது சீருடைகளிலேயே சென்றிருந்தனர்.

அந்தவேளையில் சரத் பொன்சேகாவும் சீருடையிலேயே காணப்பட்டார். ஒரு இராணுவ பொறுப்பில் இருப்பவருக்கே அந்த சீருடையை அணிய முடியும். அத்தோடு அவர் இன்றும் பீல்ட் மார்ஷலுக்குரிய சலுகைகளைப் பெற்று வருகின்றார்.

னனனனனனனனனனனனனனனஆகவே, பீல்ட் மார்ஷலாக இருக்கும் ஒரு இராணுவ வீரன் எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியும்? இந்த பதவியை காரணமாக வைத்துத்தான் அவர் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வருகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version