இந்த வாரம் முழுக்கவே கமலின் அரசியல் பிரவேசங்கள் குறித்த பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிக்பாஸில் கமல் வரும் நாள். அதிலும் நிகழ்வுக்கான ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ ப்ரோமோவில் ” பெருகிய ஆசையில்… குறுகிய காலம்.
நாற்காலி வேட்டையில் போர்க்கால வேகம்… கைகோர்த்த கூட்டணி கடைசி வரை வருமா பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார் ஆண்டவர்.
ரொம்ப ஓப்பனா சொல்லிட்டமோ என நினைத்தாரோ என்னவோ, வேறொரு அறிமுக உரை கொடுத்தார். சம்பிரதாய வணக்கங்கள் முடிந்து ‘முக்கியமான கட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு’ என்று சொல்லி நிறுத்தியபோது ரைட்டுடா என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
‘இப்படித்தான் வெற்றியை அணுகவேண்டும் என்று வெற்றியை நோக்கி நகர்பவர்கள் இருக்கிறார்கள், எப்படிவேண்டுமானாலும் வெற்றியை அணுகலாம் என்று விளையாடுபவர்கள் இருக்கிறார்கள்.
உங்கள் கையில் இருப்பது வாக்குச்சீட்டு’ என்று சொல்லிவிட்டு இதுவரை நாம் போட்ட ஓட்டுகள் போட்டியாளர்களைக காப்பாற்ற பயன்பட்டது, இனி நாம் போடும் ஓட்டுகள் வெற்றிக்கான ஓட்டுகள் என்பதை நினைவூட்டினார். நிகழ்ச்சியையும், தமிழக நிகழ்வுகளையும் கலந்துகட்டி சொல்வதில், கமல் நிச்சயம் பிக் பாஸ் தான்.
தொடர்ந்து, இந்தவாரம் நடந்த காட்சிகளின் ரீகேப்பை போட்டுக் காட்டினார்கள். க்ரிஸ்பாக எதுவுமே இந்த வாரம் நடக்கவில்லை என்பது அந்த ரீகேப்பைப் பார்த்தாலே தெரிந்தது. அடுத்ததாக வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்களை போட்டுக் காட்டினார் கமல்.
Part 02
Part 03
Part 04
Part 05