க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டபடியால் இத்தனை நாள் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த ‘மாணிக்கம்’ பிக்பாஸ், மீண்டும் தனக்குள் இருந்த ‘பாட்ஷா’ பிக்பாஸை வெளிக்கொண்டு வந்த நாள் இன்று.
ஆம் பார்வையாளர்கள் ஃபைனல்ஸுக்குத் தயாராவதற்கான நெருப்பைப் பற்ற வைக்க நாளின் இறுதியில் சிறப்பான சம்பவம் ஒன்றை நிகழ்த்திவிட்டார்.
நேற்றைய ‘திருடா திருடா’ டாஸ்க்கில் ஹரிஷ் வெற்றிகரமாக வைரத்தைத் திருடியிருந்தார். அதிலிருந்து தொடங்கியது இன்றைய நாள். காலை 8 மணிக்கு ‘தாரை தப்பட்டை’ படத்திலிருந்து ‘வதன வதன வத வடிவேலனே’ பாடல் ‘வேக்கப் சாங்’காக ஒலித்தது.
வைரத்தைப் பறிகொடுத்த துக்கத்தில் கொஞ்சம் அசந்து தூங்கிவிட்டார்கள். 8 மணி வரை யாருமே எழுந்திருக்கவில்லை. பிறகு ஒவ்வொருவராக எழுந்து வெளியே வந்து ஆட, ஹரிஷ் ‘ஆளை விடுங்கடா’ என்று கையெடுத்துக் கும்பிட்டு மீண்டும் Sleep Mode க்குப் போனார்.
பிந்துவும் ஆரவ்வும் சேர்ந்து ஆட, சிநேகன் ’Snake’கன்னாக மாறி மகுடி வாசித்துக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து வீடியோ வை பாருங்கள்..
Part 02
Part 03
Part 04
Part 05