ilakkiyainfo

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

• புலம்­பெயர் தேசங்­களில் உள்­ள­வர்கள் சொகு­சான நிலை­மையில் இருந்து கொண்டு இங்கு நடை­பெறும் விட­யங்­களை விமர்­சிக்­கின்­றார்கள்.
• இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரிக்க முடி­யாது
• யுத்­தத்தின் இறு­தியில் கஸ் ரோ பேசினார்
• சமஷ்­டிக்கு சிங்­கள சொற்­பதம் இல்லை

விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுக்கு பின்னர் எல்­லோருமே தலை­வர்கள் என்று கரு­து­கின்றார்கள். இந்த மனநிலையில் மாற்றம் வேண்டும்.

இலக்கை நோக்கி வெவ்­வேறு தளங்­களில் நின்று உழைக்க வேண்டும் என உலகத் தமிழர் பேர­வையின் தலைவர் அருட்­தந்தை இம்மானுவல் அடி­களார்  வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் வலி­யு­றுத்­தி­யுள்ளார். அந்த செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு :-

கேள்வி:- நீண்­ட­கா­லத்­திற்கு பின்னர் மீண்டும் தாய­கத்­திற்கு வருகை தர­வேண்டும் என்று தீர்­மா­னித்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில்:– ஆட்சி மாற்றம் இடம்­பெற்ற பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த மங்­கள சமர­வீர ஆகியோர் இலங்­கைக்கு விஜ யம் செய்­யு­மாறு கோரிக்­கை­களை விடுத்­தி­ருந்­தனர். அதற் ­க­மைய இங்கு வருகை தரு­வ­தற்கு தீர்மா­னித்­தி­ருந்தேன்.

பிர­தமர் எனக்­கு­ரிய பாது­காப்பு, பயண வச­தி­களை வழங்­கி­யி­ருந்தார். இங்கு வருகை தந்­தி­ருந்த நான் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்கட்சித்தலைவர் உள்­ளிட்ட அர­சியல் தரப்­பி­ன­ரையும், இரா­ஜ­தந்­தி­ரி­க­ளையும், சிவில் சமூகத்­தி­ன­ரையும் வெவ்­வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து கலந்­து­ரை­யா­டல்­களைச் செய்­தி­ருந்தேன்.

தற்­போது நெருக்­க­டி­யான நிலை­மை­யொன்றே காணப்­ப­டு­கின்­றது. அர­சியல் தரப்­பி­னரின் செயற்­பாடு­ க­ளுக்கு அப்பால் சமயத்தலைவர்களி­னதும் பங்கு மிக முக்­கி­ய­மா­கின்­றது.

அத­ன­டிப்­ப­டையில் நான் கர்­தினால், ஆயர்கள், நல்லை ஆதீன குரு­மு­தல்­வர் ஆகியோரை சந்­தித்தேன். ஆனால் முஸ்லிம், பௌத்த சமயத் தலை­வர்­களை சந்­திக்க முடிய­வில்லை. அவர்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யாட வேண்­டி­யுள்­ளது.

அர­சி­யல்­வா­தி­களால் மட்டும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்தி அர­சியல் தீர்­வினைக் கண்­டு­விட முடி­யாது.

இதில் அனைத்து மதத்­த­லை­வர்­க­ளி­னது பங்கும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கின்­றது. மக்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வும், இணக்கமும் ஏற்­ப­டு­வ­தற்கு அடி­மட்­டத்­தி­லி­ருந்து கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய பல விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

அவ்­வா­றான செயற்­பா­டு­களை ஊக்­கு­விப்­ப­தற்­கா­கவும், எனது முது­மையின் கார­ண­மாக இறுதி நேரத்­தினை எனது மக்­க­ளுக்­காக செலவழிக்கும் எண்­ணப்­பாட்­டி­லேயே இங்கு வருகை தந்­துள்ளேன்.

கேள்வி:- தற்­போ­தைய நிலையில் தமிழ் சமூகம் குறித்த உங்­களின் அவ­தா­னிப்பு என்ன?

பதில்:- சிங்­கள அர­சாங்­கங்கள், சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ராக தமிழ் மக்கள் அர­சியல் போராட்­டத்­தி­னையும், விடு­தலைப் போரையும் நடத்தி­யி­ருக்­கின்­றார்கள்.

ஆனால் தற்­போது வரையில் தமிழ் மக்கள் தங்­க­ளு­டைய பல­வீ­னங்­களை உண­ர­வில்லை. தமிழ் மக்­க­ளுக்குள் சமத்­துவம், சகோதரத்துவம் இல்­லாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

எமது சமூ­கத்தில் இவ்­வா­றான நிலைமை தொட­ரு­கையில் வெளியிலிருப்­ப­வர்­களை குற்றம்சாட்­டு­வது தவ­றா­னது. மதத்­த­லைவர் என்ற அடிப்­ப­டையில் விடு­தலை வேண்­டு­மா­க­வி­ருந்தால் முதலில் உங்கள் (தமிழ் மக்­களின்) உள்­ளத்­திலே விடு­தலை இருக்க வேண்டும்.

அடி­மைத்­த­னங்கள் இருக்கக்கூடாது. தமிழ் சமூகத்­தினுள் சம­கா­லத்தில் அடி­மைத்­த­னங்கள் வளர்ந்து வரும் நிலை­மையே காணப்படுகின்­றது.

இது தொடர்­பாக எந்­த­வொரு தரப்­பி­னரும் அக்­கறை கொள்­வ­தாக இல்லை. சாதி, பிர­தேசம் போன்ற பல வேறு­ப­டுத்­தல்கள் காணப்­ப­டு­கின்றன.

பௌத்த மதம் நற்­க­ருத்­துக்கள் பல­வற்றை உரைக்­கி­றது. ஆனால் மகா­வம்சம் அளித்த வர­லாற்றுக் குறிப்­புக்­களின் அச்­சத்தால் சிங்­க­ள­வர்கள், தமி­ழர்கள் தொடர்பில் அச்­ச­மான மனநி­லையைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஆகவே சிங்­கள கண­வனும், தமிழ் மனை­வியும் ஒரு­வீட்டில் ஒன்­றாக வாழ்­வது கடினம். ஏனென்றால் பக்­கத்தில் மாமியார் வீடு (தமிழ்­நாடு) உள்­ளது. தமி­ழர்கள் தொப்­புள்­கொடி உற­வுகள் என தமிழ் நாட்­டுக்கு எதற்­கெ­டுத்­தாலும் ஓடிச் செல்­வதால் சிங்­க­ள­வர்­க­ளுக்கு சந்தேகங்கள் காணப்­ப­டு­கின்­றன.

அந்த சந்­தே­கங்­களை போக்­கு­வ­தற்கு நாம் செயற்­ப­ட­வேண்­டி­யுள்ள நிலையில் முதலில் எமக்குள் காணப்­ப­டு­கின்ற குறை­பா­டு­களை போக்­கிக்­கொள்ள வேண்டும்.

சாதி, பிர­தே­ச­வாதம் போன்­ற­வற்­றுக்கு எதி­ராக தாய­கப்­பி­ர­தே­சங்­களில் குறிப்­பாக யாழ்ப்­பா­ணத்தில் கலந்­து­ரை­யா­டல்­களை ஆரம்­பித்தால் நிச்­ச­ய­மாக என்னைத் தூற்­று­வார்கள். இருப்­பினும் அவற்றைப் பொறுத்­துக்­கொண்டு முதலில் எமக்குள் சமத்­து­வத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­களை ஆரம்­பிக்க வேண்­டி­யுள்ளது.

கேள்வி:- தமிழ் சமூ­கத்­திற்குள் காணப்­படும் பல­வீ­னங்­களை போக்­கு­வ­தற்கு எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் எனக் கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- அடி­மட்­டத்­தி­லி­ருந்து பாரிய மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. நான் தாய­கத்தில் இருந்த காலத்தில் நற்­ச­மூக நடு­நிலை நிலையம் என்­பதை நடத்­தினேன். ஆயர்கள், நல்லை ஆதீனம், ஒஸ்­மா­னியாக் கல்­லூரி அதிபர் போன்­ற­வர்­களை போஷ­கர்­க­ளாக வைத்து மனி­தனை மையப்­ப­டுத்­திய சமூ­கத்­தினை கட்­டி­யெ­ழுப்பும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்தேன்.

ஆகவே மதங்கள் மதில்­க­ளுக்குள் இருந்­து­விட்டுச் செல்­ல­மு­டியும். ஆனால் இது­போன்று சமு­தாய மாற்­றத்­திற்­கான செயற்­றிட்டம் ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். அதற்­கான குத்­து­வி­ளக்­கினை ஏற்­றினால் கல்­லெறி விழும் நிலை­மையும் இருக்­கின்­றது. ஆனாலும் சமூகத்­திற்கு இவை அவ­சி­ய­மா­கின்­றன. மதத்­த­லை­வர்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:- இன நல்­லி­ணக்கம், ஒற்­றுமை குறித்து பேசப்­படும் இத்­த­கைய கால­கட்­டத்தில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்­த­கா­லத்தில் இழைக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் யுத்­தக்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எத்­த­கைய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பல விட­யங்­களை மேற்­கொண்­டி­ருக்க முடியும். ஆனால் அவர் அவற்றை விடுத்து வேறு­வ­ழியில் சென்­று­விட்டார்.

உண்­மைகள் அறி­யப்­பட வேண்டும், நீதி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். குற்­றங்கள் கண்­ட­றி­யப்­பட வேண்டும், குற்­ற­வா­ளிகள் இனங்­கா­ணப்­பட வேண்டும்.

உலக ஒழுங்கு­களில் காணப்­படும் நீதித்­து­றையில் குற்­ற­வா­ளிகள் கண்­ட­றி­யப்­படும் பட்­சத்தில் அவர்­க­ளுக்கு சிறை­தண்­டனை இல்லையேல் தூக்கு தான் வழங்­கப்­ப­டு­கி­றது.

எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் அதற்கும் அப்பால் சில செயற்­பாடு­ களை மேற்­கொள்ள வேண்­ டி­யுள்­ளது. அதற்கு அப் பால் பல்­லின மக்களும் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தற்­கு­ரிய நிலை­மையை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான சூழலை உரு­வாக்­க­வேண்­டி­யுள்­ளது.

அதனை நோக்கிச் செல்­வதன் கார­ணத்தால் தான் நிலை­மா­று­கால நீதிப்­பொ­றி­மு­றையை வலி­யு­றுத்­து­கின்றோம். இது பழி­வாங்கும் செயற்­பாடு அல்ல. மஹிந்த ராஜபக் ஷவை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும் என்று எம்மில் பலர் கூறு­கின்­றார்கள்.

அவ்­வாறு செய்தால் அனைத்தும் முடிந்­தது என்று பொருள் அல்ல. இது தமிழர் தரப்பில் கொண்­டி­ருக்கும் தவ­றான நிலைப்­பா­டாகும். மீள­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்தி எதிர்­கா­லத்­தினை சிறப்­பாக உரு­வாக்க வேண்­டி­யுள்­ளது.

கேள்வி:- ஐ.நா.மனித உரி­மைகள் சபையில் அர­சாங்­கத்­திற்கு இரண்டு வரு­டங்கள் கால நீடிப்புச் செய்­தமை சரி­யா­ன­தொரு நகர்­வென்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- நான் 25 வரு­டங்­க­ளாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்­வு­களில் பங்­கேற்று வரு­கின்றேன். தற்­போது எனது மன­துக்கு ஒரு தெளிவான விடயம் நடை­பெற்­றுள்­ளது.

அதா­வது, 25 வரு­டத்­திற்கு பின்னர் இலங்­கையை ஐக்­கிய நாடு­களின் பிடிக்குள் கொண்டு சென்று விட்டோம். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டதன் அடிப்­ப­டையில் அர­சாங்கம் ஐ.நா.வுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டிய சூழல் ஏற்பட்­டுள்­ளது.

கடந்த காலத்தில் எமது போராட்­டத்தை 27நாடுகள் தடைசெய்­தன. 20 நாடுகள் எம­க்கு எதி­ரான போராட்­டத்­திற்கு ஆயுதம் வழங்கியிருந்தன.

தற்­போ­தைய நிலையில் தான் ஐ.நா உட்­பட சர்­வ­தேச தரப்­புக்கள் எமது பிரச்­சி­னையை நன்கு உணர்ந்து கொண்­டுள்­ளன. ஆகவே அந்த ஆத­ரவை நாம் கைவிட முடி­யாது.

அதே­நேரம் தமி­ழர்­களும் எவ்­வாறு நடந்து கொள்­கின்­றார்கள் என்­ப­தையும் அவர்கள் அவ­தா­னிக்­கின்­றார்கள். எனவே தேவை­யற்ற விரக்­­தியை கைவிட்டு நம்­பிக்­கை­யுடன் ஒரு தீர்வை நோக்கிச் செல்­வ­தற்­கான ஒத்­து­ழைப்­பினை வழங்­கு­கின்­றோம் என்­பதை நிரூ­பிக்க வேண்டும்.

தமி­ழர்கள் ஒத்­து­ழைப்பு கொடுக்­க­வில்லை என்ற தோற்­றப்­பாடு சர்­வ­தே­சத்­திற்கு காட்­டப்­ப­டு­மாகவிருந்தால் அனைத்தும் நிறை­வுக்கு வந்து விடும். ஆகவே இலங்கை ஐக்­கிய நாடு­களின் உறுப்பு நாடா­க­வுள்­ளது. சர்­வ­தேச நாடு­களின் உத­வி­களைப் பெறு­கின்­றது.

ஆகவே இலங்­கையால் முழு­மை­யாக அவற்றை உத­றித்­தள்­ளி­விட முடி­யாது. அந்த அடிப்­ப­டையில் ஐ.நா. மற்றும் சர்­வ­தே­சத்தின் இலங்கை மீதான பிடியை நாம் பயன்­ப­டுத்த வேண்டும். தமி­ழர்கள் உணர்ச்­சி­வ­சப்­பட்டு செயற்­ப­டாது பகுத்­த­றி­வுடன் செயற்­பட வேண்டும்.

கேள்வி:- தற்­போ­தைய நிலை­மை­களை நீங்கள் அவ­தா­னித்­துள்ள நிலையில் பொறுப்­புக்­கூ­றுதல் விட­யத்தில் அர­சாங்கம் முழு­மை­யாக ஈடு­பட்டு முன்­னேற்­ற­க­ர­மாக செயற்­ப­டு­கின்­றது என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் பொறுப்புக் கூறல் விட­யங்­களை மெது­வா­கவே செய்து வரு­கின்­றார்கள். அவர்­க­ளுக்­கான எதி­ரிகள் உச்­ச­மாக செயற்­பட ஆரம்­பித்­துள்­ளார்கள். அதனால் குழப்­ப­க­ர­மான நிலை­மை­யொன்றே உள்­ளது.

குறிப்­பாக 70ஆண்­டு­க­ளாக தென்­னி­லங்கை தரப்­புக்கள் கூறி­வந்த கருத்­துக்­களைதான் குழப்­ப ­வேண்­டு­மென்று கரு­து­ப­வர்கள் தற்­போதும் கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அதற்கு முகங்­கொ­டுப்­ப­தென்­பது மிகக் கடி­ன­மா­ன­தொன்­றாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­த­போது நீங்கள் தமிழ் மக்கள் தொடர்­பாக கருத்­துக்­களை வெளியி­டு­வது வர­வேற்­கத்­தக்­க­தாக இருந்­தாலும் உங்­களின் ஆட்­சியில் உள்ள அமைச்­சர்­களின் கருத்­துக்கள் மாறு­பட்­டுள்­ளன.

பௌத்த மதத்­த­லை­வர்­க­ளி­டத்தில் பிழை­யான கருத்­துக்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. உண்­மை­களை கூறு­வ­தற்கு தயங்­கு­கின்­றார்கள். சிங்­கள மக்கள் மத்­தியில் முன்­னேற்­ற­க­ர­மான கருத்­துக்கள் கட்­டி­யெ­ழுப்­பப்பட வேண்டும் என நான் அவ­ரி­டத்தில் நேர­டி­யா­கவே கூறி­யுள்ளேன்.

கேள்வி:- ஆட்சி மாற்­றத்தின் பின்­ன­ரான கால­கட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரின் போக்­கினை எவ்­வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- அடிப்­ப­டையில் நாங்கள் தமி­ழர்­களே. இருப்­பினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்குள் குழப்­பகர­மான நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன. எமக்குள் இவ்­வா­றான பல­வீ­னங்கள் இருக்­கின்­றன என்­ப­தையே நான் மீண்டும் குறிப்­பிட விரும்­பு­கின்றேன்.

நான் யாழில் தங்­கி­யி­ருந்தேன். அங்­குள்ள நிலை­மை­களை அவ­தா­னித்­துள்ளேன். இருப்­பினும் யாழ்ப்­பா­ணத்தில் உள்ள அர­சியல் தரப்புக்க­ளுடன் சந்­திப்­புக்­களை நடத்­த­வில்லை.

குறிப்­பாக வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், வட­மா­காண சபை­யி­னரின் செயற்­பா­டு­களை பார்த்ததில் எனக்கு மிகப்­பெரும் மன­வ­ருத்­த­மாக இருக்­கின்­றது.

எமக்கு சற்­றேனும் அதி­கா­ரங்கள் கிடைக்­கப்­பெற்­றுள்ள போதும் நடப்­பது என்ன? நிதி மீண்டும் மத்­திய அர­சாங்­கத்­திடம் செல்­கின்­றது. வடமா­காண சபையில் சண்டை சச்­ச­ர­வுகள் தமக்­குள்­ளேயே நடக்­கின்­றன.

இந்த இடத்தில் ஆயர் அம்­ப­ல­வா­ணப்­பிள்ளை என்­னி­டத்தில் அடிக்­கடி தெரி­விக்கும் கருத்­தான, தமி­ழர்கள் நல்ல பணி­யா­ளர்கள். ஆனால் அவர்கள் தம்மை ஆளத்­த­கு­தி­யற்­ற­வர்கள் என்­பது தான் நினை­வுக்கு வரு­கின்­றது.

ஏனைய மாகா­ணங்­களின் செயற்­பா­டு­களை பாருங்கள். அவர்கள் பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தாலும் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த வண்­ணமே இருக்­கின்­றார்கள். உள்­ளக அபி­வி­ருத்­திகள் நடை­பெ­று­கின்­றன.

ஆனால் வடக்கு மாகாண சபையில் உள்­ள­வர்கள் அதி­க­மாக அர­சியல் விட­யங்­களை பேசு­கின்­றார்­களே தவி­ரவும் மாகாண ரீதி­யி­லான விட­யங்­களை முறை­யாக கவ­னிக்­க­வில்லை.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டு­களை ஒருங்­கி­ணைத்து நெறிப்­ப­டுத்தி வினைத்­தி­ற­னாக முன்­னெ­டுக்க வேண்­டிய பாரிய கடப்­பாடு அதற்கு தலை­மைத்­துவம் வழங்­கு­ப­வ­ருக்கு இருக்­கின்­ற­தல்­லவா?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஜன­நா­யக கட்­ட­மைப்­பாகும். இதில் உள்ள பல­ருக்கும் வெவ்­வேறு பட்ட கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. கூட்­ட­மைப்­பினை உறு­தி­யாக கொண்டு செல்­ல­வேண்­டிய கடப்­பாடு சம்­பந்த னுக்கு உள்­ளது. அதனை நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன். ஆனால் அவரால் உட­ன­டி­யாக தீர்­மா­னங்­களை எடுக்க முடி­யாது.

உதா­ர­ண­மாக வட­மா­காண முத­ல­மைச்­சரின், சபையின் செயற்­பா­டுகள் தொடர்பில் அவ­ருக்கு சில வேறு­பட்ட நிலைப்­பா­டுகள் இருந்­தாலும் அவற்றை உட­ன­டி­யாக பிர­தி­ப­லிக்க முடி­யாது. பொறு­மை­யா­கவே அனைத்­தை யும் கையாள வேண்டும்.

மேலும் அவ­ரு­டைய அனு­ப­வமும், முது­மையும் மெது­வான நகர்­வுகளின் ஊடா­கவே இலக்­கு­களை அடைய முடியும் என்­பதை வெளிப்­ப­டுத்­து­கின்­றன. கூட்­ட­மைப்­பினை பிள­வ­டை­யாது பார்த்­துக்­கொள்­ள­வேண்­டிய பாரிய கடப்­பாடும் அவ­ருக்கு உள்­ளதன் கார­ணத்தால் தான் அவர் நிதா­ன­மா­கவும் அமை­தி­யா­கவும் செயற்­ப­டு­கின்றார்.

கேள்வி:- தற்­போது வடக்கு அர­சியல் தளத்தில் மாற்­றுத்­த­லை­மை­யொன்­றுக்­கான அவ­சியம் தொடர்பில் கருத்­தியல் ரீதி­யான நிலைப்பாடுகள் காணப்­ப­டு­கின்­றமை பற்றி?

பதில்:- தற்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேவை­யில்லை. எமக்கு வேறொ­ரு­வரின் தலை­மையில் மாற்று சக்தி அவ­சியம் என்று சில தரப்­புக்கள் பேசு­வதை நான் அவ­தா­னித்­துள்ளேன்.

மாற்று தலை­மைத்­துவம் என்­பது கடையில் கொள்­வ­னவு செய்யும் பொருள் அல்ல. இவ்­வா­றான நிலைப்­பா­டு­களை தமிழர் தரப்பு எடுப்­ப­தா­னது மிகவும் முட்டாள்தன­மா­ன­தாகும்.

தலை­மைத்­து­வத்தை வழங்­கு­மாறு மக்­களால் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்கள் அதற்­கு­ரிய பொறுப்­பி­லி­ருந்து சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றார்கள். அவற்றின் போக்­கு­களை அவ­தா­னிக்க வேண்டும்.

கலந்­து­ரை­யா­டல்கள் ஊடாக எமது இலக்­கு­களை அடை­வ­தற்­கு­ரிய வழி­களை ஏற்­ப­டுத்த வேண்டும். என்­னைப் ­பொ­றுத்­த­ வ­ரையில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்­த­னுக்கோ அல்­லது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கோ ஆத­ர­வாக இருக்க வேண்டும் என்­பது அல்ல நிலைப்­பாடு. ஆனால் அவர்கள் தம்­மா­லா­ன­வற்றை முன்­னெ­டுக்­கின்ற போது அதனை குழப்பும் வகையில் செயற்­ப­டக்­கூ­டாது.

சில விட­யங்கள் உடன் நடக்­க­வில்லை என்­ப­தற்காக தற்­போது மாற்­றுத்­தலைமை குறித்து பேசு­கின்­றனர். நெருக்­கடி அளிப்­பதன் மூலம் தான் பெற­மு­டியும் என்றும் கூறு­கின்­றார்கள். தமி­ழர்கள் ஒரு விட­யத்­தினை புரிந்து கொள்­ள­வேண்டும்.

நெருக்­கடி வழங்­கு­வ­தென்­பது முக்­கி­ய­ம­ான­தொன்றே. ஆனால் மித­மிஞ்­சிய நெருக்­கடி வழங்­கு­வ­தா­னது எமக்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்க முயல்­ப­வர்கள் வீழ்ந்து விடு­வார்கள். குறிப்­பாக கூறு­வ­தானால் இந்த ஆட்­சியை மாற்­றினால் பின்னர் என்ன நடக்கும்? எது­வுமே நடக்­கப்­போ­வ­தில்லை.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக தமிழ் மக்கள் எவ்­வா­றான நிலைப்­பாட்டை எடுக்க வேண்டும் எனக் கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- தற்­போது ஒரு இடைக்­கால அறிக்­கையே வந்­துள்­ளது. அதனை முழு­மை­யாக நிரா­க­ரிப்­பதோ அல்­லது எரித்து விடு­வதோ சரி­யான அணுகு­மு­றை­யாக அமை­யாது. எமது தரப்­பைப்­போன்றே சிங்­களத் தரப்­பிலும் இரு­வே­று­பட்­ட­வர்கள் இருக்­கின்­றார்கள்.

ஆகவே பக்­கு­வ­மாக அந்த விட­யங்­களை கையாள வேண்டும். அது­கு­றித்த ஆழ­மான கலந்­து­ரை­யா­ட­லொன்றை மேற்­கொண்டு மேலும் முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்­களை உட்­கொண்டு செல்ல முடி­யு­மென்றால் அதற்­கு­ரிய வழிகளை கையாள வேண்டும்.

விடு­த­லைப்­ பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் அரச பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி ­ராக போரா­டினார். அதற்கு நான் ஆத­ர­வாக இருந்தேன். அவரை நான் இன்றும் மதிக்­கின்றேன்.

அவர் கூட எடுத்தவுடனே அனைத்­தையும் எதிர்த்து ஆயு­தத்தை தூக்­க­வில்லை. விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தினை ஆரம்­பித்து சில வரு­டங்­க­ளுக்கு பின்­னரே ஆயுதம் தூக்­கினார். அது­போன்றே ஏனைய சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஆராய்ந்த பின்­னரே நட­வ­டிக்­கை­களை எடுப்பார்.

இந்த தேசத்தில் உள்­ள­வர்­களே விடு­த­லையை வேண்டி நிற்­கின்­றார்கள். ஆனால் புலம்­பெயர் தேசங்­களில் உள்­ள­வர்கள் சொகு­சான நிலை­மையில் இருந்து கொண்டு இங்கு நடை­பெறும் விட­யங்­களை விமர்­சிக்­கின்­றார்கள். அது எந்­த­வ­கையில் நியா­ய­மாகும். இங்கு விடு­த­லையை வேண்டும் மக்­களே அது குறித்து தீர்­மா­னிக்க வேண்டும்.

கேள்வி:- இடைக்­கால அறிக்­கையில் தமிழ் மக்­களின் நீண்­ட­கால கோரிக்­கை­யான சமஷ்டி இடம்­பெ­றா­மையால் பலத்த விமர்­சனங்கள் எழுந்­துள்­ள­னவே?

பதில்:- இடைக்­கால அறிக்­கையில் எது­வுமே இல்லை என்று கூறிவி­ட­ மு­டி­யாது. அதற்­காக அதில் உள்ள அனைத்து விட­யங்­களும் போது­மா­னது என்றும் கூறி­வி­ட­மு­டி­யாது.

1927ஆம் ஆண்டு சமஷ்டி குறித்து பண்­டா­ரநா­யக்க பேசும்­போதும், 1947இல் சமஷ்டி கட்சி ஆரம்­பித்­த­போதும் தென்­னி­லங்­கையில் யாரும் எதிர்க்­க­வில்லை. 1976ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்தின் பின்னர் தான் தமி­ழர்கள் தனி­நாடு கேட்­கின்­றார்கள் என்ற சிந்­தனை சிங்­க­ள­வர்­களுள் எழுந்­தது.

70ஆண்­டு­க­ளாக நாம் சமஷ்டி குறித்து பேசு­கின்றோம். சமஷ்டி (பெடரல்) என்­ப­தற்கு சிங்­கள மொழியில் ஒரு சொற்­பதம் இல்லை. அவர்கள் சமஷ்டி என்­ற­வுடன் நாடு பிரி­கின்­றது என்றே கரு­து­கின்­றார்கள்.

ஆகவே அவர்­க­ளுக்கு அது குறித்த விளக்­க­ம­ளிப்­புக்கள் செய்ய வேண்­டி­யுள்­ளது. 70ஆண்­டு­க­ளாக தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை சிங்­கள மக்கள் மத்­தியில் தெளிவு­ப­டுத்­த­வில்லை.

மொழி ­ரீ­தி­யாக பிரிக்­கப்­பட்­டதால் எமது பிரச்­சி­னையை நாமே தான் பேசிக்­கொண்­டி­ருக்­கின்றோம். ஆகவே தமிழ் மக்கள், சிங்­கள மக்கள் மத்­தியில் கலந்­து­ரை­யா­டல்­களை ஆரம்­பிக்­க வேண்டும்.

20111205_ART8கஸ்ரோ, இம்மானுவல் அடி­களார்

கேள்வி:- விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனை இறு­தி­யாகச் சந்­தித்­த­போது நீங்கள் எத்­த­கைய விட­யங்­களை முதன்மைப்படுத்தியி­ருந்­தீர்கள்?

பதில்:- வடக்­கி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள் மீள அழைக்­கப்­ப­ட­வேண்டும். இந்­தி­யாவைப் பகைக்கக் கூடாது உள்­ளிட்ட விட­யங்­களை கோரி­யி­ருந்தேன்.

கேள்வி:- இறு­திப்­போரின் இறுதி நாட்­களில் விடு­த­லைப்­பு­லிகள் தரப்­பினர் உங்­களை தொடர்பு கொண்­டார்­களா?

பதில்:- என்னைத் தொடர்பு கொள்­ள­வில்லை. யுத்தம் நிறை­வ­டை­வ­தற்கு சில நாட்­க­ளுக்கு முன்­ன­தாக வழமை போன்றே அடிக்­கடி என்­னுடன் பேசும் விடு­தலைப் புலி­களின் அனைத்­து­லக தொடர்­பாளர் கஸ்ரோ மட்­டுமே தொடர்பு கொண்டு பொது­வான விட­யங்­களை பேசி­யி­ருந்தார்.


கேள்வி:- விடு­தலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம் என்ன?   

பதில்:- என்­னைப் ­பொ­றுத்­த­வ­ரையில் தனி மனிதன் விடு­தலைப் போராட்­டத்தின் அனைத்து விட­யங்­க­ளையும் முழு­மை­யாக கையாள முடி­யாது.

“அவ­ருக்கும் (பிர­பா­க­ர­னுக்கும்) பல நெருக்­க­டிகள் இருந்­தன. இறுதி நேரத்தில் தத்­து­வா­சி­ரியர் அன்டன் பால­சிங்­கமும் இருந்திருக்கவில்லை. அவ­ருக்கு வேண்­டிய ஆலோசனைகள் கிடைத்­தி­ருக்க வாய்ப்­பில்லை. ஆலோ­சனை குறை­பா­டுகள் ஒரு கார­ண­மாக இருக்­கலாம். இருப்­பினும் இறுதித் தரு­ணங்­களில் என்ன நடந்­தது என்­பதை சரி­யாக கூற­மு­டி­யாது.”

கேள்வி:- தாயகத்தில் தமிழ்த் தரப்­புக்­களை ஒற்­று­மை­யாக இருக்­கு­மாறு கோரும் நீங்கள் புலம்­பெயர் தேசத்தில் பிரிந்­தி­ருக்கும் தமிழ் தரப்­புக்­கள் ஒன்­று­பட வேண்டும் என்று கரு­த­வில்­லையா?

பதில்:- இங்­கி­ருப்­பதைப் போன்று தான் புலம்­பெயர் நாடு­க­ளிலும் கடும்­போக்­கா­ளர்கள், மென்­போக்­கா­ளர்கள் என்ற இரு­த­ரப்­பட்­ட­வர்கள் இருக்­கின்­றார்கள்.

அவர்­களை சந்­திக்­கின்ற போதெல்லாம் நான் தாய­கத்­திற்கு நேரில் செல்­லுங்கள். அங்­குள்ள நிலை­மை­களை பாருங்கள். மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் சேவை­யாற்ற முற்­ப­டுங்கள். அனை­வரும் அர­சியல் செய்ய முயன்றால் அது முடி­யாத காரி­ய­மாகும் என்­பதை வலி­யு­றுத்தி வரு­கின்றேன்.

நான் நேரில் வந்து அவ­தா­னித்ததன் பிர­காரம் பல்­வேறு விட­யங்கள் வடக்கு, கிழக்கில் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. உட்­கட்­ட­மைப்பு விட­யங்கள் முழு­மை­யாக மேம்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. ஆகவே அது தொடர்­பாக அனை­வரும் கவ­னத்தில் கொண்டு செயற்­பட வேண்டும்.

மேலும் எமது சனத்­தொகை வீதம் தாயகத்தில் படிப்­ப­டி­யாக குறைந்து செல்­கின்­றது. அனை­வரும் வேலை­வாய்ப்­பினை தேடி வெளிநாடு செல்­கின்­றார்கள். ஆகவே தொழில்­வாய்ப்­புக்­களை தாயகத்­தி­லேயே ஏற்­ப­டுத்­தினால் எமது சனத்­தொகை வீதத்­தி­னையும் நிலை­யாக பேண முடியும். இது தொடர்பில் நான் புலம்­பெயர் தேசத்தில் உள்ள அனைத்து தரப்­பி­னரின் கவ­னத்­திற்கும் கொண்டு செல்­ல­வுள்ளேன்.

கேள்வி:- ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்ட பல்­வேறு அரச தரப்­பி­ன­ருடன் சந்­திப்­புக்­களை நடத்­தி­யுள்­ளீர்கள். தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினை வழங்­கு­வது தொடர்பில் அவர்­களின் மன­நிலை எவ்­வா­றுள்­ளது?

பதில்:- ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுடன் பேசும்போது அவர்கள் நல்ல சமிக்ஞைகளையே வெளிப்படுத்துகின்றார்கள். என்போன்றவர்களின் உதவிகளையும் கோருகின்றார்கள்.

ஆனால் அவர்களுக்கு கட்சி ரீதியாக, எதிர்த்தரப்புக்கள் ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை அவர்கள் என்னிடத்தில் வெளிப்படுத்தமாட்டார்கள் அல்லவா? பொதுவாக பார்க்கையில் நம்பிக்கை கொள்ளக்கூடிய அளவில் அவர்களின் கருத்துக்கள் காணப்படுகின்றன.

கேள்வி:- தற்போதைய நிலையில் தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு தீர்வு கிடைக்க வேண்டுமானால் அது எவ்வாறு அமைய வேண்டும்?

பதில்:- இந்தியா மாகாண சபை முறைமை தொடர்பாக குறிப்பிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதை என்னால் கூறமுடியாது.

அப்படியிருக்கையில் மாகாணங்களுக்கு போதியளவு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். நிதி,பொலிஸ், காணி அதிகாரங்கள் பகிரப்பட்ட மாகாண சபை முறைமையானது அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பாகவே அமையும். இதன்மூலம் எம்மை நாமே நிருவகிக்கக்கூடிய சுதந்திரம் உருவாகும். அத்தகையதொரு நிலைமை முதலில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்கள். பௌத்த மதம் நீண்டகாலமாக முதன்மை ஸ்தானத்திலேயே உள்ளது. ஆகவே அவற்றை மறுத்து போராடுவதை விடுத்து எமக்குரியவற்றை பெற்று சமத்துவத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆகவே நாட்டை பிரிக்காது தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும்.

விடுதலை நோக்கிய போராட்டமும் பயணமும் ஓட்டப்பந்தயமல்ல. ஓட்டப்பந்தயமென்றால் ஒருவரை வீழ்த்தி மற்றவர் செல்லமுடியும். ஆகவே விடுதலை நோக்கிய போராட்டமும் பயணமும் ஒரு உதைபந்தாட்ட விளையாட்டைப் போன்றது.

இலக்கை நோக்கி வெவ்வேறு தளங்களில் நின்று உழைக்க வேண்டும். தலைவர்களுக்கிடையிலான ஒற்றுமை தற்போது எமக்கு கிடைக்கப்போவதில்லை. பிரபாகரனுக்குப் பின்னர் எல்லோருமே தலைவர்கள் என்று கருதுகின்றார்கள். இந்த மனநிலையில் மாற்றம் வேண்டும். அனைவரும் வெவ்வேறு விடயங்களை முன்னகர்த்திச் சென்று தீர்வு என்ற இலக்கை அடைய வேண்டும்.

கேள்வி:- தாயக மக்களுக்காக அடுத்த கட்ட உங்களின் நகர்வு என்ன?

பதில்:- எனக்கு தற்போது 83வயதாகின்றது. இறுதிக் காலத்தில் என்னுடைய மண்ணிற்கு வருகை தந்து மக்களுடன் மக்களாக இருந்து எனக்களிக்கப்பட்ட கடமைகளை செய்யும் எண்ணத்துடன் இருக்கின்றேன்.அதற்குரிய தருணங்கள் அமையும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் வருவதற்கு காத்திருக்கின்றேன்.

செய்தி மூலம்: வீரகேச­ரி
நேர்காணல்: ஆர்.ராம்
படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்

Exit mobile version