நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இந்நிலையில் தமக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டால் உரிய கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்குமாறும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கமான 1902 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி ஊடாக அனர்த்தம் தொடர்பில் அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
நிவாரண சேவைகள் உடனடியாக வழங்கப்படும். இழப்பீடும் உடனடியாக வழங்கவும் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இவர்களுக்கு துரிதமாக நிவாரண சேவையை வழங்குமாறும் பாதுகாப்பு இடங்களில் தங்க வைக்குமாறும் உள்நாட்டலுவல்கல் அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிதுள்ளது.
பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்கள் சேதங்கள் தொடர்பான தகவல்களை தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்குமாறும் இத்தகவல்களுக்கு அமைவாக துரிதமாக இழப்பீடு வழங்கப்படும் என்றும் உள்நாட்டலுவல்கல் அமைச்சர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.
சீரற்ற வானிலை – மீண்டும் சிவப்பு எச்சரிக்கை
கொழும்பிற்கு மேற்கு பக்கமாக 300 கிலோமீற்றர் தொலைவில் அரேபிய கடலில் தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சில மணித்தியாலயங்களில் சுழல்காற்றாக வீரியமடைந்து மேற்கு – வடமேற்கு பகுதியூடாக நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் மேற்கு மற்றும் தென் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெற்கு மற்றும் மேற்கு கரையோரங்களில் மணித்தியாலத்திற்கு 90 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதனால் மீனவர்களை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் உள்ள 66 பிரதேச செயலகப்பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த காப்புறுதி திட்டத்தின் கீழ் 10,000 ரூபாய் வீதம் வழங்குவதற்கு நடவடிக்ககை எடுக்கபட்டுள்ளதாக அனர்தத முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரை நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 4 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்ட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 1900 தற்காலிக கூடாரங்கள் கொழும்பு, காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை அனர்தங்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்ைக நடவடிக்ைககளும் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நீயூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
இதற்காக முப்படையினர் மற்றும் பொலீசாரின் உதவியும் பெற்றுக்ெகாள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.