ilakkiyainfo

தானும் நடிகர் சோபன் பாபுவும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவதாக ஜெயலலிதா அன்றே சொன்னாரே!!

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது; அக்குழந்தையின் தந்தை தெலுங்கு நடிகர் சோபன் பாபு என ஆண்டாண்டு காலமாக பேசப்பட்டு வரும் செய்தியை ஜெயலலிதாவின் உறவினர்களே தற்போது பகிரங்கப்படுத்தி உறுதி செய்து வருகின்றனர்.

இதே சோபன் பாபுவால்தான் தமிழக சட்டசபை வரலாறு காணாத வன்முறையை சந்தித்தது என்பதும் சரித்திரம். எம்ஜிஆரின் திரைப்படங்களில் ஆஸ்தான நாயகியாக வலம் வந்த ஜெயலலிதா மாற்றப்படுகிறார்.

1970களின் தொடக்கங்களில் மஞ்சுளா, லதா என ஹீரோயின்கள் எம்ஜிஆர் படங்களில் இடம்பிடிக்கிறார்கள். அப்போது ஜெயலலிதாவின் திரை உலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பேசப்படுகிறது.

1973-ல் தெலுங்கு படங்களில் தலைகாட்டுகிறார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது; ஜெயலலிதா ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார் என சேதிகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.

இந்த நிலையில் 1978-ல் தமிழகத்தில் ஜெயலலிதா புயல் மீண்டும் வீசுகிறது. குமுதம் வார இதழில் ஜெயலலிதா எழுதிய தொடரும் அவர் கொடுத்த விளம்பரமும் பெரும் பரபரப்பை கிளப்பின.

அதில்தான் தானும் நடிகர் சோபன் பாபுவும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவதாகவும் சோபன் பாபுவுக்கு திருமணமாகி இருப்பதால் தனி வீட்டில் ஒன்றாக இருப்பதாகவும் ‘கோயிங் ஸ்டெடி’ எனவும் பகிரங்க பேட்டி கொடுத்தார் ஜெயலலிதா.

அத்துடன் சோபன் பாபுவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களையும் ஜெயலலிதா வெளியிட்டிருந்தார்.

அதே காலகட்டத்தில் தெலுங்கு சினிமா இதழில் சோபன் பாபு- ஜெயலலிதா இணைந்து இருக்கும் படங்களும் வெளியாகின. பின்னர் 1981-ல் எம்ஜிஆருடன் ஜெயலலிதா மீண்டும் நெருக்கமாகி அரசியலுக்குள் நுழைந்தார்.

30-1512006539-ayalalithaasobhanbabu234

ஜெயலலிதாவின் நேர்காணல் குமுதம் இதழில்
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது; அக்குழந்தையின் தந்தை தெலுங்கு நடிகர் சோபன் பாபு என ஆண்டாண்டு காலமாக பேசப்பட்டு வரும் செய்தியை ஜெயலலிதாவின் உறவினர்களே தற்போது பகிரங்கப்படுத்தி உறுதி செய்து வருகின்றனர்.
எம்ஜிஆரின் திரைப்படங்களில் ஆஸ்தான நாயகியாக வலம் வந்த ஜெயலலிதா மாற்றப்படுகிறார். 1970களின் தொடக்கங்களில் மஞ்சுளா, லதா என ஹீரோயின்கள் எம்ஜிஆர் படங்களில் இடம்பிடிக்கிறார்கள்.அப்போது ஜெயலலிதாவின் திரை உலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பேசப்படுகிறது. 1973-ல் தெலுங்கு படங்களில் தலைகாட்டுகிறார் ஜெயலலிதா.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது; ஜெயலலிதா ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார் என சேதிகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.

இந்த நிலையில் 1978-ல் தமிழகத்தில் ஜெயலலிதா புயல் மீண்டும் வீசுகிறது. குமுதம் வார இதழில் ஜெயலலிதா எழுதிய தொடரும் அவர் கொடுத்த விளம்பரமும் பெரும் பரபரப்பை கிளப்பின.அதில்தான் தானும்  நடிகர் சோபன் பாபுவும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவதாகவும் சோபன் பாபுவுக்கு திருமணமாகி இருப்பதால் தனி வீட்டில் ஒன்றாக இருப்பதாகவும் ‘கோயிங் ஸ்டெடி’ எனவும் பகிரங்க பேட்டி கொடுத்தார் ஜெயலலிதா.அத்துடன் சோபன் பாபுவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களையும் ஜெயலலிதா வெளியிட்டிருந்தார்.

1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு – 1982ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ஜெயலலிதா!

அதற்கு முன்பு – அவர் சில வருட காலம் – ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு சினிமா உலகின் நெமபர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த – சோபன்பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்!

சோபன்பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது – ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்” – என்று பதிலளித்தார். அப்படியானால் – “ உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?”- என்று ‘குமுதம்’ நிருபர் கேட்டார்.

’’திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்” – என்றார் ஜெயலலிதா!

’குமுதம்’ நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன?

“ சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா?” இது கேள்வி!

ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார்! “ அது தெரிந்திருப்பதால்தான் – அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் – நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்”

கடைசியாக ஒரு கேள்வி – “ இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?” ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்க சொன்னார் “ கோயிங் ஸ்டெடி!” – குமுதம் இந்த பேட்டியை ‘கோயிங் ஸ்டெடி’ என்று தலைப்பிட்டு… சோபன்பாபு – ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும்போது – பால்கனியில் இருந்து ஜெயலலிதா உறசாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா’ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது.

ஜெயலலிதா – சோபன்பாபுவுடன் மனைவி – கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது – வீணை வாசித்தது – உணவு பரிமாறியது, நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தது.

Exit mobile version