ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, March 23
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    சுற்றுலா

    மாவீரர் தினத்தில் மக்களின் எதிர்ப்புணர்வை இலங்கை அரசிற்கு ஆதரவாக மடைமாற்றும் அரசியல் அபாயம்!

    AdminBy AdminNovember 30, 2017No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சுய நிர்ணய உரிமைக்கான மக்களின் ஆயுதப் போராட்டம் இலங்கை அரச பேரினவாதத்தாலும் அதன் பின்னணியில் செயற்பட்ட ஏகாதிபத்திய அதிகாரத்தாலும், இந்திய அரசின் துணையுடன் அழிக்கப்பட்ட ஏழு ஆண்டுகளின் பின்னர் பூவையும் புலிகளின் கொடியையும் விற்பனை செய்து ‘கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட’ புலம்பெயர் மாவீரர் தினம் வெற்று ஆசனங்களுடன் முடிவடைந்திருக்கிறது.

    விற்பனைப் பண்டங்களின் வரவு, எந்தவொரு போராட்ட அமைப்பும் தலைவைத்துக்கூடப் படுக்க முடியாத மண்டபமான எக்ஸெல் ஹோல் இன் வாடகையைச் செலுத்துவதற்கே போதுமானதாக இல்லாத அளவிற்கு பிரித்தானியாவில் அந்த நிகழ்வு தோல்வியடைந்திருக்கிறது.

    வடக்கில் மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டிருகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி ஜமீன் சிறீதரன் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தினத்திற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சிறீதரனின் அடியாட்கள் புடை சூழ கம்பங்கள், பந்தங்கள், பதாகைகளுடன் ‘ஓகோ வென’ நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் பெரும்பாலானவர்கள் தன்னிச்சையாகவே கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வின் வெற்றியை வாக்குகளாக அறுவடை செய்வதற்கு சிறீதரன் காத்திருப்பது வியப்பிற்குரியதல்ல.

    வடக்கில் நடைபெற்ற நிகழ்வில் மக்களின் பங்களிப்பு இலங்கை அரசின் பேரினவாத முகத்திரையைக் கிழித்தெறிந்திருக்கிறது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடையாளத்தின் கீழ் ஒளிந்திருக்கும் சிறீதரன் புரிந்துகொண்ருக்க நாளாகலாம்.

    இலங்கை அரசின் மீதான வெறுப்புணர்வும், மக்கள் போராட்டத்தின் அவசியம் குறித்த உணர்வுமே மக்களை மாவீரர் மைதானத்தை நோக்கி அழைத்து வந்திருக்கிறது.

    மக்களின் வெறுப்புணர்வு எழுச்சியாக மாற்றமடையாமல் தனது பாதுகாப்பிலுள்ள சிறீதரனை நோக்கியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கியும் மடை மாறுவதை இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை நிகழ்வை நடத்துவதற்கு மக்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் தெளிவுபடுத்துகிறது.

    ஆக, மாவீரர் தினத்தை சிறீதரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏன் இலங்கை அரசும் கூட தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

    இதன் மறுபுறத்தில் தமது ‘தேசிய’ வியாபாரத்தில் போதிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ளாத புலம்பெயர் ‘மாவீரர்’ நிறுவனங்களின் கடைக்கண் பார்வை வடக்கில் நடைபெற்ற மாவீரர் தினத்தை நோக்கித் திரும்பியுள்ளது.

    அந்த நிகழ்வை இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சியாகவும், பேரினவாதத்திற்கான குறியீடாகவும் மாற்றுவதற்குப் பதிலாக தமது கடந்த காலத் தவறுகளை நியாயயப்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர்.

    கடந்த கால அரசியலை விமர்சனத்திற்கும் சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவது தமது தனிப்பட்ட அடையாளத்தை அழித்து தமது சொந்த பிழைப்புவாத இருப்பை அழித்துவிடும் என்று அச்சப்படும் புலம்பெயர் குழுக்கள், தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து துயர்கொள்வது கிடையாது.

    நேர்மையும், அறமும் செத்துப்போன சமூகத்தை உருவாக்குவதில் பிரதான பாத்திரம் வகிக்கும் புலம்பெயர் குழுக்கள் தாம் சார்ந்த ஏகபோக நாடுகளின் அதிகாரவர்க்கங்களோடு இணைந்து இலங்கை அரசைப் பாதுகாக்க முயல்கின்றனர்.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய வாக்குக் கட்சிகளும், இலங்கைப் பேரினவாத அரசும் ஏகாதிபத்திய நாடுகளும் புலம்பெயர் குழுக்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன என்பதற்கும் நடந்துமுடிந்த மாவீரர் நிகழ்வு ஒரு குறியீடு.

    செய்தி முலம்:  http://inioru.com/heros-day-turned-as-pro-sri-lankan-government/

    Post Views: 17

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    பூமியின் அதிசயம்: உண்ணக்கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு

    October 24, 2021

    தஞ்சை பெரிய கோயில்: 10 சுவாரஸ்ய தகவல்கள்

    April 9, 2021

    வெந்நீர் ஊற்று… வானவில் ஆறு… உலகின் சில அதிசய இடங்கள்!

    March 18, 2021

    Leave A Reply Cancel Reply

    November 2017
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்ததால் காதல் கணவரை குத்திக்கொன்ற இளம்பெண்

    March 23, 2023

    பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஆதித்த கரிகாலன் ஆனது எப்படி? படக்குழு வெளியிட்ட வீடியோ

    March 23, 2023

    நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்

    March 23, 2023

    இன்றைய நாணயமாற்று விகிதம் – 23.03.2023

    March 23, 2023

    முத்த காட்சியா நோ… அழுது அடம் பிடித்த நடிகை ஷோபனா… கிளாசிக் ப்ளாஷ்பேக்

    March 23, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்ததால் காதல் கணவரை குத்திக்கொன்ற இளம்பெண்
    • பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஆதித்த கரிகாலன் ஆனது எப்படி? படக்குழு வெளியிட்ட வீடியோ
    • நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்
    • இன்றைய நாணயமாற்று விகிதம் – 23.03.2023
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version